இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பாக்கல... இனி சொந்தமா ஒரு டூவீலர் வாங்கறது கூட ரொம்ப கஷ்டம்... ஏன் தெரியுமா?

புதிதாக டூவீலர் வாங்க முடிவு செய்திருப்பவர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பாக்கல... இனி சொந்தமா ஒரு டூவீலர் வாங்கறது கூட ரொம்ப கஷ்டம்... ஏன் தெரியுமா?

நடப்பு 2021ம் ஆண்டில் புதிய வாகனங்களை வாங்கியவர்கள் மற்றும் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. ஆம், நடப்பாண்டில் வாகனங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. வரும் நாட்களிலும் பல்வேறு நிறுவனங்களுடைய வாகனங்களின் விலை உயரும் போல் தெரிகிறது.

இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பாக்கல... இனி சொந்தமா ஒரு டூவீலர் வாங்கறது கூட ரொம்ப கஷ்டம்... ஏன் தெரியுமா?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தனது இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்தவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் செப்டம்பர் 20ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த செய்தி கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பாக்கல... இனி சொந்தமா ஒரு டூவீலர் வாங்கறது கூட ரொம்ப கஷ்டம்... ஏன் தெரியுமா?

இந்த விலை உயர்வுக்கு என்ன காரணம் தெரியுமா? நீங்கள் வாகனங்களின் விலை உயர்வு குறித்த செய்திகளை தொடர்ச்சியாக படித்து கொண்டிருப்பவர் என்றால், உங்களால் காரணத்தை மிக எளிதாக யூகித்து விட முடியும். இரு சக்கர வாகன உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பாக்கல... இனி சொந்தமா ஒரு டூவீலர் வாங்கறது கூட ரொம்ப கஷ்டம்... ஏன் தெரியுமா?

இரு சக்கர வாகனங்களின் உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால், அதனை ஈடு செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும், எனவே விலையை உயர்த்துவது என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களின் விலை 3 ஆயிரம் ரூபாய் வரை உயரவுள்ளது.

இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பாக்கல... இனி சொந்தமா ஒரு டூவீலர் வாங்கறது கூட ரொம்ப கஷ்டம்... ஏன் தெரியுமா?

அந்த நிறுவனத்தின் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் என இரண்டு வகையான வாகனங்களின் விலையும் உயரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் மாடல்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடும் என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். ஒட்டுமொத்தமாக பார்த்தால், 3 ஆயிரம் ரூபாய் வரை விலை உயரவுள்ளது.

இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பாக்கல... இனி சொந்தமா ஒரு டூவீலர் வாங்கறது கூட ரொம்ப கஷ்டம்... ஏன் தெரியுமா?

ஆனால் நடப்பாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்துவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்தியது. அதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதமும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன இரு சக்கர வாகனங்கள் விலை உயர்வை சந்தித்தன.

இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பாக்கல... இனி சொந்தமா ஒரு டூவீலர் வாங்கறது கூட ரொம்ப கஷ்டம்... ஏன் தெரியுமா?

இந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு முறை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன இரு சக்கர வாகனங்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. முன்னதாக மாருதி சுஸுகி போன்ற முன்னணி கார் நிறுவனங்களும் வாகனங்களின் விலையை தொடர்ச்சியாக உயர்த்தி வருகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பாக்கல... இனி சொந்தமா ஒரு டூவீலர் வாங்கறது கூட ரொம்ப கஷ்டம்... ஏன் தெரியுமா?

தற்போது கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பேருந்து மற்றும் ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். அத்துடன் கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசும் அவ்வப்போது பொது போக்குவரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து விடுகிறது.

இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பாக்கல... இனி சொந்தமா ஒரு டூவீலர் வாங்கறது கூட ரொம்ப கஷ்டம்... ஏன் தெரியுமா?

ஊரடங்கு காரணமாக பேருந்து சேவைகள் திடீரென ரத்து செய்யப்படுகின்றன. அல்லது இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் தற்போது அனைவர் வீட்டிலும் சொந்தமாக ஒரு வாகனம் இருக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால் இத்தகைய இக்கட்டான நேரத்தில் வாகனங்களின் விலை உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களை கவலையடைய செய்துள்ளது.

இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பாக்கல... இனி சொந்தமா ஒரு டூவீலர் வாங்கறது கூட ரொம்ப கஷ்டம்... ஏன் தெரியுமா?

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருவது அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி கொண்டுள்ளது. ஆனால் இதன் காரணமாக வாகனங்களின் விற்பனை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பாக்கல... இனி சொந்தமா ஒரு டூவீலர் வாங்கறது கூட ரொம்ப கஷ்டம்... ஏன் தெரியுமா?

ஏனெனில் இந்தியாவில் விரைவில் பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. இதை முன்னிட்டு புதிய இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை வாங்குவதற்கு பலரும் திட்டமிட்டுள்ளனர். எனவே தொடர்ச்சியாக விலை உயர்ந்தாலும், வாகனங்களின் விற்பனையில் பெரிய அளவில் சரிவு ஏற்படுவதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Most Read Articles

English summary
Hero motocorp to increase prices of bikes and scooters from september 20 check details here
Story first published: Friday, September 17, 2021, 13:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X