எங்கேயும் தேடி அலைய வேண்டாம்! டிவி, ஃப்ரிட்ஜ் போல அனைத்து பிராண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் ஒரே ஷோரூமில்!

அனைத்து பிராண்ட் மின்சார வாகனங்களையும் விற்பனைச் செய்வதற்காக பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று புதிய பெயரில் விற்பனையகம் ஒன்றை திறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஏற்பட இருக்கும் நன்மைகள் பற்றிய தகவலை இப்பதிவில் காணலாம், வாங்க.

எங்கேயும் தேடி அலைய வேண்டாம்! டிவி, ஃப்ரிட்ஜ் போல அனைத்து பிராண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் ஒரே ஷோரூமில்!

அனைத்து பிராண்ட் மின்சார வாகனங்களையும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்யும் வகையில் பிரபல நிறுவனம் ஒன்று மல்டி பிராண்ட் மின் வாகன விற்பனையகத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. பிரபல கிரீவ்ஸ் காட்டன் (Greaves Cotton) நிறுவனமே பன்முக பிராண்டு மின்வாகன தயாரிப்புகளை ஒரே இடத்தில் விற்பனைக்கு வழங்க இருக்கும் நிறுவனம் ஆகும்.

எங்கேயும் தேடி அலைய வேண்டாம்! டிவி, ஃப்ரிட்ஜ் போல அனைத்து பிராண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் ஒரே ஷோரூமில்!

கிரீவ்ஸ் காட்டன் நாட்டின் முன்னணி மற்றும் பன்முக பொறியியல் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் ஆகும். இது மின் வாகன உற்பத்தியிலும் கூட ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே அனைத்து பிராண்ட் மின் வாகன விற்பனையிலும் நிறுவனம் களமிறங்கும் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளது.

எங்கேயும் தேடி அலைய வேண்டாம்! டிவி, ஃப்ரிட்ஜ் போல அனைத்து பிராண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் ஒரே ஷோரூமில்!

ஆட்டோ இவிமார்ட் (AutoEVmart) எனும் பெயரிலேயே நிறுவனம் பன்முக பிராண்ட் மின்சார வாகனங்களை விற்பனைச் செய்யும் மையங்களைத் திறக்க இருக்கின்றது. இதன் வாயிலாக அனைத்து பிராண்ட் மின்சார வாகனங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நிலை உருவாக இருக்கின்றது. குறிப்பாக, இந்த ஷோரூம் வாயிலாக நிறுவனம் இரண்டு மற்றும் மூன்று சக்கர மின் வாகன விற்பனையில் மட்டுமே ஈடுபட இருக்கின்றது.

எங்கேயும் தேடி அலைய வேண்டாம்! டிவி, ஃப்ரிட்ஜ் போல அனைத்து பிராண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் ஒரே ஷோரூமில்!

இதுமட்டுமின்றி பல நிறுவனங்களின் தயாரிப்புகள் ஒரே இடத்தில் காட்சியளிக்க இருப்பதால் ஒவ்வொரு பிராண்ட் வாகனங்கள் பற்றியும் அறிய தனி தனியாக வெவ்வேறு இடங்களுக்கு அலைந்து திரியும் நிலை தவிர்க்கப்பட இருக்கின்றது. அதுமட்டுமின்றி பிறர் கூறி கம்பேர் செய்வதைவிட நாமே களத்தில் இருந்து மதிப்பீடு செய்து நமக்கு தேவையான பிராண்டின் எலெக்ட்ரிக் வாகனத்தை நம்மால் வாங்கிக் கொள்ள முடியும்.

எங்கேயும் தேடி அலைய வேண்டாம்! டிவி, ஃப்ரிட்ஜ் போல அனைத்து பிராண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் ஒரே ஷோரூமில்!

ஆகையால், கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் இந்த ஷோரூம்கள் மிகவும் அதிக பயன்பாட்டை வழங்கக் கூடியதாக அமைய இருக்கின்றது. இத்துடன், மின் வாகனங்களுக்கான பாகங்கள் விற்பனையிலும் நிறுவனம் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

எங்கேயும் தேடி அலைய வேண்டாம்! டிவி, ஃப்ரிட்ஜ் போல அனைத்து பிராண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் ஒரே ஷோரூமில்!

ஆகையால், மின் வாகனங்களுக்கான பேட்டரி மற்றும் பிற முக்கிய பாகங்களும் ஆட்டோ இவிமார்ட் நிலையங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், ரைடர்களுக்கான முக்கிய அணிகலன்களையும் நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.

எங்கேயும் தேடி அலைய வேண்டாம்! டிவி, ஃப்ரிட்ஜ் போல அனைத்து பிராண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் ஒரே ஷோரூமில்!

எனவே பன்முக மின் வாகனங்கள் மட்டுமின்றி இன்னும் பல சிறப்பு வசதிகளையும் க்ரீவ்ஸ் காட்டனின் புதிய ஷோரூம்கள் வாயிலாக நம்மால் பெற முடியும் என தெரிகின்றது. மின் வாகன சந்தையில் புதிய விதமான அணுகுமுறையை பதிவு செய்யும் நோக்கில் நிறுவனம் இத்தகைய செயலில் களமிறங்கியிருக்கின்றது.

எங்கேயும் தேடி அலைய வேண்டாம்! டிவி, ஃப்ரிட்ஜ் போல அனைத்து பிராண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் ஒரே ஷோரூமில்!

நிறுவனம் ஆம்பியர் எனும் நிறுவனத்தின் பெயரில் பன்முக மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவையும் அதன் ஷோரூம்களில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரே இடத்தில் அனைத்து மின் வாகன தயாரிப்புகளும் கிடைக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் புதிய ஷோரூமுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எங்கேயும் தேடி அலைய வேண்டாம்! டிவி, ஃப்ரிட்ஜ் போல அனைத்து பிராண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் ஒரே ஷோரூமில்!

இந்தியாவில் சமீப காலமாக மின் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது அதேவேலையில், நிறுவனங்கள் முக்கிய மாநிலங்கள் மற்றும் நகரங்களை மையப்படுத்தி மட்டுமே விற்பனையகங்களை திறந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் புதிய ஷோரூம்கள் மக்கள் மத்தியில் பயன்பாட்டிற்கு வருவது மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

க்ரீவ்ஸ் காட்டன் ஆட்டோ இவிமார்ட் மின் வாகன விற்பனையகங்களில் ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர், டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் போன்ற முன்னணி நிறுவனங்களின் மின் வாகன தயாரிப்புகளும் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஓலா நிறுவனம் விற்பனையாளர்கள் வாயிலாக மின் வாகன பயன்பாட்டில் ஈடுபடப்போவதில்லை என அறிவித்திருக்கின்றது. ஆகையால், இந்த ஷோரூமில் ஓலாவின் மின் வாகனங்கள் காட்சியளிக்குமா என உறுதியாகக் கூற முடியவில்லை. ஆகையால், எந்தெந்த நிறுவனங்களின் மின் வாகனங்கள் இந்த ஷோரூமில் காட்சியளிக்கி இருக்கின்றன என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

English summary
Greaves cotton launches multi brand ev retail platform under autoevmart brand name
Story first published: Saturday, September 11, 2021, 11:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X