கரிஷ்மா இடத்தை நிரப்ப ஹீரோ தயாரிக்கும் புதிய பைக்!! ராயல் என்பீல்டு பைக்குகள் முன் தாக்குப்பிடிக்குமா?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய மிடில்வெய்ட் மோட்டார்சைக்கிளின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

கரிஷ்மா இடத்தை நிரப்ப ஹீரோ தயாரிக்கும் புதிய பைக்!! ராயல் என்பீல்டு பைக்குகள் முன் தாக்குப்பிடிக்குமா?

இந்தியாவில் மிடில்வெய்ட் மோட்டார்சைக்கிள் பிரிவு வேகமாக விரிவடைந்து வருகிறது. 350சிசி-இல் ஆரம்பிக்கும் இந்த பிரிவு அதிகப்பட்சமாக 650- 700சிசி வரையில் உள்ளது.

கரிஷ்மா இடத்தை நிரப்ப ஹீரோ தயாரிக்கும் புதிய பைக்!! ராயல் என்பீல்டு பைக்குகள் முன் தாக்குப்பிடிக்குமா?

இந்த பிரிவை தற்சமயம் ராயல் என்பீல்டு நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இப்படி இருக்க, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் மிடில்வெய்ட் பிரிவில் புதியதாக மோட்டார்சைக்கிள் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது என தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

கரிஷ்மா இடத்தை நிரப்ப ஹீரோ தயாரிக்கும் புதிய பைக்!! ராயல் என்பீல்டு பைக்குகள் முன் தாக்குப்பிடிக்குமா?

இந்தியா, உலகின் மிக பெரிய ஆட்டொமொபைல் சந்தை. இதனால் தான் இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் உலகளவிலும் மிக பெரிய பிராண்டாக உள்ளது.

கரிஷ்மா இடத்தை நிரப்ப ஹீரோ தயாரிக்கும் புதிய பைக்!! ராயல் என்பீல்டு பைக்குகள் முன் தாக்குப்பிடிக்குமா?

ஹீரோ நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி-டேவிட்சன் உடன் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட இந்த கூட்டணியின்படி 500சிசி மோட்டார்சைக்கிள் ஒன்றை ஹார்லி-டேவிட்சன் பிராண்டிற்காக ஹீரோ தயாரிக்கவுள்ளது.

கரிஷ்மா இடத்தை நிரப்ப ஹீரோ தயாரிக்கும் புதிய பைக்!! ராயல் என்பீல்டு பைக்குகள் முன் தாக்குப்பிடிக்குமா?

இந்த விஷயம் ஏற்கனவே தெரிந்ததுதான். புதியது என்னவென்றால், இதே மோட்டார்சைக்கிள் ஹீரோ பிராண்டிலும் வெளிவரவுள்ளதாம். இதனை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதன்மை பொருளாதார அதிகாரியான நிரஞ்சன் குப்தா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கரிஷ்மா இடத்தை நிரப்ப ஹீரோ தயாரிக்கும் புதிய பைக்!! ராயல் என்பீல்டு பைக்குகள் முன் தாக்குப்பிடிக்குமா?

ஏனெனில் மிடில்வெய்ட் மோட்டார்சைக்கிள் பிரிவுதான் மிகவும் இலாபகரமான பிரிவாக இருப்பதாகவும், இதற்காகவே ஹார்லி-டேவிட்சன் உடன் கூட்டணி சேர்ந்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார். ஒரு வேளை இது நடந்தால் கரிஷ்மாவிற்கு பிறகு 225சிசி-க்கு மேல் தயாராகும் இரண்டாவது ஹீரோ பைக்காக இது விளங்கும்.

கரிஷ்மா இடத்தை நிரப்ப ஹீரோ தயாரிக்கும் புதிய பைக்!! ராயல் என்பீல்டு பைக்குகள் முன் தாக்குப்பிடிக்குமா?

இந்த 500சிசி மோட்டார்சைக்கிள்கள் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த தெளிவான விபரமும் எதுவும் தற்போதைக்கு இல்லை. ஆனால் இந்த மோட்டார்சைக்கிள்களை தயாரிக்கும் பணிகளில் ஹீரோ மற்றும் ஹார்லி-டேவிட்சன் குழுவினர் ஏற்கனவே இறங்கிவிட்டதாக குப்தா தெரிவித்துள்ளார்.

கரிஷ்மா இடத்தை நிரப்ப ஹீரோ தயாரிக்கும் புதிய பைக்!! ராயல் என்பீல்டு பைக்குகள் முன் தாக்குப்பிடிக்குமா?

இந்த மிடில்வெய்ட் மோட்டார்சைக்கிள்கள் புதிய ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், இதே பாணியில் தான் பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ், கேடிஎம், ஹஸ்க்வர்னா பிராண்ட்களுடனும், டிவிஎஸ் நிறுவனம் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் பிராண்ட் உடனும் கூட்டணி வைத்த மிடில்வெய்ட் மோட்டார்சைக்கிள்களை தயாரித்து வருகின்றன.

Most Read Articles
English summary
Hero MotoCorp Working On Middleweight Motorcycles.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X