திருப்பத்திற்கு திருப்பம் நேவிகஷன் தகவல் தரும் வசதியுடன் கிளாமர் எக்ஸ்டெக் அறிமுகம்! இதோட விலை ரொம்ப கம்மி!

அதிக சிறப்பு வசதிகளுடன் ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

திருப்பத்திற்கு திருப்பம் நேவிகஷன் தகவல் தரும் வசதியுடன் கிளாமர் எக்ஸ்டெக் அறிமுகம்! இதோட விலை ரொம்ப கம்மி!

நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ கிளாமர் பைக்கில் எக்ஸ்டெக் (Glamour Xtec) எனும் புதிய தேர்வை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் வழக்கமான கிளாமர் பைக்கில் இருப்பதைக் காட்டிலும் கூடுதல் சிறப்பு வசதிகளை நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது.

திருப்பத்திற்கு திருப்பம் நேவிகஷன் தகவல் தரும் வசதியுடன் கிளாமர் எக்ஸ்டெக் அறிமுகம்! இதோட விலை ரொம்ப கம்மி!

ப்ளூடூத் இணைப்பு, திருப்பத்திற்கு திருப்பம் தகவல் வழங்கும் வகையில் நேவிகேஷன் மற்றும் எல்இடி ஹெட்லேம்பே என பல தொழில்நுட்ப வசதிகள் இப்பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இதுபோன்று பல்வேறு சிறப்பு வசதிகளை கிளாமர் எக்ஸ்டெக் பெற்றிருப்பதனால் இது வழக்கமான கிளாமர் பைக்கைக் காட்டிலும் கூடுதல் விலைக் கொண்டதாக காட்சியளிக்கிறது.

திருப்பத்திற்கு திருப்பம் நேவிகஷன் தகவல் தரும் வசதியுடன் கிளாமர் எக்ஸ்டெக் அறிமுகம்! இதோட விலை ரொம்ப கம்மி!

புதிய ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக் பைக்கிற்கு ஆரம்ப விலையாக ரூ. 78,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ட்ரம் பிரேக் வேரியண்டின் விலையாகும். இதே மாடலில் டிஸ்க் பிரேக் வசதிக் கொண்டிருக்கும் வேரியண்டின் விலை ரூ. 83,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்திற்கு திருப்பம் நேவிகஷன் தகவல் தரும் வசதியுடன் கிளாமர் எக்ஸ்டெக் அறிமுகம்! இதோட விலை ரொம்ப கம்மி!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மிக விரைவில் கிளாமர் எக்ஸ்டெக் பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தமாதிரியான சூழ்நிலையிலேயே நாட்டின் ஜாம்பவான் நிறுவனம் புதிய தேர்வை இந்தியாவில் களமிறக்கியிருக்கின்றது.

திருப்பத்திற்கு திருப்பம் நேவிகஷன் தகவல் தரும் வசதியுடன் கிளாமர் எக்ஸ்டெக் அறிமுகம்! இதோட விலை ரொம்ப கம்மி!

இதன் அறிமுகம் ஹீரோ நிறுவனத்தின் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் எக்ஸ்-டெக், அண்மையில் அறிமுகமான 100 மில்லியன் சிறப்பு எடிசன் பைக்குகளைக் காட்டிலும் ரூ. 3 ஆயிரம் அதிக விலைக் கொண்டவையாக இருக்கின்றது.

திருப்பத்திற்கு திருப்பம் நேவிகஷன் தகவல் தரும் வசதியுடன் கிளாமர் எக்ஸ்டெக் அறிமுகம்! இதோட விலை ரொம்ப கம்மி!

கூடுதல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்ற ஒற்றைக் காரணத்தினாலேயே இந்த மூவாயிரம் ரூபாய் அதிக விலையை எக்ஸ்டெக் கொண்டிருக்கின்றது. மேலே கூறப்பட்ட ப்ளூடூத் இணைப்பு வசதி, நேவிகேஷன் வசதிகள் மட்டுமின்றி, செல்போன் சார்ஜர் வசதி, சைடு ஸ்டாண்டு போட்டால் எஞ்ஜினை ஆஃப் செய்யும் வசதி, ஆங்கிள் சென்சார் மற்றும் சில முக்கிய அம்சங்கள் கிளாமர் எக்ஸ்டெக் பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன.

திருப்பத்திற்கு திருப்பம் நேவிகஷன் தகவல் தரும் வசதியுடன் கிளாமர் எக்ஸ்டெக் அறிமுகம்! இதோட விலை ரொம்ப கம்மி!

இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் தொழில்நுட்ப வசதிக் கொண்ட கிளாமர் எக்ஸ்டெக் பைக்கை ஹீரோ உருவாக்கியிருக்கின்றது. இது அதிக தொழில்நுட்ப வசதிகளை விரும்பும் வாடிக்கையாளர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருப்பத்திற்கு திருப்பம் நேவிகஷன் தகவல் தரும் வசதியுடன் கிளாமர் எக்ஸ்டெக் அறிமுகம்! இதோட விலை ரொம்ப கம்மி!

ப்ளூடூத் வாயிலாக பைக்கையும், செல்போனையும் இணைக்கையில் செல்போனுக்கு வரும் அழைப்புகளை பைக்கில் உள்ள திரையில் நம்மால் பெற முடியும். அதாவது செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இத்துடன், கியரின் நிலை, டேகோ மீட்டர், மைலேஜ் அளவு உள்ளிட்ட முக்கிய தகவல்களையும் பைக்கில் உள்ள திரை வழங்கும்.

திருப்பத்திற்கு திருப்பம் நேவிகஷன் தகவல் தரும் வசதியுடன் கிளாமர் எக்ஸ்டெக் அறிமுகம்! இதோட விலை ரொம்ப கம்மி!

தொடர்ந்து, ஹீரோ எக்ஸ்டெக் பைக்கில் ஐந்து-நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் பைக்கின் பின் பக்கத்தில் ஹீரோ பயன்படுத்தியிருக்கின்றது. இத்துடன், 240 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக், எச் வடிவிலான மின் விளக்கு, நீல நிற கூறுகள் உள்ளிட்டவையும் இப்பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்திற்கு திருப்பம் நேவிகஷன் தகவல் தரும் வசதியுடன் கிளாமர் எக்ஸ்டெக் அறிமுகம்! இதோட விலை ரொம்ப கம்மி!

ஹீரோ எக்ஸ்டெக் பைக்கில் சிறந்த திறன்பாட்டிற்காக 125சிசியை வெளியப்படுத்தக் கூடிய பிஎஸ்-6 சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 10.7 பிஎச்பி மற்றும் 10.6 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இந்த எஞ்ஜினில் ப்யூவல் இன்ஜெக்சன் வசதி வழங்கப்பட்டிருப்பதால் பிஎஸ்4 வாகனத்தைக் காட்டிலும் 7 சதவீத எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

Most Read Articles

English summary
Hero MotoCorp Launched 'Xtec' Avatar Of It's Popular Motorcycle Model Glamour. Read In Tamil.
Story first published: Tuesday, July 20, 2021, 17:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X