புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கை வாங்கும் பிளானில் உள்ளீர்களா? பைக்கிற்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கை வாங்கும் பிளானில் உள்ளீர்களா? பைக்கிற்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு அதன் எக்ஸ்பல்ஸ்200 பைக்கின் புதிய வெர்சனை எக்ஸ்பல்ஸ் 200 4வி (4-வால்வு) என்கிற பெயரில் அறிமுகப்படுத்தியது. பெயருக்கு ஏற்ப என்ஜின் அமைப்பில் நான்கு வால்வுகளுடன், பிரத்யேகமான பெயிண்ட் தேர்வை பெற்றுவந்துள்ள இந்த புதிய எக்ஸ்பல்ஸ் பைக்கும் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கை வாங்கும் பிளானில் உள்ளீர்களா? பைக்கிற்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

இந்த நிலையில் தான் தற்போது புதிய எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கிற்கு அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹீரோ மோட்டோகார்பின் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆக்ஸஸரீகள் லிஸ்ட் குறுகியது தான்.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கை வாங்கும் பிளானில் உள்ளீர்களா? பைக்கிற்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

அதாவது பொருட்களை வைப்பதற்கு பைகளும், செல்போன் தாங்கி, ஒட்டுனரின் கால்முட்டிக்கான பேட் மற்றும் எக்ஸ்பல்ஸிற்கான பிரத்யேகமான ஹெல்மெட்டும் தான் இந்த ஆக்ஸஸரீகள் லிஸ்ட்டில் அடங்குகின்றன. இதில் பொருட்களை வைப்பதற்கான பைகள் பெட்ரோல் டேங்கில் ஒன்றும், பின்பக்கத்தில் ஒன்றும் என வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கை வாங்கும் பிளானில் உள்ளீர்களா? பைக்கிற்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

செல்போன் தாங்கியானது பைக்கின் ஹேண்டில்பாரில் வழங்கப்படும். ஹீரோ எக்ஸ்பல்ஸ்200, இந்தியாவின் மலிவான அட்வென்ச்சர் பைக் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். அதிலும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்பல்ஸ்200 4வி பக்கா அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாகும்.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கை வாங்கும் பிளானில் உள்ளீர்களா? பைக்கிற்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

இத்தகைய பைக்கிற்கு இவ்வாறான பொருட்களை வைக்கும் பைகளும், செல்போன் தாங்கியும் தொலைத்தூர பயணங்களின்போது நிச்சயமாக தேவைப்படும். இந்த ஆக்ஸஸரீகளில் சேர்க்கப்பட்டுள்ள பிரத்யேகமான ஹெல்மெட்டில் பைக்கின் ‘Xpulse 200' என்கிற கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கை வாங்கும் பிளானில் உள்ளீர்களா? பைக்கிற்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

ஓட்டுனர் கால்முட்டிக்கான பேட் ஆனது, பயணங்களின் போது ஓட்டுனரின் கால்முட்டியால் பைக்கின் பெட்ரோல் டேங்க் பகுதியில் உள்ள பெயிண்ட்டை பாதிப்படையாமல் பாதுகாக்கும். இவற்றுடன் மாடர்ன், டூரர், இரட்டை நிறம் மற்றும் அட்வென்ச்சர் என்கிற நான்கு இருக்கை தேர்வுகளும் கூடுதல் தேர்வாக புதிய எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கிறகு கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கை வாங்கும் பிளானில் உள்ளீர்களா? பைக்கிற்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

மற்றப்படி, நீர் மற்றும் தூசி பாதுகாப்பான் தொடர்பான எந்த ஆக்ஸஸரீயும் இந்த பைக்கிற்கு அறிவிக்கப்படவில்லை. ஏனெனில் பெரும்பான்மையான பாதுகாப்பு பாகங்கள் இந்த மலிவான ஹீரோ அட்வென்ச்சர் பைக்கில் நிலையான தேர்வாகவே வழங்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, என்ஜின் அடித்தட்டு பாதுகாப்பான்.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கை வாங்கும் பிளானில் உள்ளீர்களா? பைக்கிற்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆக்ஸஸரீகளுக்கான விலைகள் பற்றிய விபரங்கள் தற்போதைக்கு கிடைக்க பெறவில்லை. இந்த ஆக்ஸஸரீகளுடன் புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ராலி தொகுப்பும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ராலி தொகுப்பின் மூலம் மிக முக்கிய அம்சமாக, அட்வென்ச்சர் பயணங்களுக்கு ஏற்ற நீண்ட டிராவல் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பை பெறலாம்.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கை வாங்கும் பிளானில் உள்ளீர்களா? பைக்கிற்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

அத்துடன் தட்டையான இருக்கை அமைப்பு, க்னோபி பேட்டர்னில் டயர்கள் மற்றும் புதிய பக்கவாட்டு-ஸ்டாண்ட் உள்ளிட்டவையும் இந்த ராலி தொகுப்பில் அடங்குகின்றன. புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கில் நிலையான அம்சங்களாக, எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட் மற்றும் ப்ளூடூத் இணைப்பு முதலியவை வழங்கப்படுகின்றன.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கை வாங்கும் பிளானில் உள்ளீர்களா? பைக்கிற்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

ஹீரோ மோட்டோகார்பின் புதிய எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் விலை ரூ.1,28,150ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் 2-வால்வு வெர்சனின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1,23,150 ஆக உள்ளது. இவை இரண்டிற்கும் இடையே என்ஜின் அமைப்பில் பொருத்தப்படும் வால்வுகளின் எண்ணிக்கை தான் மிக முக்கியமான வித்தியாசமாக உள்ளது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கை வாங்கும் பிளானில் உள்ளீர்களா? பைக்கிற்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

இவை இரண்டிலும் 199.6சிசி சிங்கிள்-சிலிண்டர், ஃபுயுல்-இன்ஜெக்‌ஷன், ஆயில் கூல்டு என்ஜின் தான் வழங்கப்படுகிறது. ஆனால் 4-வால்வுகளினால் புதிய வெர்சனில் 1 பிஎச்பி மற்றும் 0.50 என்எம் டார்க் திறன் அதிகமாக, அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-இல் 18.8 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 17.35 என்எம் டார்க் திறன் கிடைக்கும். இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கை வாங்கும் பிளானில் உள்ளீர்களா? பைக்கிற்கான ஆக்ஸஸரீகளை பற்றி தெரிஞ்சிக்கோங்க

ட்ரைல் ப்ளூ, பிளிட்ஸ் ப்ளூ மற்றும் சிவப்பு ரைடு என்கிற மூன்று விதமான நிறத்தேர்வுகள் புதிய எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 37மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணிக்கு இரு சக்கரங்களிலும் பெடல்-டைப் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்படுகின்றன.

Most Read Articles

English summary
Hero XPulse 200 4V accessories listed on company’s website.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X