ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கை முதல் ஆளாக டெலிவிரி பெற்ற பெண்!! யார்னு தெரியுமா இவங்க?

ஹார்லி-டேவிட்சனின் முதல் அட்வென்ச்சர் பைக்கான பான் அமெரிக்காவின் முதல் இந்திய வாடிக்கையாளர் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கை முதல் ஆளாக டெலிவிரி பெற்ற பெண்!! யார்னு தெரியுமா இவங்க?

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா மோட்டார்சைக்கிள் முதலாவதாக அமெரிக்க சந்தையில் இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்த பைக் விற்பனைக்கு அறிமுகமானது.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கை முதல் ஆளாக டெலிவிரி பெற்ற பெண்!! யார்னு தெரியுமா இவங்க?

அதற்கு முன்னதாகவே பான் அமெரிக்கா பைக்குகள் சில இந்திய டீலர்ஷிப் மையங்களை வந்தடைய துவங்கிவிட்டதாக நமது செய்திதளத்தில் கூட தெரிவித்து இருந்தோம். இந்த நிலையில் இந்தியாவில் முதல் ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கை முதல் ஆளாக டெலிவிரி பெற்ற பெண்!! யார்னு தெரியுமா இவங்க?

இந்த முதல் வாடிக்கையாளர் பைக் ஆர்வலரும், பெண்களின் ஹார்லி க்ரூப்பின் துணை இயக்குனருமான அனுஸ்ரியா குலாத்தி ஆவார். இந்தியாவில் இவ்வாறு ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை விற்பனை செய்வதை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தான் கவனித்து வருகிறது.

இந்திய சந்தையில் இருந்து வணிகத்தை நிறுத்தி கொள்ளவுள்ளதாக அறிவித்து, தொழிற்சாலையை மூடிய ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் பைக்குகளை விற்பனை மட்டுமின்றி அவற்றிற்கான பாகங்களை விற்பனை செய்தல் மற்றும் பராமரிப்பு சேவைகளை வழங்குதல் உள்ளிட்டவற்றையும் ஹீரோ நிறுவனம் தான் கவனித்து கொள்கிறது.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கை முதல் ஆளாக டெலிவிரி பெற்ற பெண்!! யார்னு தெரியுமா இவங்க?

இதற்காக ஹீரோ நிறுவனம் புதியதாக திறந்துள்ள 12 பிரத்யேக ஹார்லி டீலர்ஷிப்களில் ஒன்றில் இருந்து தான் இந்த முதல் பான் அமெரிக்கா 1250 பைக் டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. ஹார்லி-டேவிட்சனின் புதிய பான் அமெரிக்கா 1250 பைக்கின் ஸ்டாண்டர்ட் மாடலின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.16.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கை முதல் ஆளாக டெலிவிரி பெற்ற பெண்!! யார்னு தெரியுமா இவங்க?

அதேநேரம் இந்த அட்வென்ச்சர் பைக்கின் ஸ்பெஷல் வேரியண்ட்டின் விலை ரூ.19.19 லட்சமாகும். இவை இரண்டிற்கும் க்ரே மெட்டாலிக், விவிட் ப்ளாக், பாறையின் க்ரே, ஆரஞ்ச் உள்பட ஏகப்பட்ட நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 2,265 மிமீ நீளத்தில் உள்ள இந்த அட்வென்ச்சர் பைக்கின் ஓட்டுனர் இருக்கையின் உயரம் தரையில் இருந்து 789மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கை முதல் ஆளாக டெலிவிரி பெற்ற பெண்!! யார்னு தெரியுமா இவங்க?

பான் அமெரிக்கா 1250 பைக்கின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 175மிமீ ஆகும். சக்கரங்களுக்கு இடையேயான தூரத்தையே 1,580மிமீ நீளத்தில் கொண்டுள்ள இந்த முதல் ஹார்லி-டேவிட்சனின் அட்வென்ச்சர் பைக்கின் எடை 228 கிலோ ஆகும். அதிகப்பட்சமாக 21.2 லிட்டர் வரையிலான பெட்ரோலை இதன் டேங்க் ஏற்று கொள்ளும்.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கை முதல் ஆளாக டெலிவிரி பெற்ற பெண்!! யார்னு தெரியுமா இவங்க?

எளிதில் வளையாத, அதிக வலிமை கொண்ட இரும்பு ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் தயாரிக்கப்படுகின்ற பான் அமெரிக்கா 1250 அட்வென்ச்சர் பைக்கில் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் பெரிய அளவில் எதிர்காற்று தடுப்பு கண்ணாடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கை முதல் ஆளாக டெலிவிரி பெற்ற பெண்!! யார்னு தெரியுமா இவங்க?

பான் அமெரிக்காவின் ஸ்பெஷல் வேரியண்ட்டில் கூடுதலாக ஹெட்லேம்பிற்கு மேற்பக்கத்தில் அடாப்டிவ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இது பைக்கின் கோணத்தை பொறுத்து எல்இடி ஹெட்லேம்பின் ஒளியினை அட்ஜெஸ்ட் செய்யும். முன்பக்க நீண்ட எதிர்காற்று-தடுப்பு கண்ணாடியை 3 விதமாக மாற்றியமைத்து கொள்ளலாம்.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கை முதல் ஆளாக டெலிவிரி பெற்ற பெண்!! யார்னு தெரியுமா இவங்க?

பான் அமெரிக்கா 1250 பைக்கில் யூரோ-5க்கு இணக்கமான புதிய மேக்ஸ் வி-இரட்டை 1250 என்ஜினை ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் வழங்குகிறது. அதிகப்பட்சமாக 9000 ஆர்பிஎம்-இல் 150 பிஎச்பி மற்றும் 6,750 ஆர்பிஎம்-இல் 127 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கை முதல் ஆளாக டெலிவிரி பெற்ற பெண்!! யார்னு தெரியுமா இவங்க?

அத்துடன் வெவ்வேறான வால்வு டைமிங், இண்டர் பேலன்ஸர் & ஸ்லிப்பர் க்ளட்ச் போன்றவையும் இதன் என்ஜின் அமைப்பில் வழங்கப்படுகின்றன. சஸ்பென்ஷனுக்கு 47மிமீ ஷோவா யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் ஷோவா மோனோஷாக்கை பெறும் இந்த அட்வென்ச்சர் பைக்கில் ப்ரேக்கிங் பணிக்கு டிஸ்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா பைக்கை முதல் ஆளாக டெலிவிரி பெற்ற பெண்!! யார்னு தெரியுமா இவங்க?

ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 பைக்கிற்கு இந்தியாவில் போட்டி மாடல்களாக ஹோண்டா சிஆர்எஃப் 1100 எல் ஆப்பிரிக்கா இரட்டை, டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 மற்றும் பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் உள்ளிட்டவை உள்ளன. இவற்றின் விலைகள் பான் அமெரிக்காவை காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் வரையில் அதிகமாக உள்ளன.

Most Read Articles

English summary
Harley Davidson Pan America 1250 First Owner In India Takes Delivery.
Story first published: Thursday, August 12, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X