ஒத்த விஷயத்துக்காக இணைந்த யமஹா, சுசுகி, ஹோண்டா, கவாஸாகி... என்ன அது தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!!

இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனங்களான யமஹா, சுசுகி, ஹோண்டா, கவாஸாகி ஆகிய நான்கும் ஒற்றை வசதியை உருவாக்குவதற்காக இணைந்துள்ளன. அது என்ன வசதி என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

ஒத்த விஷயத்துக்காக இணைந்த யமஹா, சுசுகி, ஹோண்டா, கவாஸாகி... என்ன அது தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!!

காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றை காரணம் காட்டி பல்வேறு நடவடிக்கைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை பெருமளவில் குறைத்து மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒத்த விஷயத்துக்காக இணைந்த யமஹா, சுசுகி, ஹோண்டா, கவாஸாகி... என்ன அது தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!!

இதற்காக மானியம், வரி தள்ளுபடி, பதிவு கட்டணம் ரத்து உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், மக்கள் மத்தியில் மின் வாகன பயன்பாட்டிற்கு மாறுவதுகுறித்து லேசான தயக்கம் நீடிப்பதை காண முடிகின்றது. தற்போது வரை மின் வாகனங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பெருமளவில் பயன்பாட்டிற்கு வராததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

ஒத்த விஷயத்துக்காக இணைந்த யமஹா, சுசுகி, ஹோண்டா, கவாஸாகி... என்ன அது தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!!

எனவேதான் மக்கள் மின்வாகனத்தை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையை போக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. முக்கிய பகுதிகளில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் மற்றும் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வழங்கும் நிலையங்கள் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றன.

ஒத்த விஷயத்துக்காக இணைந்த யமஹா, சுசுகி, ஹோண்டா, கவாஸாகி... என்ன அது தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!!

இந்த சிறப்பு பணியில் சில வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், அண்மையில் எம்ஜி நிறுவனம் டாடா மோட்டார்ஸுடன் கூட்டணி வைத்து அதி-வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய சார்ஜிங் மையத்தை சென்னையில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.

ஒத்த விஷயத்துக்காக இணைந்த யமஹா, சுசுகி, ஹோண்டா, கவாஸாகி... என்ன அது தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!!

இந்நிலையில், பிர இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹோண்டா, யமஹா, சுசுகி மற்றும் கவாஸாகி ஆகிய நான்கு நிறுவனங்களும் இணைத்து இருசக்கர வாகனங்களுக்கான சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வழங்கும் நிலையத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒத்த விஷயத்துக்காக இணைந்த யமஹா, சுசுகி, ஹோண்டா, கவாஸாகி... என்ன அது தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!!

இந்த நிலையம் மிக மலிவான மற்றும் எளிதில் நுகர கூடிய வகையில் இருக்கும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வழங்கும் நிலையங்களை உருவாக்கும் பணியில் களமிறங்கியிருக்கும் நான்கு நிறுவனங்களுமே ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒத்த விஷயத்துக்காக இணைந்த யமஹா, சுசுகி, ஹோண்டா, கவாஸாகி... என்ன அது தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!!

இவர்கள் அனைவரும் இணைந்தே அதிநவீன தொழில்நுட்ப வசதிக் கொண்ட மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரியை வழங்கும் நிலையங்களை உருவாக்க இருக்கின்றன. இந்த நிலையங்களை பேட்டரி ஸ்வாப் செய்யக்கூடிய வசதிக் கொண்ட மின்சார இருசக்கர வாகனங்களால் மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஒத்த விஷயத்துக்காக இணைந்த யமஹா, சுசுகி, ஹோண்டா, கவாஸாகி... என்ன அது தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!!

ஸ்வாப்பபிள் வசதி என்பது பேட்டரியை தனியாக பிரித்தெடுக்கும் வசதியாகும். இந்த வசதியை மின் வாகனத்திற்கு வழங்குவதன் வாயிலாக, பேட்டரியை தனியாக கழட்டி எடுத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, இதுபோன்ற ஸ்வாப்பபிள் பேட்டரி நிலையங்களில் சார்ஜ் தீர்ந்த பேட்டரியை ஒப்படைத்துவிட்டு, முழுமையான சார்ஜ் கொண்ட பேட்டரியை மாற்றிக் கொள்ள முடியும்.

ஒத்த விஷயத்துக்காக இணைந்த யமஹா, சுசுகி, ஹோண்டா, கவாஸாகி... என்ன அது தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!!

எனவேதான் தற்போது விற்பனைக்கு வரும் பெரும்பாலான மின்சார இருசக்கர வாகனங்களில் பேட்டரியை தனியாக பிரித்தெடுக்கும் வசதிக் கொடுக்கப்படுகின்றது. இத்தகைய வசதிக் கொண்ட மின் வாகனங்களுக்கு பயன்படுகின்ற வகையிலேயே புதிய ஸ்வாப்பபிள் பேட்டரி மையங்களை உருவாக்க நான்கு ஜாம்பவான் நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன.

ஒத்த விஷயத்துக்காக இணைந்த யமஹா, சுசுகி, ஹோண்டா, கவாஸாகி... என்ன அது தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!!

மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த மையங்களை நிறுவனங்கள் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றன. இதனை உலகளவில் நிறுவனங்கள் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி, முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட முன்மாதிரி மாடல் மின்சார வாகனங்களை விரைவில் விற்பனைக் கொண்டு வருவதற்கான முயற்சியிலும் அந்தந்த நிறுவனங்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

ஒத்த விஷயத்துக்காக இணைந்த யமஹா, சுசுகி, ஹோண்டா, கவாஸாகி... என்ன அது தெரிஞ்சா நிச்சயம் மிரண்டுருவீங்க!!

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்தே ஹோண்டா, சிசுகி, யமஹா மற்றும் கவாஸாகி நிறுவனங்கள் கூட்டணியின் அடிப்படையில் ஸ்வாப்பபிள் பேட்டரியை மையங்களை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Yamaha, Suzuki, Honda, Kawasaki All 4 Japanese Motorcycle Firms Teamed Up For Develop Swappable Battery Tech. Read In Tamil.
Story first published: Monday, March 29, 2021, 17:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X