எக்ஸ்ட்ரீம் 200எஸ் & 160ஆர் பைக்குகளின் விலைகள் அதிரடியாக உயர்வு!! சொன்னதுபோல் செய்துகாட்டிய ஹீரோ

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் எக்ஸ்ட்ரீம் 200எஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்குகளின் விலைகளை கணிசமாக உயர்த்தியுள்ளது. இதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

எக்ஸ்ட்ரீம் 200எஸ் & 160ஆர் பைக்குகளின் விலைகள் அதிரடியாக உயர்வு!! சொன்னதுபோல் செய்துகாட்டிய ஹீரோ

2021 ஜனவரி மாதத்தில் இருந்து மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த 2020 டிசம்பர் மாதத்திலேயே அறிவித்திருந்தது.

எக்ஸ்ட்ரீம் 200எஸ் & 160ஆர் பைக்குகளின் விலைகள் அதிரடியாக உயர்வு!! சொன்னதுபோல் செய்துகாட்டிய ஹீரோ

அதன்படி தற்போது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் மற்றும் 200எஸ் மோட்டார்சைக்கிள்களின் விலைகள் முறையே ரூ.1,900 மற்றும் ரூ.1,500 அதிகரிக்கப்பட்டுள்ளன. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் விலை முன்பு ரூ.1,15,714ஆக இருந்தது.

எக்ஸ்ட்ரீம் 200எஸ் & 160ஆர் பைக்குகளின் விலைகள் அதிரடியாக உயர்வு!! சொன்னதுபோல் செய்துகாட்டிய ஹீரோ

ஆனால் தற்போது இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,500 அதிகரிக்கப்பட்டு ரூ.1,17,214 ஆக கொண்டுவரப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்பின் சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்றான எக்ஸ்ட்ரீம் 160ஆர் ரூ.1,02,000 என்ற ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யபட்டு வந்தது.

எக்ஸ்ட்ரீம் 200எஸ் & 160ஆர் பைக்குகளின் விலைகள் அதிரடியாக உயர்வு!! சொன்னதுபோல் செய்துகாட்டிய ஹீரோ

ஆனால் தற்போது இதன் விலை ரூ.1,900 உயர்த்தப்பட்டு 1,03,900ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ட்ரம் ப்ரேக் உடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் விலையாகும். டிஸ்க் ப்ரேக் உடன் இந்த பைக் முன்பு ரூ.1,05,050 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

எக்ஸ்ட்ரீம் 200எஸ் & 160ஆர் பைக்குகளின் விலைகள் அதிரடியாக உயர்வு!! சொன்னதுபோல் செய்துகாட்டிய ஹீரோ
Model Old Price New Price Price Hike
Xtreme 200S ₹1,15,714 ₹1,17,214 ₹1500
Xtreme 160R Drum Brake ₹1,02,000 ₹1,03,900 ₹1900
Xtreme 160R Disc Brake ₹1,05,000 ₹1,06,950 ₹1900

இதன் எக்ஸ்ஷோரூம் விலையும் தற்போது ரூ.1,900 அதிகரிக்கப்பட்டு ரூ.1,06,950ஆக கொண்டுவரப்பட்டுள்ளது. பைக்குகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இரும்பு, அலுமினியம், பிளாஸ்டிக்குகள் மற்றும் இதர உலோகங்களின் விலைகள் ஆண்டுத்தோறும் சீரான இடைவெளியில் உயர்த்தப்பட்டு வருகின்றன.

எக்ஸ்ட்ரீம் 200எஸ் & 160ஆர் பைக்குகளின் விலைகள் அதிரடியாக உயர்வு!! சொன்னதுபோல் செய்துகாட்டிய ஹீரோ

இதனை காரணமாக கூறியே தற்போது இந்த விலை அதிகரிப்பை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதனால் இந்த விலை உயர்வுக்கு ஏற்ப பைக்குகளில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

எக்ஸ்ட்ரீம் 200எஸ் & 160ஆர் பைக்குகளின் விலைகள் அதிரடியாக உயர்வு!! சொன்னதுபோல் செய்துகாட்டிய ஹீரோ

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கில் அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-ல் 17.8 பிஎச்பி மற்றும் 6500 ஆர்பிஎம்-ல் 16.45 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 199.6சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

எக்ஸ்ட்ரீம் 200எஸ் & 160ஆர் பைக்குகளின் விலைகள் அதிரடியாக உயர்வு!! சொன்னதுபோல் செய்துகாட்டிய ஹீரோ

என்ஜினின் ஆயுளை அதிகரிக்க ஆயில்-கூலரை இந்த என்ஜின் அமைப்பில் வழங்கும் ஹீரோ நிறுவனம் எக்ஸ்சென்ஸ் தொழிற்நுட்பத்துடன் ப்ரோகிராம்டு ஃப்யுல் இன்ஜெக்‌ஷன் யூனிட்டையும் இந்த 200சிசி பைக்கில் பயன்படுத்துகிறது.

எக்ஸ்ட்ரீம் 200எஸ் & 160ஆர் பைக்குகளின் விலைகள் அதிரடியாக உயர்வு!! சொன்னதுபோல் செய்துகாட்டிய ஹீரோ

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் 163சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பிராண்டின் அட்வான்ஸ்டு ப்ரோகிராம்டு ஃப்யுல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்துடன் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 8500 ஆர்பிஎம்-ல் 15 பிஎச்பி மற்றும் 6500 ஆர்பிஎம்-ல் 14 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

Most Read Articles

English summary
Hero Xtreme 200S and Hero Xtreme 160R prices increased
Story first published: Tuesday, January 5, 2021, 23:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X