இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

ப்ளூடூத் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் குறைந்த விலை இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

பிரீமியம் மற்றும் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களில் மட்டுமே கிடைத்து வந்த ப்ளூடூத் இணைப்பு வசதி இப்போது விலைக் குறைந்த டூ-வீலர்களில் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக, இந்த தொழில்நுட்ப வசதி ஆரம்பத்தில் ஸ்கூட்டர்களில் மட்டுமே அதிகளவில் இடம் பெற்று வந்தது. ஆனால், இந்நிலை இப்போது மாறியிருக்கின்றது. தற்போது மோட்டார்சைக்கிள்களிலும் ப்ளூடூத் இணைப்பு வசதி இடம் பெற தொடங்கியிருக்கின்றது.

இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

இளைஞர்களைக் கவரும் நோக்கில் இந்த வசதியை வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளில் அறிமுகப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. இருப்பினும், இந்த தொழில்நுட்ப வசதி விலையுயர்ந்த வாகனங்களில் மட்டுமே இடம்பெறுவதாக பலர் நம்புகின்றனர். இந்த எண்ணத்தை போக்கும் வகையிலேயே, சந்தையில் குறைந்த விலையில் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் கிடைக்கும் இருசக்கர வாகனங்களின் பட்டியலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

குறைந்த விலையில் ப்ளூடூத் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் டூ-வீலர்கள் பற்றிய தகவலை பார்ப்பதற்கு முன்னதாக, ப்ளூடூத் இணைப்பு வசதியின் பலன்கள் என்னென்ன என்பதைப் பார்த்துவிடலாம். இந்த இணைப்பு வசதி இருக்கும் இருசக்கர வாகனங்களில், நமது செல்போனை இணைத்துக் கொள்ள முடியும்.

இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

அவ்வாறு இணைக்கும்பட்சத்தில் வாகனம் குறித்த அனைத்து தகவலையும் செல்போனில் இருக்கும் திரையிலும், செல்போனுக்கு வரும் அழைப்பு, குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றை வாகனத்தில் இருக்கும் திரையிலும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

இதுதவிர சவாரி வரலாறு, நேவிகேஷன், வாகனம் இருக்கும் இடம் பற்றிய தகவலைப் பெறுவது என பல்வேறு முக்கிய தகவல்களையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். எனவேதான், இளைஞர்கள் ப்ளூடூத் இணைப்பு வசதியிருக்கும் வாகனங்களுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். சரி, வாருங்கள் ப்ளூடூத் இணைப்பு வசதி இடம்பெற்றிருக்கும் குறைந்த இருசக்கர வாகனங்களின் பட்டியலுக்கு பார்க்கலாம்.

இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி:

டிவிஎஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த பைக்குகளில் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கும் ஒன்று. ஏற்கனவே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்பைக்கிற்கு கூடுதல் டிமாண்டை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், டிவிஎஸ் நிறுவனம் ப்ளூடூத் இணைப்பு வசதியை அறிமுகப்படுத்தியது.

இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

இந்த பைக்கை டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ. 1.29 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த விலையிலேயே ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், கவர்ச்சியான உருவ அமைப்பு என பல்வேறு சிறப்பு வசதிகளை நிறுவனம் வழங்குகின்றது.

இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ், எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி:

ஹீரோ நிறுவனத்தின் புகழ்பெற்ற 200 சிசி மோட்டார்சைக்கிள்களாக எக்ஸ்ட்ரீம் 200எஸ், எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி

ஆகிய மாடல்கள் இருக்கின்றன. இவற்றின் பக்கம் இளைஞர்களைக் கவரும் விதமாக ஹீரோ நிறுவனம் பல்வேறு சிறப்பு வசதிகளை வழங்கி வருகின்றது. அதில், ஓர் முக்கிய வசதியாகவே ப்ளூடூத் இணைப்பு வசதி இருக்கின்றது.

இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

இந்த வசதியை இயக்கும் விதமாக எல்சிடி டிஸ்பிளேவை அது பைக்கில் இணைத்துள்ளது. இதில் இடம்பெற்றிருக்கும் ஹீரோ ரைட்கைட் ஆப் வாயிலாக செல்போன்-பைக் இரண்டையும் இணைக்க முடியும். அவ்வாறு, இணைக்கும் பட்சத்தில் பல்வேறு முக்கிய தகவல்களை செல்போன் திரை மற்றும் பைக்கின் திரை ஆகியவற்றில் நம்மால் பெற்று கொள்ள முடியும்.

இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

மிக முக்கியமாக டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதி, கியர் பொஷிஷன் மற்றும் பயண வரலாறு ஆகியவற்றை நம்மால் பெற்று கொள்ள முடியும். இதுபோன்ற எக்கசக்க வசதிகளைக் கொண்டிருக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக் இந்தியாவில் ரூ. 1.20 லட்சம் என்ற விலையிலும், எக்ஸ்பல்ஸ் 200டி ரூ. 1.16 லட்சம் என்ற விலையிலும், எக்ஸ்பல்ஸ் 200 ரூ. 1.18 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

யமஹா எஃப்இசட்எஸ்-எஃப்ஐ:

யமஹா எஃப்இசட்எஸ்-எஃப்ஐ பைக்கை மிக சமீபத்திலேயே யமஹா நிறுவனம் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் அறிமுகப்படுத்தியது. இந்த வசதியை கன்னெக்ட் எக்ஸ் எனும் பெயரில் நிறுவனம் வழங்குகின்றது. இந்த செல்போன் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் செயலிகளில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். ஒரு முறை இந்த ஆப்பினை டவுண்லோடு செய்து பைக்கையும், செல்போனையும் இணைப்பதன் வாயிலாக பல்வேறு தகவல்களை நம்மால் பெற முடியும்.

இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

பயணத்தின் இடைவெளியை அறிந்து கொள்ளுதல், பேட்டரி அளவு (வோல்டேஜ்), வாகனம் இருக்கும் இடம், பைக் இருக்கை இடத்தை கண்டறிதல் மற்றும் இன்டிகேட்டர்-ஹாரன்களை இருந்த இடத்திலேயே ஒலிக்க செய்தல் என பலவற்றை நம்மால் செய்ய முடியும். யமஹா எஃப்இசட்எஸ்-எஃப்ஐ பைக் ரூ. 1.08 லட்சம் என்ற தொடக்க விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

சுசுகி அக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட்:

சுசுகி நிறுவனம், அதன் புகழ்பெற்ற ஸ்கூட்டர்களான அக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் 125 ஆகிய இரு ஸ்கூட்டர்களிலும் ப்ளூடூத் இணைப்பு வசதியை வழங்கி வருகின்றது. மிக மிக குறைந்த விலையில் ப்ளூடூத் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் இருசக்கர வாகனங்களில் இந்த மாடல்களும் அடங்கும்.

இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

இதில், அக்செஸ் 125 இருவிதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ட்ரம் மற்றும் டிஸ்க் ஆகியவையே இரு விதமான வேரியண்டுகள் ஆகும். இதில், ட்ரம் பிரேக்கின் வேரியண்ட் ரூ. 78,200 என்ற விலையிலும், டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ. 80,200 என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவற்றைக் காட்டிலும் சற்று கூடுதல் விலைக் கொண்ட ஸ்கூட்டராக பர்க்மேன் இருக்கின்றது.

இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

இந்த ஸ்கூட்டர் ரூ. 86,200 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த விலையிலேயே ப்ளூடூத் இணைப்பு வசதியைக் கொண்ட எல்சிடி திரை இந்த ஸ்கூட்டர்களில் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் செல்போனுக்கு வரும் அழைப்பு, குறுஞ்செய்தி ஆகியவற்றைப் பெற முடியும். இதுமட்டுமின்றி வாட்ஸ்ஆப் அலர்டுகளையும் நம்மால் பெற முடியும்.

இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

தொடர்ந்து, ஓவர்ஸ்பீடு அலர்ட், போன் பேட்டரி லெவல் என கூடுதல் சில சிறப்பு தகவலையும் இது வழங்கும். இந்த தகவல்களைய சுசுகி ரைடு கன்னெக்ட் எனும் ஆப்பின் வாயிலாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது! இவையே இந்தியாவின் குறைந்த விலை ப்ளூடூத் வசதியுடைய டூ-வீலர்கள்...

டிவிஎஸ் என்டார்க் 125

மிக மிக குறைந்த விலையில் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டர்களின் பட்டியலில் இந்த ஸ்கூட்டரே முதல் இடத்தைப் பிடிக்கின்றது. இந்த ஸ்கூட்டர் ரூ. 70,555 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை மாடலின் விலை மட்டுமே ஆகும். இந்த ஸ்கூட்டர் ரூ. 79,535 என்ற அதிக விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles

English summary
Here Is The Top 5 Most-Affordable Bluetooth-Enabled Two-Wheelers List. Read In Tamil.
Story first published: Wednesday, April 7, 2021, 11:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X