ஹீரோவின் உதவியுடன் இப்போதே மூன்றாம் அலையை சமாளிக்க தயாராகும் டெல்லி! எத்தனை அலை வந்தாலும் சமாளிக்கலாம்!

மூன்றாம் அலை பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஹீரோ தலைநகர் டெல்லியில் தரமான சம்பவத்தை செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

ஹீரோவின் உதவியுடன் இப்போதே மூன்றாம் அலையை சமாளிக்க தயாராகும் டெல்லி! எத்தனை அலை வந்தாலும் சமாளிக்கலாம்!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலால் இந்தியாவில் ஏற்பட்ட இழப்புகள் எண்ணற்றவை. இதன் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளின் தீவிரமே இன்னும் ஓயாத நிலையில் மிக விரைவில் இந்தியாவை மூன்றாம் அலை வைரஸ் பரவல் தாக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ஹீரோவின் உதவியுடன் இப்போதே மூன்றாம் அலையை சமாளிக்க தயாராகும் டெல்லி! எத்தனை அலை வந்தாலும் சமாளிக்கலாம்!

ஆகையால், பொதுவெளியில் மக்கள் அதிக பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலில் மிகக் கடுமையாக பாதிப்படைந்த தலை நகர் டெல்லிக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உதவி கரிம் நீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹீரோவின் உதவியுடன் இப்போதே மூன்றாம் அலையை சமாளிக்க தயாராகும் டெல்லி! எத்தனை அலை வந்தாலும் சமாளிக்கலாம்!

இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஹீரோ மோட்டோகார்ப், 50 படுக்கைகள் அடங்கிய கோவிட்-19 வார்டினை டெல்லியின் ஜனக்புரி பகுதியில் தொடங்கியிருக்கின்றது. இது ஓர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகும். இதனை பீப்பிள் டூ பீப்பிள் ஹெல்த் ஃபவுண்டேஷன் எனும் அறக்கட்டளையின் கூட்டணியில் இந்த மருத்துவமனையை ஹீரோ பராமரிக்க இருக்கின்றது.

ஹீரோவின் உதவியுடன் இப்போதே மூன்றாம் அலையை சமாளிக்க தயாராகும் டெல்லி! எத்தனை அலை வந்தாலும் சமாளிக்கலாம்!

இந்த மருத்துவமனையை ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் திறந்து வைத்தார். வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மருத்துவமனை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தலைவிரித்தாடியது. குறிப்பாக, ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகக் கடுமையாக நிலவியது.

ஹீரோவின் உதவியுடன் இப்போதே மூன்றாம் அலையை சமாளிக்க தயாராகும் டெல்லி! எத்தனை அலை வந்தாலும் சமாளிக்கலாம்!

இதனால், பல உயிர்கள் பரிதாபமாக பலியாகின. இந்த மாதிரியான சூழ்நிலை வரும் மூன்றாம் அலையில் ஏற்படக் கூடாது என்பதற்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தலைநகர் டெல்லியில் புதிய கோவிட் 19 மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

ஹீரோவின் உதவியுடன் இப்போதே மூன்றாம் அலையை சமாளிக்க தயாராகும் டெல்லி! எத்தனை அலை வந்தாலும் சமாளிக்கலாம்!

மருத்துவமனை மட்டுமின்றி சுகாதார பணியாளர்களுக்கு தனது இருசக்கர வாகனங்களையும் ஹீரோ நிறுவனம் வழங்கயிருக்கின்றது. ஹர்யானா மாநிலத்தின் தருஹேரா பகுதியில் உள்ள ஏழு மருத்துவமனைகளுக்கும், உத்தர்காண்டில் உள்ள நான்கு மருத்துவமனைகளுக்கும், குருகிராம் மற்றும் ஹர்யானா ஆகிய நகரங்களில் தலா நான்கு மருத்துவமனைகளுக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஹீரோவின் உதவியுடன் இப்போதே மூன்றாம் அலையை சமாளிக்க தயாராகும் டெல்லி! எத்தனை அலை வந்தாலும் சமாளிக்கலாம்!

இதுமட்டுமின்றி ஜெய்பூர், ரஜாஸ்தான், ஹலோல் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளின் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி ஆக்ஸிஜன் சிலிண்டர், பிபிஇ கிட் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் ஹீரோ வழங்கியிருக்கின்றது.

ஹீரோவின் உதவியுடன் இப்போதே மூன்றாம் அலையை சமாளிக்க தயாராகும் டெல்லி! எத்தனை அலை வந்தாலும் சமாளிக்கலாம்!

இதைத்தொடர்ந்தே, தற்போது நாட்டின் தலைநகரில் மருத்துவமனையை திறந்து வைத்து தனது கோவிட் வைரசுக்கு எதிரான போராட்டத்தை ஹீரோ விரிவாக்கம் செய்திருக்கின்றது. ஹீரோவின் இந்த செயல் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை, நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

English summary
Hero Creates 50-Bed COVID-19 Hospital At Delhi. Read In Tamil.
Story first published: Saturday, July 24, 2021, 18:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X