ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் தலைவராக ரவி அவலுர் நியமனம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ள ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக ரவி அவலுர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கீழ் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் வர்ததகம் தனி பிரிவாக செயல்பட உள்ளது.

 ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் தலைவராக ரவி அவலுர் நியமனம்!

உயர்வகை க்ரூஸர் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் பிரபலமான ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் இந்திய சந்தையில் இருந்து வெளியேறியது. ஹரியானாவில் செயல்பட்டு வந்த ஆலையையும் மூடியது. இதனால், ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மற்றும் டீலர்கள் நிர்கதியாகினர்.

 ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் தலைவராக ரவி அவலுர் நியமனம்!

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை அளித்தது. எனினும், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்திய வர்த்தகப் பிரிவை ஹீரோ மோட்டோகார்ப் ஏற்றுக் கொண்டது.

 ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் தலைவராக ரவி அவலுர் நியமனம்!

இதையடுத்து, ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் விற்பனை, விற்பனைக்கு பிந்தைய சேவை உள்ளிட்டவற்றை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட 11 டீலர்கள் தொடர்ந்து ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

 ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் தலைவராக ரவி அவலுர் நியமனம்!

சென்னை, பெங்களூர், புனே, ஆமதாபாத், கொச்சி, புவனேஷ்வர், டெல்லி, டேராடூன், ஹைதராபாத், மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய ஹார்லிடேவிட்சன் டீலர்கள் தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கீழ் இணைந்து செயல்பட உள்ளனர்.

 ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் தலைவராக ரவி அவலுர் நியமனம்!

இந்த நிலையில், தனது கீழ் செயல்படும் சில அங்கீகரிக்கப்பட்ட டீலர்களுக்கு ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளில் ஹீரோ மோட்டோகார்ப் ஈடுபட்டுள்ளது.

 ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் தலைவராக ரவி அவலுர் நியமனம்!

இதனால், ஹார்லிடேவிட்சன் மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்களும் சற்று நிம்மதியடைந்துள்ளனர். இந்த நிலையில், ஹார்லி டேவிட்சன் இந்தியப் பிரிவின் வர்த்தக தலைவராக ரவி அவலுர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேரடியாக ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் பவன் முஞ்சால் கீழ் பணிபுரிய இருக்கிறார்.

 ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் தலைவராக ரவி அவலுர் நியமனம்!

இதற்கு முன்னதாக ரவி அவலுர் ஆட்டோமொபைல் உதிரிபாக தயாரிப்பில் பிரபலமான கூப்பர் மற்றும் டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் தலைவராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Hero Motocorp appoints Ravi Avalur to lead Harley Davidson India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X