டாப் கியரில் ஹீரோ ஸ்கூட்டர்களின் விற்பனை! ஆனா, பைக்குகளின் நிலமைதான் கொஞ்சம் மோசம்! என்னவானது நம்ம ஹீரோவுக்கு!

ஆண்டின் தொடக்கத்திலேயே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பைக் விற்பனை லேசான சரிவைச் சந்தித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டாப் கியரில் ஹீரோ ஸ்கூட்டர்களின் விற்பனை... ஆனா பைக்குகளின் நிலைமைதான் கொஞ்சம் மோசம்... என்னவானது நம்ம ஹீரோவுக்கு...

2021ம் ஆண்டு முதல் மாதத்தில் விற்பனையான வாகனங்கள் பற்றிய விபரங்கள் வெளி வர தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில், தான் கடந்த ஜனவரியில் எத்தனை யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்துள்ளோம் என்கிற தகவலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டாப் கியரில் ஹீரோ ஸ்கூட்டர்களின் விற்பனை... ஆனா பைக்குகளின் நிலைமைதான் கொஞ்சம் மோசம்... என்னவானது நம்ம ஹீரோவுக்கு...

இது வெளியிட்டிருக்கும் தகவலின்படி, சுமார் 4.85 லட்சம் அலகு வானங்களை விற்பனைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த ஜனவரி மாதத்தில் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையாகும்.

டாப் கியரில் ஹீரோ ஸ்கூட்டர்களின் விற்பனை... ஆனா பைக்குகளின் நிலைமைதான் கொஞ்சம் மோசம்... என்னவானது நம்ம ஹீரோவுக்கு...

இதில், மோட்டார்சைக்கிள்கள் (பைக்) 4,49,037 யூனிட்டுகளும், ஸ்கூட்டர்கள் 36,852 யூனிட்டுகளும் விற்பனையாகியிருக்கின்றன. இதனைக் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் சற்று குறைந்த விற்பனை எண்ணிக்கையாக காட்சியளிக்கின்றது.

டாப் கியரில் ஹீரோ ஸ்கூட்டர்களின் விற்பனை... ஆனா பைக்குகளின் நிலைமைதான் கொஞ்சம் மோசம்... என்னவானது நம்ம ஹீரோவுக்கு...

ஆம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2020 ஜனவரியில் ஒட்டுமொத்தமாக 5,01,622 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனையில் செய்திருந்தது. இதில், பைக்குகள் 4,94,432 அலகுகளும், ஸ்கூட்டர்கள் 7,190 அலகுகளும் ஆகும். ஆகவே கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் ஹீரோவின் ஸ்கூட்டர்கள் அதிகம் விற்பனையாகியிருப்பது தெரியவந்திருக்கின்றது.

டாப் கியரில் ஹீரோ ஸ்கூட்டர்களின் விற்பனை... ஆனா பைக்குகளின் நிலைமைதான் கொஞ்சம் மோசம்... என்னவானது நம்ம ஹீரோவுக்கு...

ஆனால், பைக்குகள் அதிகம் விற்பனையாவதில் தவறிவிட்டன. இதனையே ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டிருக்கும் தகவல் வெளிக்காட்டுகின்றது. உள்நாட்டு விற்பனைக் குறைந்த காரணத்தினாலயே இந்த விற்பனை வீழ்ச்சியை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பைக்குகள் சந்தித்துள்ளன.

டாப் கியரில் ஹீரோ ஸ்கூட்டர்களின் விற்பனை... ஆனா பைக்குகளின் நிலைமைதான் கொஞ்சம் மோசம்... என்னவானது நம்ம ஹீரோவுக்கு...

கடந்த 2020ம் ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டின் ஜனவரியில் ஏற்றுமதி செயலும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. அதாவது, 2020 ஜனவரியில்13,553 யூனிட்டுகளாக இருந்த ஏற்றுமதி இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 18,113 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளன. ஆகையால், உள் மற்றும் பைக்குகளின் விற்பனைக் குறைந்த காரணத்தினால் ஹீரோ மோட்டோகார்ப் லேசான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது.

டாப் கியரில் ஹீரோ ஸ்கூட்டர்களின் விற்பனை... ஆனா பைக்குகளின் நிலைமைதான் கொஞ்சம் மோசம்... என்னவானது நம்ம ஹீரோவுக்கு...

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகன உற்பத்தி மையம் உத்தர்காண்ட் மாநிலத்தின் ஹரிதுவார் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பிளாணட்டில் வைத்து தயாரிக்கப்பட்ட 100 மில்லியன் (10 கோடி) என்ற எண்ணைக் குறிக்கக் கூடிய பைக்கின் வெளியேற்றம் நிகழ்வை வெகு விமர்சியாக நிறுவனம் கொண்டாடியது.

டாப் கியரில் ஹீரோ ஸ்கூட்டர்களின் விற்பனை... ஆனா பைக்குகளின் நிலைமைதான் கொஞ்சம் மோசம்... என்னவானது நம்ம ஹீரோவுக்கு...

100 மில்லியன் என்ற எண்ணில் தயாரிக்கப்பட்டது எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்காகும். இது உற்பத்தி ஆலையை விட்டு வெளியேறும் புகைப்படத்தை வெளியிட்டு அதன் மகிழ்ச்சியை அதன் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டது ஹீரோ. தொடர்ந்து, ஸ்பெஷலாக "கொண்டாட்டம் பதிப்பு" என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆறு புதிய இருசக்கர வாகனங்களையும் நிறுவனம் வெளியீடு செய்தது.

டாப் கியரில் ஹீரோ ஸ்கூட்டர்களின் விற்பனை... ஆனா பைக்குகளின் நிலைமைதான் கொஞ்சம் மோசம்... என்னவானது நம்ம ஹீரோவுக்கு...

ஸ்பிளெண்டர் ப்ளஸ், எக்ஸ்ட்ரீம் 160ஆர், பேஷன் ப்ரோ மற்றும் கிளாமர் ஆகிய பைக்குகளையும், டெஸ்டினி 125 மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஆகிய ஸ்கூட்டர்களையும் ஹீரோ அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்பெஷல் பதிப்பு இருசக்கர வாகனங்கள் இந்த மாதம் முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Hero MotoCorp Sold 4,85,889 Units Of Motorcycles & Scooters In January 2021. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X