2021ல் இந்தியர்கள் அதிகம் தேடிய ஸ்கூட்டர்கள் எது தெரியுமா? 5 ஸ்கூட்டர்களை ரொம்ப அதிகமா தேடி இருக்காங்க!

2021ம் ஆண்டில் இந்தியாவில் மக்கள் அதிகம் கூகுளில் தேடிய ஐந்து ஸ்கூட்டர்களின் பட்டியலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவை குறித்த முழு விபரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

2021 எந்த ஸ்கூட்டர்களை இந்தியர்கள் அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? அதிகம் தேடப்பட்ட 5 ஸ்கூட்டர்கள் பட்டியல்!

இருசக்கர வாகனங்களுக்கு இந்தியர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. இதனால்தான் இவற்றின் விற்பனை எப்போதும் உச்சத்தில் இருக்கிறது. விற்பனையில் மட்டுமல்ல கூகுகளிலும் டூ-வீலர்களையே இந்தியர்கள் அதிகம் தேடி இருக்கின்றனர். அந்தவகையில், 2021ம் ஆண்டில் இந்தியாவில் கூகுளின் வாயிலாக எந்த ஸ்கூட்டரை மக்கள் அதிகம் தேடி இருக்கின்றனர் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2021 எந்த ஸ்கூட்டர்களை இந்தியர்கள் அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? அதிகம் தேடப்பட்ட 5 ஸ்கூட்டர்கள் பட்டியல்!

ஹோண்டா ஆக்டிவா 6ஜி (Honda Activa 6G)

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக ஹோண்டா ஆக்டிவா 6ஜி இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் சராசரியாக 3.5 லட்ச மாதாந்திர தேடல்களை பெற்றிருக்கின்றது. இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட இருசக்கர வாகனங்களில் பெரும்பாலான இடங்களை மோட்டார்சைக்கிள்களே பெற்றிருக்கின்றன. ராயல் என்பீல்டு கிளாசிக் 350, யமஹா எம்டி-15, கேடிஎம் ஆர்சி200 மற்றும் பஜாஜ் பல்சர் 125 உள்ளிட்ட பைக்குகள் முதல் 10 இடத்தைப் பிடத்திருக்கின்றன.

2021 எந்த ஸ்கூட்டர்களை இந்தியர்கள் அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? அதிகம் தேடப்பட்ட 5 ஸ்கூட்டர்கள் பட்டியல்!

இவற்றின் வரிசையில் 12வது இடத்தையே ஹோண்டா ஆக்டிவா பிடித்தது. 12வது இடத்தைப் பிடித்திருந்தாலும் அதிகம் தேடப்பட்ட இருசக்கர வாகனங்களின் பட்டியலில் முதலாவதாக இடம்பெறும் ஸ்கூட்டராக இது மாறியது. பல ஆண்டுகளாக இந்த ஸ்கூட்டர் விற்பனையில் இருக்கின்றபோதிலும் இவ்விடத்தை அதிக தேடல்கள் எண்ணிக்கையுடன் பிடித்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் இருக்கின்றது.

2021 எந்த ஸ்கூட்டர்களை இந்தியர்கள் அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? அதிகம் தேடப்பட்ட 5 ஸ்கூட்டர்கள் பட்டியல்!

டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter)

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் டிவிஎஸ் ஜூபிடர் மாடலும் ஒன்று. இரண்டாவது அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஸ்கூட்டர் 3 லட்சம் சராசரி மாதாந்திர தேடல்களைப் பெற்றிருக்கின்றது. இதன் வாயிலாக இந்தியாவின் இரண்டாவது அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் 2021ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட ஸ்கூட்டர்களின் பட்டியலிலும் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது.

2021 எந்த ஸ்கூட்டர்களை இந்தியர்கள் அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? அதிகம் தேடப்பட்ட 5 ஸ்கூட்டர்கள் பட்டியல்!

டிவிஎஸ் ஜூபிடர், 110சிசி மற்றும் 125 சிசி என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மிக சமீபத்திலேயே அதிக சிறப்பு வசதிகளுடன் 125சிசி ஜூபிடர் ஸ்கூட்டர் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. ஜூபிடர் ஸ்கூட்டர் ரூ. 63 என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

2021 எந்த ஸ்கூட்டர்களை இந்தியர்கள் அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? அதிகம் தேடப்பட்ட 5 ஸ்கூட்டர்கள் பட்டியல்!

சுசுகி அக்செஸ்125 (Suzuki Access 125)

இந்த பட்டியலின் மூன்றாவது இடத்தை சுசுகி நிறுவனத்தின் தயாரிப்பு பிடித்திருக்கின்றது. சராசரியாக 2.4 லட்சம் மாதாந்திர தேடல்களைப் பெற்று இவ்விடத்தை சுசுகி அக்செஸ் 125 பிடித்திருக்கின்றது. அக்செஸ் 125 ஓர் பிரீமியம் தர ஸ்கூட்டர் மாடலாகும். சிக்கனம், தொந்தரவு இல்லாத இயந்திரம் மற்றும் எளிதான பணிச்சூழலியல் ஆகிய வசதிகளை அக்செஸ் 125 பெற்றிருக்கின்றது.

2021 எந்த ஸ்கூட்டர்களை இந்தியர்கள் அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? அதிகம் தேடப்பட்ட 5 ஸ்கூட்டர்கள் பட்டியல்!

அதிகம் தேடப்பட்ட இருசக்கர வாகனங்களின் பட்டியலில் இந்த ஸ்கூட்டர் 14 வது இடத்தைப் பிடித்திருக்கின்றது. பன்முக நிற தேர்வு மற்றும் வேரியண்ட் தேர்வுகளில் அக்செஸ் 125 கிடைக்கின்றது. இதன் ஆரம்ப நிலை தேர்வின் விலை ரூ. 74,381 ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

2021 எந்த ஸ்கூட்டர்களை இந்தியர்கள் அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? அதிகம் தேடப்பட்ட 5 ஸ்கூட்டர்கள் பட்டியல்!

ஹோண்டா டியோ (Honda Dio)

புதுமுக வரவுகளின் காரணத்தினால் இந்தியாவில் டியோவிற்கான வரவேற்பு சற்றே குறைந்திருக்கின்றது. இதன் விளைவாகவே இந்த ஸ்கூட்டர் தேடலிலும் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. அதே நேரத்தில் குறைகூறும் அளவிற்கு இதன் விற்பனை மங்கிவிட்டது என்று கூறிவிட முடியாது.

2021 எந்த ஸ்கூட்டர்களை இந்தியர்கள் அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? அதிகம் தேடப்பட்ட 5 ஸ்கூட்டர்கள் பட்டியல்!

ஹோண்டா டியோ ஸ்கூட்டர் 1.3 லட்சம் மாதாந்திர தேடல்களை ஜனவரி தொடங்கி நவம்பர் வரையில் பெற்றிருக்கின்றது. ஆக்டிவாவிற்கு அடுத்தபடியாக அந்நிறுவனத்திற்கு பெரும் புகழை சேர்க்கும் வகையில் டியோவின் தேடல் அமைந்திருக்கின்றது. இந்த நிலை தற்போதும் இந்திய இளைஞர்கள் மத்தியில் டியோ ஸ்கூட்டருக்கு கணிசமான டிமாண்ட் கிடைத்து வருவது உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

2021 எந்த ஸ்கூட்டர்களை இந்தியர்கள் அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? அதிகம் தேடப்பட்ட 5 ஸ்கூட்டர்கள் பட்டியல்!

டிவிஎஸ் என்டார்க் 125 (TVS Ntorq 125)

டிவிஎஸ் என்டார்க் 125 இந்தியாவின் மிக அதிக திறன் கொண்ட ஸ்கூட்டர் மாடலாகும். இந்த ஸ்கூட்டரில் 124.8 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 9.25 பிஎச்பி பவர் மற்றும் 10.5 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்தகைய அதிக திறன் கொண்ட ஸ்கூட்டராகவே என்டார்க் 125 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துவருகின்றது.

2021 எந்த ஸ்கூட்டர்களை இந்தியர்கள் அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? அதிகம் தேடப்பட்ட 5 ஸ்கூட்டர்கள் பட்டியல்!

இது, சராசரியாக 1.10 லட்சம் மாதாந்திர தேடல்களை பெற்று இப்பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்திருக்கின்றது. டிவிஎஸ் என்டார்க் 125 இந்தியாவில் ரூ. 79,257 என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

2021 எந்த ஸ்கூட்டர்களை இந்தியர்கள் அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? அதிகம் தேடப்பட்ட 5 ஸ்கூட்டர்கள் பட்டியல்!

மேலே பார்த்த ஸ்கூட்டர்களைத் தவிர இன்னும் சில ஸ்கூட்டர் மாடல்களை இந்தியர்கள் அதிகம் தேடி இருக்கின்றனர். பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக விற்பனைக்குக் கிடைக்கும் இ-ஸ்கூட்டர்களே அவை. இந்தியாவில் கூகுளின் வாயிலாக பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரை அதிகமானோர் தேடி இருக்கின்றனர்.

2021 எந்த ஸ்கூட்டர்களை இந்தியர்கள் அதிகம் தேடி இருக்காங்க தெரியுமா? அதிகம் தேடப்பட்ட 5 ஸ்கூட்டர்கள் பட்டியல்!

49 ஆயிரம் சராசரி மாதாந்திர தேடல்களை அது பெற்றிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியான இடங்களையே ஏத்தர் 450எக்ஸ் மற்றும் ஓலா எலெக்ட்ரிக் எஸ்1 மின்சார ஸ்கூட்டர்கள் பிடித்திருக்கின்றன. பஜாஜ் சேத்தக் ஓர் பிரீமியம் தர எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். வெகு நீண்ட வருடங்களுக்கு பின்னர் பஜாஜ் விற்பனைக்குக் கொண்டு வரும் ஸ்கூட்டர் மாடல் இதுவாகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is the list top five most searched scooters in india on 2021 in google
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X