புதிய ஹார்லி-டேவிட்சன் பைக்கின் உலக வெளியீடு தேதி அறிவிப்பு!! எந்த மாதிரியாக இருக்கும்? ஒரே யோசனையா இருக்கே!

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் விரைவில் அதன் புதிய மோட்டார்சைக்கிளை உலகளவில் வெளியீடு செய்ய தயாராகி வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய ஹார்லி-டேவிட்சன் பைக் தொடர்பான டீசர் படம் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஹார்லி-டேவிட்சன் பைக்கின் உலக வெளியீடு தேதி அறிவிப்பு!! எந்த மாதிரியாக இருக்கும்? ஒரே யோசனையா இருக்கே!

புதிய டீசரின் மூலம் பார்க்கும்போது, இந்த புதிய ஹார்லி-டேவிட்சன் பைக் வருகிற 2022 ஜனவரி 26ஆம் தேதி, இந்திய குடியரசு தினத்தில் உலகளவில் வெளியீடு செய்யப்பட உள்ளது. மற்றப்படி, "Further, Faster" (மேலும், வேகமாக) என்கிற வார்த்தைகளை தவிர்த்து, இந்த புதிய டீசரில் பைக்கின் தோற்றம் சிறிது கூட காட்டப்படவில்லை.

புதிய ஹார்லி-டேவிட்சன் பைக்கின் உலக வெளியீடு தேதி அறிவிப்பு!! எந்த மாதிரியாக இருக்கும்? ஒரே யோசனையா இருக்கே!

இதனால் ஹார்லி-டேவிட்சன் பிராண்டில் இருந்து அடுத்ததாக வெளியாக உள்ள இந்த புதிய பைக்கை பற்றிய மற்ற விபரங்கள் எதுவும் உறுதியாக தெரியவில்லை. இவ்வளவு ஏன், இது க்ரூஸர் ரக பைக்காக இருக்குமா? அல்லது அட்வென்ச்சர் ரக பைக்காக இருக்குமா? என்பதை கூட தெளிவாக கூற முடியவில்லை.

புதிய ஹார்லி-டேவிட்சன் பைக்கின் உலக வெளியீடு தேதி அறிவிப்பு!! எந்த மாதிரியாக இருக்கும்? ஒரே யோசனையா இருக்கே!

இந்த புதிய பைக், தற்சமயம் இந்தியா உள்பட வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ள ஏதேனும் ஒரு ஹார்லி-டேவிட்சன் பைக்கின் புதிய வேரியண்ட்டாக இருக்கலாம். அல்லது பான் அமெரிக்கா 1250 போன்று முற்றிலும் சந்தைக்கு புதிய ஹார்லி-டேவிட்சன் பைக்காக கூட இருக்கலாம். இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில்கள் வருகிற ஜனவரி 26ஆம் தேதி தான் தெரியவரும்.

புதிய ஹார்லி-டேவிட்சன் பைக்கின் உலக வெளியீடு தேதி அறிவிப்பு!! எந்த மாதிரியாக இருக்கும்? ஒரே யோசனையா இருக்கே!

அதுவரை காத்திருந்துதான் ஆக வேண்டும். இந்த புதிய மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி வருகிற 2022ஆம் ஆண்டிற்காக வேறு சில பைக்குகளின் அறிமுகங்களுக்கும் ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் துணை பிராண்டான லைவ்வயரின் கீழ் அறிமுகப்படுத்தப்பட உள்ள எலக்ட்ரிக் பைக்குகளும் அடங்குகின்றன.

புதிய ஹார்லி-டேவிட்சன் பைக்கின் உலக வெளியீடு தேதி அறிவிப்பு!! எந்த மாதிரியாக இருக்கும்? ஒரே யோசனையா இருக்கே!

வரும் காலங்களில் லைவ் வயர் பிராண்டையே பெரிதும் நம்பவுள்ள ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் எதிர்காலத்தில் இந்த துணை பிராண்டில் ‘எஸ்2 டெல் மார்' என்கிற பெயரிலான மலிவான எலக்ட்ரிக் பைக்கையும் உலக நாடுகளில் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த பைக், ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் புதிய ‘ஏரோ' ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய ஹார்லி-டேவிட்சன் பைக்கின் உலக வெளியீடு தேதி அறிவிப்பு!! எந்த மாதிரியாக இருக்கும்? ஒரே யோசனையா இருக்கே!

இதனை தொடர்ந்து எதிர்காலத்தில் மேலும் சில மாடல்களும் இந்த ‘ஏரோ' ப்ளாட்ஃபாரத்தில் அடிப்படையில் கொண்டுவரப்படலாம். புதிய ஏரோ ப்ளாட்ஃபாரமானது, முதல் எலக்ட்ரிக் ஹார்லி-டேவிட்சன் பைக்காக விளங்கவுள்ள லைவ்வயர் ஒன்-இன் ஃப்ரேமிற்குள் பேட்டரியை வைக்கும் பாணியை பின் தொடரவுள்ளது. அதாவது எதிர்காலத்தில் ஹார்லி-டேவிட்சனின் எலக்ட்ரிக் பைக்குகளில் பேட்டரி பைக்கிற்கு மத்தியில், அழுத்தம் கொடுக்கப்படும் பகுதியில் வழங்கப்பட உள்ளது.

புதிய ஹார்லி-டேவிட்சன் பைக்கின் உலக வெளியீடு தேதி அறிவிப்பு!! எந்த மாதிரியாக இருக்கும்? ஒரே யோசனையா இருக்கே!

இதற்கிடையில் சமீபத்தில் ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அதன் முதல் அட்வென்ச்சர் பைக்கான பான் அமெரிக்கா 1250-இன் சில குறிப்பிட்ட மாதிரிகளை திரும்ப அழைப்பதாக அறிவித்திருந்தது. இந்த சூப்பர் அட்வென்ச்சர் பைக்கில் இருக்கை அடித்தள அமைப்பில் ஏற்படும் பிரச்சனைகளுக்காக இந்த திரும்ப அழைப்பு நடவடிக்கையை ஹார்லி-டேவிட்சன் கையில் எடுத்துள்ளது.

புதிய ஹார்லி-டேவிட்சன் பைக்கின் உலக வெளியீடு தேதி அறிவிப்பு!! எந்த மாதிரியாக இருக்கும்? ஒரே யோசனையா இருக்கே!

இந்த திரும்ப அழைப்பு நடவடிக்கையில், கடந்த 2021 மார்ச் 8ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 13ஆம் தேதி வரையில் தயாரிக்கப்பட்ட பான் அமெரிக்கா 1250 பைக்குகள் உட்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 2,689 பான் அமெரிக்கா பைக்குகளை ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இவை இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

புதிய ஹார்லி-டேவிட்சன் பைக்கின் உலக வெளியீடு தேதி அறிவிப்பு!! எந்த மாதிரியாக இருக்கும்? ஒரே யோசனையா இருக்கே!

இதனால் இந்த திரும்ப அழைப்பில் தாங்களும் உட்படுகிறோமா என்பதை தெரிந்துக்கொள்ள அருகில் உள்ள ஹீரோ மோட்டோகார்பின் டீலர்ஷிப் மையத்தினை பான் அமெரிக்கா 1250 பைக்குகளின் வாடிக்கையாளர்கள் அணுகவும். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களை டீலர்கள் தொடர்பு கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்த பழுது இலவசமாக சரிப்பார்த்து தரப்படுமாம்.

Most Read Articles
English summary
Harley Davidson Teases New Motorcycle.
Story first published: Saturday, December 25, 2021, 23:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X