அறிமுகமானது Bajaj Pulsar F250 பைக்... இதன் 5 முக்கிய அம்சங்கள் என்னனு தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இன்று நாட்டில் விற்பனைக்கு அறிமுகமான பஜாஜ் பல்சர் எஃப்250 (Bajaj Pulsar F250) பைக் பற்றி அறிய வேண்டிய ஐந்து முக்கிய தகவல்களை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இன்று அறிமுகமான Bajaj Pulsar F250... பைக் பற்றிய இந்த 5 முக்கிய அம்சங்கள் என்ன தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

பஜாஜ் நிறுவனம் இன்று (அக்டோபர் 28) பல்சர் வரிசையில் இரு புதிய தேர்வுகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. எஃப்250 நடுத்தர அழகான ரகத்திலும், என்250 நேக்கட் ரோட்ஸ்டர் ரகத்திலும் புதிய பல்சர் விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டும் குவார்டர் லிட்டர் பல்சர் சீரிஸ்கள் ஆகும்.

இன்று அறிமுகமான Bajaj Pulsar F250... பைக் பற்றிய இந்த 5 முக்கிய அம்சங்கள் என்ன தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இதில், பல்சர் எஃப்250 பைக் பற்றி அறிய வேண்டிய ஐந்து முக்கிய ஹைலைட்டுகள் பற்றிய இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். புதிய பைக் குறித்து இருசக்கர வாகன பிரியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இன்று அறிமுகமான Bajaj Pulsar F250... பைக் பற்றிய இந்த 5 முக்கிய அம்சங்கள் என்ன தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

ஸ்டைல்:

பிற பல்சர் பைக்குகளில் இருந்து மாறுபட்டு காட்சியளிக்கும் வகையில் மிகவும் தனித்துவமான ஓர் இருசக்கர வாகனமாக பல்சர் எஃப்250 உருவாக்கப்பட்டிருக்கின்றது. உயரமான விண்ட்ஸ்கிரீன், கட்டுமஸ்தான 14 லிட்டர் கொள்ளளவுக் கொண்ட எரிபொருள் நிரப்பும் தொட்டி, உயரமான இருக்கை, ஸ்பிளிட் ரக வால் பகுதி மின் விளக்கு மற்றும் இரட்டை-பேரல் ரக புகை வெளியேற்றும் குழாய் ஆகியவை இருசக்கர வாகனத்தின் கவர்ச்சியான தோற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இன்று அறிமுகமான Bajaj Pulsar F250... பைக் பற்றிய இந்த 5 முக்கிய அம்சங்கள் என்ன தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

தொடர்ந்து, இரட்டை நிறம் கொண்ட எஞ்ஜின் கவுல், ஸ்பிளிட் தோற்றத்திலான அலாய் வீல்கள் (பல்சர் என்எஸ் மாடல்களிலும் இதே தோற்றம் கொண்ட வீலே பயன்படுத்தப்பட்டிருக்கும்), பிரத்யேக பாடி பேனல்கள் ஆகியவை எஃப்250 பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மிக குறிப்பிட்ட அளவில் மட்டுமே நிற தேர்வு வழங்கப்படுகின்றது. ரேசிங் சிவப்பு நிறத்தில் மட்டுமே இப்பைக் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இன்று அறிமுகமான Bajaj Pulsar F250... பைக் பற்றிய இந்த 5 முக்கிய அம்சங்கள் என்ன தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

சிறப்பம்சங்கள்:

பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து மின் விளக்குகளும் முழு எல்இடி தரத்திலானவை ஆகும். முன் பக்கத்தில் பை-ஃபங்க்ஷனல் எல்இடி புரஜெக்டர் மின் விளக்கு, எல்இடி பொஷிஷன் மின் விளக்கு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், பின் பக்கத்தில் மேலே கூறியதைப் போல் ஸ்பிளிட் ரக வால் பகுதி மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இன்று அறிமுகமான Bajaj Pulsar F250... பைக் பற்றிய இந்த 5 முக்கிய அம்சங்கள் என்ன தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இவற்றுடன், செமி டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது ரைடிங் சார்ந்த தகவல், கியர் பொசிஷன், எரிபொருள் அளவு, மீதமுள்ள ரேஞ்ஜ் விபரம் என பல முக்கிய தகவல்களை வழங்கும் வசதிக் கொண்டது. இப்பைக்கில் பாதுகாப்பிற்காக ஒற்றை சேனல் ஏபிஎஸ் வசதி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இன்று அறிமுகமான Bajaj Pulsar F250... பைக் பற்றிய இந்த 5 முக்கிய அம்சங்கள் என்ன தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

எஞ்ஜின்:

பஜாஜ் பல்சர் எஃப் 250 பைக்கில் 249.07 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜினில் ஃப்யூவல் இன்ஜெக்சன் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. எரிபொருள் சிக்கனத்தை உறுதிப்படுத்தும் விதமாக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இன்று அறிமுகமான Bajaj Pulsar F250... பைக் பற்றிய இந்த 5 முக்கிய அம்சங்கள் என்ன தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 24.1 பிஎச்பி பவரை 8,750 ஆர்பிஎம்மிலும், 21.5 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உதவியுடனே இந்த திறனை எஞ்ஜின் வெளியேற்றுகின்றது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியும் இந்த எஞ்ஜினில் சேர்க்கப்பட்டிருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது.

இன்று அறிமுகமான Bajaj Pulsar F250... பைக் பற்றிய இந்த 5 முக்கிய அம்சங்கள் என்ன தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

வன்பொருள்:

பல்சர் எஃப்250 பைக் ட்யூப்லர் சேஸிஸ்-இல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக பைக்கின் முன் பக்கத்தில் 37 மிமீ அளவுள்ள டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது நைட்ராக்ஸ் வசதிக் கொண்டது.

இன்று அறிமுகமான Bajaj Pulsar F250... பைக் பற்றிய இந்த 5 முக்கிய அம்சங்கள் என்ன தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

இத்துடன், சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக 300 மிமீ டிஸ்க் பிரேக் முன் பக்கத்திலும், 230 மிமீ ரோட்டார் பின் பக்க வீலிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, மேலே கூறியதைப் போல் ஒற்றை சேனல் ஏபிஎஸ் வசதியும் பல்சர் எஃப் 250 பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், சிறந்த இயக்க அனுபவத்திற்காக 17 இன்ச் அலாய் மற்றும் 100/80 அளவுள்ள டயர் முன் பக்கத்திலும், 17 இன்ச் அலாய் மற்றும் 130/70 அளவுள்ள டயர் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அறிமுகமான Bajaj Pulsar F250... பைக் பற்றிய இந்த 5 முக்கிய அம்சங்கள் என்ன தெரிஞ்சா உடனே வாங்க ஆசைப்படுவீங்க!

விலை:

பஜாஜ் பல்சர் எஃப் 250 மோட்டார் சைக்கிள் ஒற்றை தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். இந்த ஒற்றை தேர்வின் விலை ரூ. 1.40 லட்சம் ஆகும். இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பைக் தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பைக்கிற்கு போட்டியாக விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Here is top 5 highlights to know about bajaj pulsar f250
Story first published: Thursday, October 28, 2021, 18:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X