இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் 7 எஸ்யூவி கார்கள்... போன மாத விற்பனையிலேயே இவைதான் டாப்!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 7 எஸ்யூவி கார்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். 2021 நவம்பர் மாத கார் விற்பனை நிலவரத்தின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் 7 எஸ்யூவி கார்கள்... போன மாத விற்பனையிலேயே இவைதான் டாப்!

இந்த வருடம் முடிவடைய இன்னும் சில தினங்களே (20 நாட்களே) உள்ளன. கடந்த பண்டிகைக் காலம் மிகவும் மோசமான நாட்களாகவே வாகன உற்பத்தியாளர்கள் அமைந்தது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையாவது நல்ல விற்பனைக்கு வழி வகுக்காதா என ஒட்டுமொத்த இந்திய வாகன உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் 7 எஸ்யூவி கார்கள்... போன மாத விற்பனையிலேயே இவைதான் டாப்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடந்த நவம்பர் மாத விற்பனை நிலவரம் பற்றிய தகவலை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. இதன் வாயிலாக நாட்டில் சிறப்பான விற்பனையைப் பெறும் எஸ்யூவி கார்கள் எவை என்பது தெரிய வந்திருக்கின்றது. இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். 2021 நவம்பர் மாதத்தில் 7 எஸ்யூவி கார்கள் மிக சிறப்பான விற்பனையைப் பெற்றிருக்கின்றன. அவற்றைப் பற்றி பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் 7 எஸ்யூவி கார்கள்... போன மாத விற்பனையிலேயே இவைதான் டாப்!

மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா (Maruti Suzuki Brezza)

விற்பனையான யூனிட்டுகளின் எண்ணிக்கை: 10,760

மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா ப்ரெஸ்ஸாவை டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து அர்பன் க்ரூஸர் எனும் பெயரில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவ்வாறான சூழ்நிலை இந்தியாவில் நிலவுகின்ற போதிலும் எஸ்யூவி கார் பிரிவில் விட்டாரா ப்ரெஸ்ஸா மிக சிறப்பான விற்பனையைப் பெற்றிருக்கின்றது.

இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் 7 எஸ்யூவி கார்கள்... போன மாத விற்பனையிலேயே இவைதான் டாப்!

இந்த கார் 2021 நவம்பர் மாதத்தில் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 10,761 யூனிட்டுகள் கடந்த மாதத்தில் ப்ரெஸ்ஸா விற்பனையாகியிருக்கின்றது. இந்த உச்ச எண்ணிக்கையினால் இக்கார் அதிக விற்பனையான எஸ்யூவி காரின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா ரூ. 7 லட்சத்து 61 ஆயிரம் என்ற விலையில் இருந்து இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உச்ச நிலை வேரியண்டின் விலை 11 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயாக இருக்கின்றது.

இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் 7 எஸ்யூவி கார்கள்... போன மாத விற்பனையிலேயே இவைதான் டாப்!

ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta)

விற்பனையான யூனிட்டுகளின் எண்ணிக்கை: 10,300

மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவியை அடுத்து நாட்டில் மிக அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராக ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா இருக்கின்றது. இந்த கார் 2021 நவம்பர் மாதத்தில் மட்டும் 10,300 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. இந்த உச்சபட்ச விற்பனை எண்ணிக்கை இக்காரை அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் பட்டியலில் இடம் இடத்தை பிடிக்க உதவி செய்திருக்கின்றது.

இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் 7 எஸ்யூவி கார்கள்... போன மாத விற்பனையிலேயே இவைதான் டாப்!

விட்டாரா ப்ரெஸ்ஸாவிற்கு எப்போது மிக சிறந்த போட்டியாளன் என்பதை க்ரெட்டா கடந்த மாத விற்பனையின் வாயிலாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கார் இந்திய சந்தையில் ரூ. 10.16 லட்சம் தொடங்கி ரூ. 17.87 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் 7 எஸ்யூவி கார்கள்... போன மாத விற்பனையிலேயே இவைதான் டாப்!

டாடா நெக்ஸான் (Tata Nexon)

விற்பனையான யூனிட்டுகளின் எண்ணிக்கை: 9,831

நாட்டின் அதிக பாதுகாப்பான கார் மாடல்களில் நெக்ஸான் எஸ்யூவியும் ஒன்று. இந்த கார் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்தி விபத்து பரிசோதனையில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றது. இத்தகைய உச்சபட்ச பாதுகாப்பு கொண்ட காருக்கு இந்தியாவில் சமீப காலமாக வரவேற்பு அதிகரித்து காணப்படுகின்றது.

இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் 7 எஸ்யூவி கார்கள்... போன மாத விற்பனையிலேயே இவைதான் டாப்!

இதை உறுதிப்படுத்தும் வகையில் 2021 நவம்பர் மாத விற்பனை அமைந்திருக்கின்றது. அந்த மாதத்தில் மட்டும் நெக்ஸான் எஸ்யூவி 9,831 யூனிட் வரை விற்பனையாகி இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் 7 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் உச்ச நிலை தேர்வின் விலை ரூ. 13.34 லட்சம் ஆகும்.

இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் 7 எஸ்யூவி கார்கள்... போன மாத விற்பனையிலேயே இவைதான் டாப்!

கியா செல்டோஸ் (Kia Seltos)

விற்பனையான யூனிட்டுகளின் எண்ணிக்கை: 8,859

ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் விட்டாரா ப்ரெஸ்ஸா ஆகிய கார்களுக்கு செம்ம போட்டியளிக்கும் வகையில் கியா செல்டோஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனையில் கிடைத்து வருகின்றது. இந்த கார் கடந்த நவம்பர் மாத விற்பனையில் 8,859 யூனிட் வரை விற்பனையாகியிருக்கின்றது. ஆகையால், இது நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த கார் இந்திய சந்தையில் ரூ. 9.95 லட்சம் தொடங்கி ரூ. 18.10 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் 7 எஸ்யூவி கார்கள்... போன மாத விற்பனையிலேயே இவைதான் டாப்!

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue)

விற்பனையான யூனிட்டுகளின் எண்ணிக்கை: 7,932

ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றுமொரு அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராக வென்யூ இருக்கின்றது. இந்த 2021 நவம்பர் மாதத்தில் மட்டும் 7,932 யூனிட் வரை விற்பனையாகி இருக்கின்றது. இதனால், அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்கள் பட்டியலில் இது ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. ரூ. 6.99 லட்சம் தொடங்கி ரூ. 11.85 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரில் சிறப்பு தேர்வாக ஐஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வை ஹூண்டாய் வழங்குவது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் 7 எஸ்யூவி கார்கள்... போன மாத விற்பனையிலேயே இவைதான் டாப்!

கியா சொனெட் (Kia Sonet)

விற்பனையான யூனிட்டுகளின் எண்ணிக்கை: 4,719

ஹூண்டாய் நிறுவனத்திற்கு இருப்பதைப் போலே கியா நிறுவனத்திற்கும் மற்றுமொரு அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் மாடல் இருக்கின்றது. அதுவே சொனெட். இந்த கார் மாடல் கடந்த நவம்பர் மாதத்தில் 4,719 யூனிட் வரை விற்பனையாகி இருக்கின்றது. இதன் விளைவாக இந்த கார் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்கள் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. கியா சொனெட் இந்திய சந்தையில் ரூ. 6.89 லட்சம் தொடங்கி ரூ. 13.55 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் 7 எஸ்யூவி கார்கள்... போன மாத விற்பனையிலேயே இவைதான் டாப்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 (XUV 300)

விற்பனையான யூனிட்டுகளின் எண்ணிக்கை: 4,006

மஹிந்திரா நிறுவனத்தின் மிக அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராக எக்ஸ்யூவி300 இருக்கின்றது. இந்த காரும் டாடா நெக்ஸானைப் போல் மிக அதிக பாதுகாப்பு திறன் கொண்ட வாகனமாக இருக்கின்றது. இதுவும், குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இந்த கார் இந்திய சந்தையில் ரூ. 7.95 லட்சம் தொடங்கி ரூ. 13.46 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is top 7 best selling suv s list in 2021 november
Story first published: Friday, December 10, 2021, 18:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X