ஒரு முறை சார்ஜ் பண்ணா 70கிமீ போகலாம்... பவர்ஃபுல் இ-மிதிவண்டி இந்தியாவில் அறிமுகம்...
கோ-ஜீரோ ஸ்கெல்லிங் ப்ரோ இ-சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த இ-சைக்கிள் குறித்த கூடுதல் சிறப்பு தகவல்களைக் கீழே காணலாம்.

இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கோ-ஜீரோ மொபிலிட்டி (GoZero Mobility) நிறுவனம், அதன் பிரீமியம் வசதிக் கொண்ட அதி-திறன் இ-சைக்கிள் ஒன்றை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்கெல்லிங் ப்ரோ எனும் இ-சைக்கிளையே நிறுவனம் இந்தியாவில் களமிறக்கியிருக்கின்றது.

இந்தியாவில் மின்சார வாகனங்கள் அறிமுகம் அதிகரித்துக் காணப்படுகின்றது. பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில், இந்தியர்களைக் கவரும் வகையில் புதிய அதி-திறன் வாய்ந்த மின்சார மிதிவண்டியை கோ-ஜீரோ விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

ஆஃப் மற்றும் நகர்புற சாலை என இருவிதமான சாலைகளிலும் இயங்கும் வசதிகளுடன் இந்த மின்சார மிதிவண்டி அறிமுகமாகியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இன்னும் பல சிறப்பு வதிகளை இது பெற்றிருக்கின்றது. எனவேதான் சற்று அதிக கூடுதல் விலைக் கொண்ட இ-சைக்கிள் இருக்கின்றது.

இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 34,999 என்ற விலை ஸ்கெல்லிங் ப்ரோ இ-சைக்கிளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வழிகளிலும் இ-சைக்கிளின் விற்பனைத் தொடங்கியுள்ளது. ஸ்கெல்லிங் ப்ரோ இ-சைக்கிளில் 400Wh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது அட்வான்ஸ்ட் எனர்டிரைவ் தொழில்நுட்பம் கொண்டது. சைக்கிளின் உறுதித் தன்மைக்காக காம்போசைட் உலோக சட்டங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், அதிக சிறப்பான சஸ்பென்ஷன் மிதிவண்டியின் முன் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்கெல்லிங் ப்ரோ மிதிவண்டியில் 26x2.35 இன்ச் அளவிலான டயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது மிக சிறந்த கிரிப்பான பயணத்தை வழங்க உதவும். இத்துடன், மிக சிறந்த மற்றும் பாதுகாப்பான நிறுத்த வசதிக்காக வட்டுத்தட்டு (disc) பிரேக்குகள் இரு வீல்களிலும் பொருத்தப்பட்டிருக்கின்றன.

மேலும், கோ-ஜீரோ ஸ்கெல்லிங் ப்ரோ இ-சைக்கிளில் 4.0 அளவிலான எல்சிடி திரை வழங்கப்பட்டுள்ளது. இது பேட்டரி சார்ஜ் அளவு, ஸ்பீடு மற்றும் பிற முக்கிய தகவல்களை வழங்க ஏதுவாக இந்த திரை வழங்கப்பட்டிருக்கின்றது.

இ-சைக்கிள் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ எனும் வேகத்தில் பயணிக்கக் கூடியது ஆகும். இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இ-சைக்கிளை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்களே போதும் என தயாரிப்பு நிறுவனம் கூறுகின்றது.

முழுக்க நகரம் மற்றும் தினசரி பயன்பாட்டாளர்களை மையமாகக் கொண்டே ஸ்கெல்லிங் ப்ரோ இ-சைக்கிளை இந்தியாவில் கோ-ஜீரோ களமிறக்கியிருக்கின்றது. இளம் தலைமுறையினர்களைக் கவரக்கூடிய ஸ்டைல் மற்றும் வசதிகளை இதில் மிக தாரளமாக நிறுவனம் வழங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








