Bajaj Pulsar 250 பைக்கில் இந்த அம்சங்களை எல்லாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்... என்ன அம்சங்கள் அது? இதோ பட்டியல்
புதிய தலைமுறை Bajaj Pulsar 250 பைக்கில் இடம் பெற இருக்கும் அம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முக்கிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பஜாஜ் நிறுவனம் மிக விரைவில் புதிய தலைமுறை பல்சர் 250 வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த பைக்கில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த முக்கிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்திய இருசக்கர வாகன பிரியர்களின் மிகவும் பிரியமான டூ-வீலர் மாடலாக பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் மாடல் பைக் இருக்கின்றது. இந்த பைக் இந்தியாவில் பன்முக சிசி தேர்வில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. அந்தவகையில், பல்சர் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக 250 சிசி எஞ்ஜின் கொண்டது இருக்கின்றது.

இதனை நிறுவனம் மிக விரைவில் புதிய தலைமுறை வெர்சனாாக நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. புதிய வெர்சன் பழைய தலைமுறையைக் காட்டிலும் பல மடங்கு சிறந்த தயாரிப்பாக உருவாகி வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதாவது, புதிய தலைமுறை பல்சர் 250 பைக்கில் இடம் பெற இருக்கும் ஐந்து நிச்சய அம்சங்கள் பற்றிய தகவலே தற்போது வெளியாகியிருக்கின்றது. அதுகுறித்த தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

புரஜெக்டர் மின் விளக்கு (Projector headlamp)
புதிய தலைமுறை பல்சர் 250 பைக்கில் ஹெட்லேம்பாக புரஜெக்டர் ரக மின் விளக்கு பயன்படுத்தப்பட இருக்கின்றது. குறைந்த விலை வேரியண்டில் இது இடம் பெறுமா என்பது பற்றிய தகவல் வெளியாகிவில்லை. அதேவேலையில், உயர்நிலை வேரியண்டில் நிச்சயம் புரஜெக்டர் ரக மின் விளக்கு இடம் பெறும் என உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்இடி இன்டிகேட்டர்கள் (LED indicators):
புரஜெக்டர் முகப்பு மின் விளக்கைப் போலவே எல்இடி தர இன்டிகேட்டர்கள் புதிய பல்சர் 250 பைக்கில் இடம் பெற இருக்கின்றன. மெல்லிய தோற்றத்திலான இன்டிகேட்டர்களே இடம் பெற இருக்கின்றன. தற்போது பல்சர் வரிசையில் பயன்படுத்தப்பட்டு வரும் இன்டிகேட்டர்களைக் காட்டிலும் இது சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் என கூறப்படுகின்றது.

அலாய்வீல்கள் டிஸ்க் பிரேக் வசதி உடன் (Alloy wheels with disc brakes):
மிக சிறந்த ரைடிங் அனுபவத்திற்காக டிஸ்க் பிரேக் வசதிக் கொண்ட அலாய் வீல்கள் புதிய தலைமுறை பல்சர் 250 பைக்கில் வழங்கப்பட இருக்கின்றது. முன்னதாக பைக் பற்றி வெளியாகிய ஸ்பை படங்கள் இதையே உறுதி செய்கின்றன. இத்துடன் பன்முக சாலையில் இயங்கும் திறன் கொண்ட ட்யூப்லெஸ் டயரும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றது.

எல்இடி டிஆர்எல் மின் விளக்குகள்:
புதிய தலைமுறை பல்சர் 250 பைக்கை அலங்கரிக்கும் வகையில் எல்இடி டிஆர்எல் மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை முகப்பு பகுதி மின் விளக்குடன் இணைந்தவாறு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அம்சம் தற்போதைய புதுமுக பைக்குகள் பலவற்றில் இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஏர் கூல்டு எஞ்ஜின்/ஆயில் கூல்டு எஞ்ஜின் (Air-cooled/Oil-cooled engine):
லிக்யூடு கூல்டு பைக்குகளில் இடம் பெறுவதைப் போன்ற ரேடியேட்டர்கள் புதிய தலைமுறை பல்சர் 250 பைக்கில் இடம் பெறவில்லை என்பதை முந்தைய ஸ்பை படங்கள் உறுதிப்படுத்துகின்றன. அதேவேலையில், நிறுவனம் 220சிசி எஞ்ஜினையே தற்போது ரீவொர்க் செய்து விற்பனைக்குக் கொண்டு வருகின்றது.

இது ஓர் ஆயில் கூலிங் வசதிக் கொண்ட மோட்டார் ஆகும். ஆகையால், இந்த விஷயத்தில் தற்போதும் குழப்பம் நீடித்த வண்ணம் இருக்கின்றது.
இருப்பினும் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் பல்சர் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. புதிய தலைமுறை பல்சர் 250 அக்டோபர் மாதம் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Source: HT Auto


Click it and Unblock the Notifications








