ஹீரோ நிறுவனத்தால் மட்டுமே இதெல்லாம் முடியும்!! ஒரே நாளில் 1 லட்ச வாகனங்களை விற்பனை செய்தது!

ஒரே நாளில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சுமார் ஒரு லட்ச இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹீரோ நிறுவனத்தால் மட்டுமே இதெல்லாம் முடியும்!! ஒரே நாளில் 1 லட்ச வாகனங்களை விற்பனை செய்தது!

ஜப்பானிய ஹோண்டா நிறுவனத்துடனான கூட்டணியில் இருந்து விலகி, கிட்டத்தட்ட 10 வருடங்களாக தனி நிறுவனமாக செயல்பட்டு வருவதாக ஹீரோ மோட்டோகார்ப் கொண்டாடி வருகிறது. அதுமட்டுமின்றி ஹீரோவின் கொண்டாட்டத்திற்கு வேறு இரு காரணங்களும் உள்ளன.

ஹீரோ நிறுவனத்தால் மட்டுமே இதெல்லாம் முடியும்!! ஒரே நாளில் 1 லட்ச வாகனங்களை விற்பனை செய்தது!

ஒன்று, மிக பெரிய அளவில் பிராண்டின் லோகோவை தயாரிப்பு வாகனங்களை கொண்டே உருவாக்கியதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. இந்த உலக சாதனையை நிகழ்த்த மொத்தம் 1,845 ஸ்பிளெண்டர் பைக்குகள் பயன்படுத்தப்பட்டன, இதனை பற்றி நமது செய்திதளத்திலும் பார்த்திருந்தோம்.

ஹீரோ நிறுவனத்தால் மட்டுமே இதெல்லாம் முடியும்!! ஒரே நாளில் 1 லட்ச வாகனங்களை விற்பனை செய்தது!

ஆந்திர பிரதேசம், சித்தூரில் உள்ள ஹீரோ மோட்டோகார்பின் தொழிற்சாலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வு திட்டமிட்டு செய்யப்பட்டதாகும். ஆனால் ஹீரோ தற்போதைய கொண்டாட்டத்திற்கு மற்றொன்று காரணம் திடீரென உருவானதாகும். அதுதான், ஒரே நாளில் ஒரு லட்ச ஹீரோ மோட்டார்சைக்கிள்கள் விற்பனை.

ஹீரோ நிறுவனத்தால் மட்டுமே இதெல்லாம் முடியும்!! ஒரே நாளில் 1 லட்ச வாகனங்களை விற்பனை செய்தது!

ஒரு லட்சம் என்பது இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஒரே நாளில் விற்பனை செய்யப்பட்ட ஹீரோ மோட்டோகார்பின் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை ஆகும். அதேபோல், இந்த விற்பனை எண்ணிக்கையில் மலிவான இருசக்கரங்கள் மட்டுமின்றி, அதிக விலை கொண்ட பிரீமியம் தரத்திலான இருசக்கர வாகனங்களும் பெரிய அளவில் அடங்குவதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹீரோ நிறுவனத்தால் மட்டுமே இதெல்லாம் முடியும்!! ஒரே நாளில் 1 லட்ச வாகனங்களை விற்பனை செய்தது!

இதுகுறித்து ஹீரோ மோட்டோகார்பின் விற்பனை & மறுவிற்பனை பிரிவின் தலைமை அதிகாரியான நவீன் சாகன் கருத்து தெரிவிக்கையில், எங்கள் வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 9ஆம் தேதி ‘ஹீரோ தினம்'-ஐ கொண்டாடும் விதமாக எங்களது தயாரிப்புகளை அதிக எண்ணிக்கையில் வாங்கி, எங்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் வெளிக்காட்டியுள்ளனர் என்றார்.

ஹீரோ நிறுவனத்தால் மட்டுமே இதெல்லாம் முடியும்!! ஒரே நாளில் 1 லட்ச வாகனங்களை விற்பனை செய்தது!

2011 ஆகஸ்ட் 9ஆம் தேதி லண்டனில், ஒ2 அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹீரோ நிறுவனம் தனது புதிய அடையாளத்தை வெளியிட்டு இருந்தது. ஆனால் அப்போது ஹீரோ மோட்டோகார்பின் எதிர்காலம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதற்கெல்லாம் தனது தயாரிப்புகளின் மூலமாகவும், வலிமையான வளர்ச்சியின் மூலமாகவும் ஹீரோ பதிலளித்து வருகிறது.

ஹீரோ நிறுவனத்தால் மட்டுமே இதெல்லாம் முடியும்!! ஒரே நாளில் 1 லட்ச வாகனங்களை விற்பனை செய்தது!

இந்த பிராம்மாண்ட விற்பனையில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், ஹீரோ ஸ்கூட்டர்களின் விற்பனை இரட்டிப்பாகி உள்ளதுதான். இதில் மேஸ்ட்ரோ 125, டெஸ்டினி மற்றும் பிளஷர் 110 உள்ளிட்ட ஹீரோ ஸ்கூட்டர்கள் அடங்குகின்றன. இதில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் சமீபத்தில் புதியதாக இணைப்பு வசதியை பெற்றிருந்தது.

ஹீரோ நிறுவனத்தால் மட்டுமே இதெல்லாம் முடியும்!! ஒரே நாளில் 1 லட்ச வாகனங்களை விற்பனை செய்தது!

அதேபோல் ஹீரோ நிறுவனத்தின் இந்த உலக சாதனை விற்பனையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட க்ளாமர் எக்ஸ்டெக், ஸ்பிளெண்டர் மேட் ஷீல்டு கோல்டு மற்றும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் மோட்டார்சைக்கிள்களின் பங்கும் அதிகம். இதில் கிளாமர் மாடலின் அப்டேட் வெர்சன் விரைவில் அறிமுகமாக உள்ளது.

ஹீரோ நிறுவனத்தால் மட்டுமே இதெல்லாம் முடியும்!! ஒரே நாளில் 1 லட்ச வாகனங்களை விற்பனை செய்தது!

ஏனென்றால் ஹீரோ கிளாமர் போன்ற பைக்குகள் இந்தியா மட்டுமின்றி பல வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ளன. ஆதலால் அவ்வப்போது அப்கிரேட்களை கொண்டுவருவது அவசியமாகும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த விஷயத்தில் கவனமாக செயல்படக்கூடியது.

ஹீரோ நிறுவனத்தால் மட்டுமே இதெல்லாம் முடியும்!! ஒரே நாளில் 1 லட்ச வாகனங்களை விற்பனை செய்தது!

இதனால் தான் புதிய புதிய நாடுகளில் வணிகத்தை துவங்க இந்த முன்னணி இந்திய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தினால் முடிகிறது. சமீபத்தில் கூட மெக்ஸிகோவில் களம் புகுந்து இருந்தது. இதற்கு ஹீரோ நிறுவன ஊழியர்களின் கடின உழைப்பே முழுக்க முழுக்க காரணம் என்றால் அதில் சந்தேகம் இல்லை.

ஹீரோ நிறுவனத்தால் மட்டுமே இதெல்லாம் முடியும்!! ஒரே நாளில் 1 லட்ச வாகனங்களை விற்பனை செய்தது!

இந்தியாவில் தற்சமயம் 13 பைக் இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில் மலிவான ஹீரோ மோட்டார்சைக்கிளாக எச்.எஃப் டீலக்ஸ் ரூ.49,982 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்கூட்டர்களில் 110சிசி பிளஷர் மாடல் ஆரம்ப நிலையில் உள்ளது. இதன் விலை ரூ.62,437 ஆக உள்ளது.

ஹீரோ நிறுவனத்தால் மட்டுமே இதெல்லாம் முடியும்!! ஒரே நாளில் 1 லட்ச வாகனங்களை விற்பனை செய்தது!

ஹீரோ ஸ்கூட்டர்களில் அதிகப்பட்சமாக மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ரூ.73,478 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மோட்டார்சைக்கிள்களில் அதிகப்பட்சமாக 200சிசி வரையில் மட்டுமே ஹீரோ தயாரிக்கிறது. இதில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,23,198 ஆகும்.

Most Read Articles

English summary
Hero MotoCorp Sells One Lakh Two-Wheelers In A Day Across The World.
Story first published: Tuesday, August 17, 2021, 22:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X