தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டது ஹீரோ... ஆஹா ஸ்டைலு செம்மையா இருக்கே!

ஹீரோ மோட்டோகார்ப் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டது ஹீரோ... ஆஹா ஸ்டைலு செம்மையா இருக்கே!

ஹீரோ-ஹோண்டா கூட்டணியின் சகாப்தம் 2011ம் ஆண்டுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் இந்தியாவில் தனி-தனியாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தையே ஹீரோ மோட்டோகார்ப் தற்போது அனுசரித்து வருகின்றது.

தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டது ஹீரோ... ஆஹா ஸ்டைலு செம்மையா இருக்கே!

மேலும், இத்தினத்தை முன்னிட்டு நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் தலைவர், நிர்வாகன இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பவன் முஞ்சல் ஸ்கூட்டரின் படத்தை வெளியிட்டார்.

தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டது ஹீரோ... ஆஹா ஸ்டைலு செம்மையா இருக்கே!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முழு படமும் வெளியிடப்படவில்லை. வெறும், அதன் பக்கவாட்டு தோற்றம் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த முக்கிய விபரங்களை ஹீரோ மிக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டது ஹீரோ... ஆஹா ஸ்டைலு செம்மையா இருக்கே!

அதேசமயம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது என்ற தகவல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பவன் முயஞ்சல் உறுதிப்படுத்தியுள்ளார். ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ப பற்றி முக்கிய தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், தற்போது வெளியாகியிருக்கும் படங்கள் வாயிலாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டது ஹீரோ... ஆஹா ஸ்டைலு செம்மையா இருக்கே!

அதாவது, ஹீரோ மோட்டோகார்ப்பின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 12 இன்சிலான வீல் முன் பக்கத்திலும், 10 இன்சிலான வீல் பின் பக்கத்திலும் இடம் பெற இருக்கின்றது. இத்துடன், சிறந்த பயண அனுபவத்திற்காக முன் பக்க வீலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்க வீலில் மோனோஷாக் அப்சார்பரும் இடம் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டது ஹீரோ... ஆஹா ஸ்டைலு செம்மையா இருக்கே!

தொடர்ந்து, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நவீன கால தோற்றத்தில் கவர்ச்சியான ஸ்டைலைக் கொண்டிருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. சாய்வான ஏப்ரான், சிறிய ஃப்ளை திரை என கூடுதல் கவர்ச்சிக்கான வேலைகளும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டது ஹீரோ... ஆஹா ஸ்டைலு செம்மையா இருக்கே!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காகவே தாய்வான் நிறுவனத்துடன் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இந்த கூட்டணியானது கடந்த ஏப்ரல் மாதமே தொடங்கிவிட்டது. கோகோரோ எனும் நிறுவனத்துடனே அது கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.

தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டது ஹீரோ... ஆஹா ஸ்டைலு செம்மையா இருக்கே!

இந்நிறுவனமே ஹீரோவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான ஸ்வாப்பபிள் (கழட்டி மாட்டக் கூடிய) பேட்டரியை தயாரித்து வருகின்றது. இந்த கூட்டணியின் அடிப்படையிலேயே எதிர்கால ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான பேட்டரியும் தயாரிக்கப்பட இருக்கின்றது.

தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டது ஹீரோ... ஆஹா ஸ்டைலு செம்மையா இருக்கே!

இந்தியாவில் மின் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. கடந்த காலங்களைக் காட்டிலும் நடப்பாண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஹீரோ மோட்டோகார்ப் அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டிருக்கின்றது.

தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டது ஹீரோ... ஆஹா ஸ்டைலு செம்மையா இருக்கே!

இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமில்லைங்க மிக விரைவில் இன்னும் பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. மிக முக்கியமாக ஓலா மற்றும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டது ஹீரோ... ஆஹா ஸ்டைலு செம்மையா இருக்கே!

இந்த இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் வரும் 15ம் தேதி விற்பனைக்கு வர இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தினத்திலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை மற்றும் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம் பெற இருக்கின்றன என்பது போன்ற பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாக இருக்கின்றன.

தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் படத்தை வெளியிட்டது ஹீரோ... ஆஹா ஸ்டைலு செம்மையா இருக்கே!

எனவே, வரும் ஆகஸ்டு 15ம் தேதி இந்தியர்களுக்கு ஓர் மறக்க முடியாத நாளாக அமைய இருக்கின்றது. குறிப்பாக, மின் வாகன பிரியர்களுக்கு வரும் சுதந்திர தினம் மிகவும் சிறந்த நாளாக அமைய இருக்கின்றது. இந்த நாளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி இன்னும் சில புதுமுக வாகனங்களும் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் அதன் ஏழு இருக்கைகள் வசதிக் கொண்ட எக்ஸ்யூவி 700 காரை வரும் 15ம் தேதி அன்றே அறிமுகம் செய்ய இருக்கின்றது.

குறிப்பு: நான்காவது படத்தை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Hero motocorp reveals upcoming e scooter side profile picture
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X