2021ல் கார்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களின் பட்டியல்... அட இவ்ளோ வளர்ந்துடுச்சா!!

2021ம் ஆண்டில் இந்திய கார்களில் அறிமுகம் செய்யப்பட்ட புதுமுக தொழில்நுட்ப அம்சங்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2021ல் கார்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களின் பட்டியல்... டெக்னாலஜியில் நம்ம சந்தை இவ்ளோ வளர்ந்துடுச்சா!

2021ம் ஆண்டு ஒட்டுமொத்த வாகனத்துறைக்குமே மிகவும் இக்கட்டான வருடமாக அமைந்தது. இருப்பினும், அவை புதுமுக வாகனங்களை அறிமுகப்படுத்த தவறவில்லை. குறிப்பாக, நடப்பாண்டில் பல புதுமுக வாகனங்கள் பன்முக புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

2021ல் கார்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களின் பட்டியல்... டெக்னாலஜியில் நம்ம சந்தை இவ்ளோ வளர்ந்துடுச்சா!

வாகன உலகிற்கே இந்த அம்சங்கள் ரொம்ப புதுசுங்க என்ற கூறுமளவிலான அம்சங்களுடன் சில கார்கள் புதிய வகையிலான நவீன கால தொழில்நுட்பத்துடன் விற்பனைக்கு வந்திருக்கின்றன. அப்படி என்ன மாதிரியான தொழில்நுட்ப வசதிகளை வாகன உற்பத்தியாளர்கள், அவர்களின் கார்களில் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2021ல் கார்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களின் பட்டியல்... டெக்னாலஜியில் நம்ம சந்தை இவ்ளோ வளர்ந்துடுச்சா!

மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்புகள் (Advanced Driver Assistance Systems)

2021ம் ஆண்டில் பெரிதாக பேசப்பட்ட அம்சங்களில் ஒன்று அடாஸ். மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்பே இதன் விரிவாக்கம். மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் எம்ஜி அஸ்டர் ஆகிய கார் மாடல்களிலேயே இந்த அம்சம் முதல் முறையாக இடம் பெற்றது.

இரு ட்ரம்களில் மட்டுமே இந்த அம்சத்தை எம்ஜி நிறுவனம் அதன் அஸ்டர் கார் மாடலில் வழங்குகின்றது. ஷார்ப் மற்றும் சவி ஆகியவையே அவை. மஹிந்திரா நிறுவம் அதன் உயர் நிலை வேரியண்டான ஏஎக்ஸ்7-இல் மட்டுமே அடாஸ் அம்சத்தை வழங்குகின்றது.

2021ல் கார்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களின் பட்டியல்... டெக்னாலஜியில் நம்ம சந்தை இவ்ளோ வளர்ந்துடுச்சா!

பன்முக சிறப்பு வசதிகளைக் கொண்டதே இந்த அடாஸ் தொழில்நுட்பம். அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், தானியங்கி அவசர கால பிரேக்கிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் ஆகியவற்றை வழங்குவதே இத்தொழில்நுட்பத்தின் மிக முக்கியமான நோக்கமாகும்.

2021ல் கார்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களின் பட்டியல்... டெக்னாலஜியில் நம்ம சந்தை இவ்ளோ வளர்ந்துடுச்சா!

64 கலர் ஆம்பிசியன்ட் மின் விளக்குகள்

காரின் உட்புற சுற்றுப்புறத்தில் வழங்கப்படுவதே ஆம்பிசியன்ட் மின் விளக்கு. இதனை ஏற்கனவே நிறுவனங்கள் பல வழங்கி வருகின்றன. ஆனால், 64 நிறங்கள் எனும் அதிகப்படியான நிறங்கள் இந்த ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அம்சத்தை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதன் உயரிய வேரியண்டுகளில் வழங்கி வருகின்றது.

2021ல் கார்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களின் பட்டியல்... டெக்னாலஜியில் நம்ம சந்தை இவ்ளோ வளர்ந்துடுச்சா!

இதனை முதன் முறையாக ஹூண்டாய் நிறுவனம் அல்கஸார் புதுமக எஸ்யூவி காரில் வழங்க தொடங்கியிருக்கின்றது. உயரிய நிலை வேரியண்டான சிக்னேச்சர் ட்ரிம்மில் வழங்கப்படுகின்றது. இந்த அம்சம் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் கேரன்ஸ் எம்பிவி காரில் இடம் பெற இருக்கின்றது. இந்த காரின் வெளியீடு மிக சமீபத்திலேயே அரங்கேறியது.

2021ல் கார்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களின் பட்டியல்... டெக்னாலஜியில் நம்ம சந்தை இவ்ளோ வளர்ந்துடுச்சா!

முழு டிஜிட்டல் ரக டிரைவர் திரை

ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காரில் இந்த அம்சம் பொதுவான அம்சமாக வழங்கப்படுகின்றது. இவ்வசதியை ஜீப் நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட காம்பஸ் கார் மாடலில் வழங்க தொடங்கியிருக்கின்றது. தொடர்ந்து, மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரிலும் இந்த வசதி வழங்கப்படுகின்றது. காம்பஸ் காரில் 10.2 இன்சிலும், எக்ஸ்யூவி 700 மற்றும் அல்கஸார் மாடல்களில் 10.25 இன்சிலும் இந்த திரை இடம் பெற்றிருக்கின்றது.

2021ல் கார்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களின் பட்டியல்... டெக்னாலஜியில் நம்ம சந்தை இவ்ளோ வளர்ந்துடுச்சா!

அல்கஸார் எஸ்யூவி காரில் இடம் பெற்றிருக்கும் முழு டிஜிட்டல் டிரைவர் திரை, வெளிப்புறத்தைக் காட்சிப்படுத்தக் கூடிய கண்ணாடியில் காணக் கூடிய அனைத்து நிகழ்வுகளையும் திரை வாயிலாக காண்பிக்கும். இதேபோல், பன்முக வசதிக் கொண்டதாக எக்ஸ்யூவி700 காரில் இடம் பெற்றிருக்கும் முழு டிஜிட்டர் டிரைவர் திரை இருக்கின்றது.

2021ல் கார்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களின் பட்டியல்... டெக்னாலஜியில் நம்ம சந்தை இவ்ளோ வளர்ந்துடுச்சா!

இந்த திரை நேவிகேஷன் வசதி, டிரைவ் இன்ஃபர்மேஷன் மற்றும் அடாஸ் அசிஸ்டன்ஸ் ஆகியவற்றை வழங்கும். இத்துடன், காரில் இடம் பெற்றிருக்கும் காற்றின் அளவுகள் பற்றிய தகவலையும் இந்த திரைகள் வழங்கும். இவையே இத்திரையின் முக்கிய பணிகளாக இருக்கின்றன.

2021ல் கார்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களின் பட்டியல்... டெக்னாலஜியில் நம்ம சந்தை இவ்ளோ வளர்ந்துடுச்சா!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் தனிப்பயனாக்கப்பட்ட ரோபோ (AI Powered Personalised Robot)

இந்த வசதி தற்போது எம்ஜி அஸ்டர் காரில் மட்டுமே வழங்கப்படுகின்றது. இந்த அம்சம் இந்த ஆண்டே முதல் முறையாக இந்திய பயணிகள் வாகனத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ரோபோவின் தலை போன்று ஓர் கருவி டேஷ்போர்டில் இடம் பெற்றிருக்கும். நடப்பு நிகழ்வுகள், கேள்விக்கான பதில், காமெடி உள்ளிட்டவற்றை கூறி பயன்பாட்டாளர்களை மகிழ்விக்கும்.

2021ல் கார்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களின் பட்டியல்... டெக்னாலஜியில் நம்ம சந்தை இவ்ளோ வளர்ந்துடுச்சா!

தொடர்ந்து, சன்ரூஃப், டிரைவர் பக்க விண்டோ, க்ளைமேட் கன்ட்ரோல், அழைப்புகள், நேவிகேஷன் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை கன்ட்ரோல் செய்ய முடியும். இந்த சிறப்பு தொழில்நுட்ப வசதியை உயர்-நிலை வேரியண்டான சாவி ட்ரிம்மில் மட்டுமே வழங்கப்படுகின்றது.

2021ல் கார்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களின் பட்டியல்... டெக்னாலஜியில் நம்ம சந்தை இவ்ளோ வளர்ந்துடுச்சா!

10 இன்ச் அளவுள்ள தொடுதிரை

2021ம் ஆண்டில் கார்களில் அறிமுகம் செய்யப்பட்ட மிக சிறப்பான அம்சங்களில் ஒன்றாக 10 இன்ச் அளவுள்ள தொடுதிரை இருக்கின்றது. பெரியதாகவும், மிக சிறந்த தொடுதல் உணர்வையும் வழங்கும் வகையில் இந்த திரைகள் இருக்கின்றன. ஜீப், மஹிந்திரா, ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட பிராண்டுகள் அதன் குறிப்பிட்ட உயர்நிலை தேர்வுகளில் இந்த வசதியை வழங்கி வருகின்றன.

2021ல் கார்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களின் பட்டியல்... டெக்னாலஜியில் நம்ம சந்தை இவ்ளோ வளர்ந்துடுச்சா!

சில பிராண்டுகள் இந்த திரையில் ஒயர்லெஸ் ஆன்ட்ராட்யு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் கார் இணைப்பு வசதிகளை வழங்குகின்றன. ஒரு படி மேலே சென்று மஹிந்திரா அல்கஸார் காரில் அமேசான்-அலெக்ஸா, சொமேட்டோ மற்றும் ஜஸ்ட் டயல் போன்ற ஆப்புகளை எல்லாம் வழங்குகின்றது.

2021ல் கார்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களின் பட்டியல்... டெக்னாலஜியில் நம்ம சந்தை இவ்ளோ வளர்ந்துடுச்சா!

கார் இருக்கையின் உயரத்தை ஞாபகம் வைத்து ஓட்டுநருக்கு ஏற்ப உயர்த்தும் வசதி மற்றும் ஓட்டுநர் தூக்கத்தில் அயர்ந்தால் அதுகுறித்து எச்சரிக்கும் வசதி

2021ம் ஆண்டின் மிக சிறப்பான அம்சங்களில் ஒன்றாக இவை கருதப்படுகின்றன. இந்த அம்சம் எக்ஸ்யூவி 700 கார் மாடலில் வழங்கப்படுகின்றது. உயர் நிலை வேரியண்டான ஏஎக்ஸ்7 ட்ரிம்மில் இது இடம் பெற்றிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is top five new premium features list all are introduced in india in 2021
Story first published: Thursday, December 23, 2021, 18:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X