அப்பாச்சி ஆர்டிஆர், பல்சர் என்எஸ் கதை இனி கந்தல்... இளைஞர்களை கவர சிறப்பு எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் அறிமுகம்!!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் 100மில்லியன் எடிசன் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் பிற முக்கிய தகவல்களை இப்பதவில் பார்க்கலாம்.

அப்பாச்சி ஆர்டிஆர், பல்சர் என்எஸ் கதை இனி கந்தல்... இளைஞர்களை கவர சிறப்பு எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் அறிமுகம்!!

நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், 100 மில்லியன் தயாரிப்பு எனும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடி வருகின்றது. இந்த சிறப்பு கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு பதிப்பு வாகனங்களை மிக சமீபத்தில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

அப்பாச்சி ஆர்டிஆர், பல்சர் என்எஸ் கதை இனி கந்தல்... இளைஞர்களை கவர சிறப்பு எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் அறிமுகம்!!

அவ்வாறு, கடந்த வாரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிறப்பு பதிப்பு வாகனங்களில் ஒன்று எக்ஸ்ட்ரீம் 160ஆர் 100 மில்லியன் எடிசன். இந்த பைக்கையே தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது ஹீரோ. இந்த பைக்கிற்கு ரூ. 1,08,750 என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

அப்பாச்சி ஆர்டிஆர், பல்சர் என்எஸ் கதை இனி கந்தல்... இளைஞர்களை கவர சிறப்பு எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் அறிமுகம்!!

இது வழக்கமான எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கைக் காட்டிலும் சற்று கூடுதல் விலைக் கொண்ட மாடலாகும். வழக்கமான எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் டிஸ்க் வேரியண்டின் விலை ரூ. 1,06,950 ஆகும். மேலும், இதன் ட்ரம் பிரேக் வேரியண்டின் விலை ரூ. 1,03,900மாகவும் இருக்கின்றது.

அப்பாச்சி ஆர்டிஆர், பல்சர் என்எஸ் கதை இனி கந்தல்... இளைஞர்களை கவர சிறப்பு எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் அறிமுகம்!!

சிறப்பு நிறத் தேர்வு மற்றும் கூடுதல் அணிகலன்கள் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இப்பைக்கிற்கு சற்று கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. 100 மில்லியன் எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக இரட்டை நிற வண்ணப் பூச்சு செய்யப்பட்டிருக்கின்றது.

அப்பாச்சி ஆர்டிஆர், பல்சர் என்எஸ் கதை இனி கந்தல்... இளைஞர்களை கவர சிறப்பு எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் அறிமுகம்!!

இந்த இரு நிற வண்ணப்பூச்சு நேக்கட் ரோட்ஸ்டர் பைக்கிற்கு கூடுதல் கவர்ச்சியை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இரு நிற பூச்சு பணி பைக்கின் உடற்பகுதிக்கு மட்டுமின்றி ஹெட்லைட் மாஸ்க், ப்யூவல் டேங்க் மற்றும் பின்பக்க பேனல்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

அப்பாச்சி ஆர்டிஆர், பல்சர் என்எஸ் கதை இனி கந்தல்... இளைஞர்களை கவர சிறப்பு எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் அறிமுகம்!!

எனவேதான் சற்று பதிப்பு வாகனமாக இந்த வாகனம் பார்க்கப்படுகின்றது. இதுதவிர மேலும் சில தனித்துவமான அம்சங்களையும் சிறப்பு எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் பெற்றிருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், இது 100 மில்லியன் எடிசன் என்பதைக் குறிப்பிடும் வகையில் எழுத்துக்கள், எல்இடி மின் விளக்குகள், டிஜிட்டல் கன்சோல், ஹசார்ட் ஸ்விட்ச் உள்ளிட்டவை தனித்துவமான தோற்றத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

அப்பாச்சி ஆர்டிஆர், பல்சர் என்எஸ் கதை இனி கந்தல்... இளைஞர்களை கவர சிறப்பு எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் அறிமுகம்!!

தொடர்ந்து, இப்பைக்கில் சைடு ஸ்டாண்டு போட்டிருந்தால் தானாக எஞ்ஜினை ஆஃப் செய்யும் வசதி, ஆட்டோ செயில் ஃபங்க்சன் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. எஞ்ஜினைப் பொருத்தவரை வழக்கமான எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் இடம்பெற்றிருக்கும் அதே மோட்டாரே சிறப்பு எடிசன் பைக்கிலும் இடம்பெற்றிருக்கின்றது.

அப்பாச்சி ஆர்டிஆர், பல்சர் என்எஸ் கதை இனி கந்தல்... இளைஞர்களை கவர சிறப்பு எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் அறிமுகம்!!

163சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே இப்பைக்கில் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 15 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் 100 மில்லியன் எடிசன் பைக் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அப்பாச்சி ஆர்டிஆர், பல்சர் என்எஸ் கதை இனி கந்தல்... இளைஞர்களை கவர சிறப்பு எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் அறிமுகம்!!

அதாவது, ட்யூவல் டிஸ்க் பிரேக் தேர்வில் மட்டுமே கிடைக்கின்றது. இந்த பைக் தற்போது விற்பனையில் இருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ் 160 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக விற்பனைக்கு களமிறக்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

English summary
Hero Launches Xtreme 160R 100 Million Edition Bike In India. Read In Tamil.
Story first published: Friday, March 12, 2021, 15:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X