ஹார்லி-டேவிட்சனின் புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்!! லைவ்வயர் ஒன் என்ற பெயரில் அறிமுகம்!

அமெரிக்க மோட்டார்சைக்கிள் பிராண்டான ஹார்லி-டேவிட்சன் அதன் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக லைவ் வயர் மாடலை கடந்த 2018ல் அறிமுகப்படுத்தியது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

ஹார்லி-டேவிட்சனின் புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்!! லைவ்வயர் ஒன் என்ற பெயரில் அறிமுகம்!

அதன்பின் லைவ் வயர் என்பது ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கான துணை பிராண்டாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதாவது எதிர்காலத்தில் இந்த அமெரிக்க நிறுவனம் தயாரிக்கவுள்ள எலக்ட்ரிக் பைக்குகள் லைவ் வயர் பிராண்டில் தான் வெளிவரவுள்ளன.

ஹார்லி-டேவிட்சனின் புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்!! லைவ்வயர் ஒன் என்ற பெயரில் அறிமுகம்!

இந்த எலக்ட்ரிக் பிராண்டில் வெளிவரவுள்ள முதல் எலக்ட்ரிக் பைக் ஜூலை 8ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முன்னதாக கடந்த மே மாதத்தில் செய்திகள் வெளியாகின. அதன்படி தற்போது இந்த எலக்ட்ரிக் பைக் பிராண்டில் இருந்து முதல் மாடலாக லைவ் வயர் ஒன் (LiveWire ONE) என்ற பேட்டரி-பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹார்லி-டேவிட்சனின் புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்!! லைவ்வயர் ஒன் என்ற பெயரில் அறிமுகம்!

அமெரிக்க சந்தையில் விற்பனையில் உள்ள வைவ் வயர் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை (29,799 அமெரிக்க டாலர்கள் = ரூ.22.10 லட்சம்) காட்டிலும் புதிய லைவ் வயர் ஒன் பைக் சற்று மலிவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இதன் விலை 21,999 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹார்லி-டேவிட்சனின் புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்!! லைவ்வயர் ஒன் என்ற பெயரில் அறிமுகம்!

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.16.41 லட்சமாகும். பெயரில் கிட்டத்தட்ட இவை இரண்டும் ஒரு மாதிரியாக இருப்பினும், பாகங்களின் குறியீட்டு பெயர்களில் இரண்டும் வேறுபடுகின்றன. மற்றப்படி லைவ் வயர் ஒன் மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை.

ஹார்லி-டேவிட்சனின் புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்!! லைவ்வயர் ஒன் என்ற பெயரில் அறிமுகம்!

ஆனால் சமீபத்தில் வெளியான வாகன அடையாள எண் உள்பட இந்த எலக்ட்ரிக் பைக்கை பற்றிய சில விபரங்கள், 101 பிஎச்பி என்ற அதிகப்பட்ச இயக்க ஆற்றலுடன் லைவ்வயர் ஒன் பைக் வெளிவரவுள்ளதாக குறிப்பிட்டு இருந்தன. தற்போதைய லைவ்வயர் மாடலுடன் ஒப்பிடுகையில் இது கிட்டத்தட்ட 4 பிஎச்பி குறைவாகும்.

ஹார்லி-டேவிட்சனின் புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்!! லைவ்வயர் ஒன் என்ற பெயரில் அறிமுகம்!

இருப்பினும் எங்களுக்கு தெரிந்தவரையில் இரண்டிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரிக் மோட்டாரே வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முந்தைய லைவ்வயரில் கிடைக்கும் தொடர் இயக்க ஆற்றலான 70 பிஎச்பி தான் லைவ்வயர் ஒன்-னிலும் கிடைக்கும் என தெரிகிறது.

ஹார்லி-டேவிட்சனின் புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்!! லைவ்வயர் ஒன் என்ற பெயரில் அறிமுகம்!

லைவ்வயர் ஒன் எலக்ட்ரிக் பைக்கின் ரேஞ்ச் 146 மைல்கள் (235கிமீ) என ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி-மின்சாரம் (DC) சார்ஜரை பயன்படுத்தி லைவ்வயர் ஒன் மோட்டார்சைக்கிளை 0-வில் இருந்து 100% சார்ஜ் செய்ய 60 நிமிடங்களும், அதாவது 1 மணிநேரமும், 80% சார்ஜ் செய்ய 40 வினாடிகளும் தேவைப்படுமாம்.

ஹார்லி-டேவிட்சனின் புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்!! லைவ்வயர் ஒன் என்ற பெயரில் அறிமுகம்!

அதுவே சில சாதகமான சூழ்நிலைகளில் இதன் பேட்டரியை 30 நிமிடங்களில், அதாவது 1/2 மணிநேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் நிரப்பிவிடலாம் எனவும் கூறப்படுகிறது. இவ்வாறான தொழிற்நுட்ப அம்சங்களில் தான் லைவ்வயர் ஒன், வழக்கமான லைவ்வயரில் இருந்து வேறுபடுகிறதே தவிர்த்து ஸ்டைலில் இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளன.

ஹார்லி-டேவிட்சனின் புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்!! லைவ்வயர் ஒன் என்ற பெயரில் அறிமுகம்!

இதனால் லைவ்வயரின் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 6-அச்சு ஐஎம்யு உள்ளிட்டவை இந்த புதிய எலக்ட்ரிக் பைக்கிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018ல் அறிமுகப்படுத்தப்பட்ட லைவ்வயர் எலக்ட்ரிக் பைக்கில் 15.5kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Harley-Davidson introduced LiveWire ONE electric motorcycle. Find here all details in Tamil.
Story first published: Friday, July 9, 2021, 23:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X