அறிமுகத்திற்கு வேகமாக தயாராகும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி (4-வால்வு) பைக்கின் அறிமுகத்திற்கு முன்னதாக டீசர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகத்திற்கு வேகமாக தயாராகும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

இந்த புதிய டீசர் வெளியீட்டால் இந்தியாவின் மலிவான அட்வென்ச்சர் பைக்காக விளங்கும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200-இல் கொண்டுவரப்படும் இந்த புதிய வெர்சனை மிக விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

அறிமுகத்திற்கு வேகமாக தயாராகும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

எக்ஸ்பல்ஸ் 200 4வி மாதிரி ஒன்று சமீபத்தில் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது கிடைக்க பெற்றிருந்த ஸ்பை படங்களில் நீலம் மற்றும் வெள்ளை கலந்த நிறத்தில் பைக் காட்சியளித்து இருந்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவிலும் இதே நிறத்தில் தான் பைக் உள்ளது. நீலம் நிறம் அட்டகாசமான டிசைனிலான கிராஃபிக்ஸாக பைக்கின் ஃபெண்டரில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பெயிண்ட் தேர்வு ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200-இல் வழங்கப்பட உள்ளது உறுதியாகிவிட்டது.

அறிமுகத்திற்கு வேகமாக தயாராகும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

இத்துடன் கருப்பு-நீலம் என்ற நிறத்தேர்விலும் இந்த மோட்டார்சைக்கிளை ஹீரோ விற்பனைக்கு கொண்டுவரலாம். ஏனெனில் இவ்வாறான பெயிண்ட்டிலும் பைக் சோதனை ஓட்டத்தில் அடையாளம் காணப்பட்டு இருந்தது. இதனை காட்டிலும் மிக முக்கியமான அப்கிரேட் பைக்கின் என்ஜின் அமைப்பில் தான் கொண்டுவரப்பட உள்ளது.

அறிமுகத்திற்கு வேகமாக தயாராகும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

வழக்கமான எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் 199.6சிசி சிங்கிள்-சிலிண்டர், 2-வால்வு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த புதிய எக்ஸ்பல்ஸில் இதே என்ஜின் 2 வால்விற்கு பதிலாக கூடுதலாக நான்கு வால்வுகளுடன் வழங்கப்பட உள்ளன. இதன் காரணமாக இந்த புதிய பைக்கில் கூடுதல் என்ஜின் ஆற்றல் மற்றும் எரிபொருள் செயல்திறன் அதிகரிப்பு உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கிறோம்.

அறிமுகத்திற்கு வேகமாக தயாராகும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

அதுமட்டுமில்லாமல் 4-வால்வு என்ஜினால் நிச்சயமாக பைக்கின் இயக்கம் மேலும் மென்மையானதாக மாறிவிடும். ஸ்டாண்டர்ட் எக்ஸ்பல்ஸ் 200-இன் 2-வால்வு என்ஜின் அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-இல் 17.8 பிஎச்பி மற்றும் 6500 ஆர்பிஎம்-இல் 16.45 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

அறிமுகத்திற்கு வேகமாக தயாராகும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

இதுதவிர்த்து பைக்கின் மற்ற மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இருக்காது. ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 பைக்கில் சஸ்பென்ஷனிற்கு முன்பக்கத்தில் 190மிமி டிராவல் உடன் 37மிமீ-இல் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 10-வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன.

அறிமுகத்திற்கு வேகமாக தயாராகும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

வாகனத்தை நிறுத்த முன் மற்றும் பின் சக்கரங்களில் 276மிமீ மற்றும் 220மிமீ அளவுகளில் டிஸ்க்குகள், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் வழங்கப்படுகின்றன. இவ்வாறு டீசர் படங்களை வெளியிட்டும், சோதனை ஓட்டங்களையும் மேற்கொண்டு வந்தாலும், எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் அறிமுக தேதியை தற்போதுவரையில் ஹீரோ மோட்டோகார்ப் அறிவிக்கவில்லை.

அறிமுகத்திற்கு வேகமாக தயாராகும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

இந்த அட்டேட் வெர்சன் எக்ஸ்பல்ஸ் 200 4வி மோட்டார்சைக்கிளை ஹீரோ நிறுவனம் இன்னும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தலாம். தற்போதைய எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விலை ரூ.1.23 லட்சமாக உள்ளது. புதிய 4-வால்வு வெர்சனின் விலையினை இதனை காட்டிலும் சற்று அதிகமாக எதிர்பார்க்கிறோம்.

அறிமுகத்திற்கு வேகமாக தயாராகும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

சமீபத்தில் தான் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் டாப்பிள் அலர்ட் சிஸ்டம் என்கிற தொழிற்நுட்ப வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இத்தகைய இணைப்பு தொழிற்நுட்பம் தற்போது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களிலும் கிடைக்க துவங்கியுள்ளது.

அறிமுகத்திற்கு வேகமாக தயாராகும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

செல்போனின் உதவியுடன் செயல்படும் இந்த வசதியானது மோட்டார்சைக்கிள் ஒருவேளை விபத்தில் சிக்கினாலோ அல்லது கவிழ்ந்தாலோ உடனே இந்த தொழிற்நுட்பத்தின் வாயிலாக பைக் உடன் இணைக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிற்கு குறுஞ்செய்தி விபத்து குறித்து சென்றுவிடும். அதுமட்டுமின்றி மோட்டார்சைக்கிளை பயன்படுத்துபவர் அங்கீகரிக்கப்படாத இடத்திற்கு சென்றாலும் அது குறித்து உரிமையாளருக்கு தெரிவித்துவிடுமாம்.

அறிமுகத்திற்கு வேகமாக தயாராகும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

ரூ.4,999 என்கிற வருட சந்தா அடிப்படையில் இந்த வசதி எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வசதியை இந்த பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் டீலர்களை தயார்படுத்தி வருகிறது. எக்ஸ்பல்ஸ்200 பைக்கை தொடர்ந்து மேலும் சில தயாரிப்புகளிலும் இந்த வசதியை அறிமுகப்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Hero Xpulse 200 4V Officially Teased, Launch Just Around the Corner.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X