வெளிநாடுகளில் அதிகரிக்கும் கஸ்டமைஸ்ட் ராயல் என்பீல்டு பைக்குகள்!! இது அர்ஜெண்டினாவை சேர்ந்தது...

ராயல் என்பீல்டு பைக்குகள் இந்தியாவில் பல தரப்பட்ட மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களை கவர்ந்துள்ளன. இதற்கு அவற்றின் மலிவான விலையும் ஒரு காரணம் தான் என்றாலும், அதேநேரம் அவற்றின் எளிமையான கட்டமைப்பிற்கும் ரசிகர்கள் உள்ளனர்.

வெளிநாடுகளில் அதிகரிக்கும் கஸ்டமைஸ்ட் ராயல் என்பீல்டு பைக்குகள்!! இது அர்ஜெண்டினாவை சேர்ந்தது...

இதனால் ராயல் என்பீல்டு பைக்குகளை கஸ்டமைஸ்ட் செய்வது எளிமையானதாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் கஸ்டமைஸ்ட் செய்வதற்கான பாகங்கள் எளிதாக கிடைப்பதால் ராயல் என்பீல்டு பைக்குகள் அதிகமாகவே கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் அதிகரிக்கும் கஸ்டமைஸ்ட் ராயல் என்பீல்டு பைக்குகள்!! இது அர்ஜெண்டினாவை சேர்ந்தது...

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உரிமையாளர்கள் தங்களது ராயல் என்பீல்டு பைக்கை தங்களது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் கஸ்டமைஸ்ட் செய்து கொண்டுள்ளதையும் பார்த்திருக்கின்றோம்.

வெளிநாடுகளில் அதிகரிக்கும் கஸ்டமைஸ்ட் ராயல் என்பீல்டு பைக்குகள்!! இது அர்ஜெண்டினாவை சேர்ந்தது...

இந்த வகையில் அர்ஜெண்டினாவில் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். ஸ்க்ரம்ப்ளர் தோற்றத்தை கொண்ட இந்த ராயல் என்பீல்டு பைக் மேலும் அந்த தோற்றத்திற்கு ஏற்றவாறு பார்ப்பதற்கு முரட்டுத்தனமானதாக மாற்றப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் அதிகரிக்கும் கஸ்டமைஸ்ட் ராயல் என்பீல்டு பைக்குகள்!! இது அர்ஜெண்டினாவை சேர்ந்தது...

எஸ்டிஜி ட்ராக்கர் என்ற கஸ்டம் கேரேஜ் மூலமாக மாடிஃபை செய்யப்பட்டுள்ள இந்த இண்டர்செப்டர் 650-இன் படங்களில், பைக்கின் முன் மட்கார்ட்டின் அளவு குறைக்கப்பட்டுள்ளதையும், ஹெட்லைட் மெஷ் க்ரில் ஒன்றினால் மூடப்பட்டு உள்ளதையும் பார்க்க முடிகிறது.

வெளிநாடுகளில் அதிகரிக்கும் கஸ்டமைஸ்ட் ராயல் என்பீல்டு பைக்குகள்!! இது அர்ஜெண்டினாவை சேர்ந்தது...

வெளிநாடுகளில் கஸ்டமைஸ்ட் செய்யப்படும் ராயல் என்பீல்டு பைக்குகளின் ஹெட்லைட் அமைப்பில் இவ்வாறான க்ரில் வழங்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இவற்றுடன் புதிய பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகளை பெற்றுள்ள இந்த பைக்கில் ஓட்டுனரின் கை விரல்கள் பாதுகாப்பான் மிகவும் மெல்லியதாக வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் அதிகரிக்கும் கஸ்டமைஸ்ட் ராயல் என்பீல்டு பைக்குகள்!! இது அர்ஜெண்டினாவை சேர்ந்தது...

பெட்ரோல் டேங்க் மூன்று விதமான நிறங்களில் காட்சியளிக்கிறது. பக்கவாட்டு பேனல்கள், என்ஜின் அமைப்பு கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன. கஸ்டமைஸ்ட் நிறுவனமான எஸ்டிஜி-யின் லோகோ, ‘ஸ்க்ரம்ப்ளர் 650' என பைக்கின் பெயர் உடன் பக்கவாட்டு பேனலில் பொறிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் அதிகரிக்கும் கஸ்டமைஸ்ட் ராயல் என்பீல்டு பைக்குகள்!! இது அர்ஜெண்டினாவை சேர்ந்தது...

இருக்கை ஒற்றை துண்டாக, பழுப்பு நிற லெதரால் மூடப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் வட்ட வடிவிலான எல்இடி டெயில்லைட், ஃபெண்டர் உள்ளிட்டவை அளவில் சிறியதாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் எக்ஸாஸ்ட் குழாயின் பொசிஷனும் மாற்றப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் அதிகரிக்கும் கஸ்டமைஸ்ட் ராயல் என்பீல்டு பைக்குகள்!! இது அர்ஜெண்டினாவை சேர்ந்தது...

மோட்டார்சைக்கிளின் வலதுபுறத்தில், சற்று மேலே எக்ஸாஸ்ட் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இதுவே இந்த ஸ்க்ரம்ளர் பைக்கின் கவர்ச்சிக்கு மிக காரணமாக விளங்குகிறது. என்ஜினின் சூட்டில் இருந்து ஓட்டுனரின் கால்களை பாதுக்காக்க கம்பிகளும் புதியதாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் அதிகரிக்கும் கஸ்டமைஸ்ட் ராயல் என்பீல்டு பைக்குகள்!! இது அர்ஜெண்டினாவை சேர்ந்தது...

அதற்கு கீழே என்ஜின் பாதையில் தட்டுப்படுவதை தவிர்க்க உலோக தட்டு ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை காட்டிலும் பைக்கின் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு வயர்-ஸ்போக்டு சக்கரங்கள் மற்றும் க்னாபி டயர்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. எக்ஸாஸ்ட் அமைப்பை தவிர்த்து பைக்கின் 648சிசி, ஏர்-கூல்டு, இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது.

Most Read Articles

English summary
Royal Enfield Scrambler 650 From Argentina. Read All Details In Tamil.
Story first published: Tuesday, June 8, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X