இந்தளவிற்கு புக்கிங்கை எதிர்பார்க்கவே இல்ல!! பிரம்மித்து போன ஓலா சிஇஓ! ஜெய்ச்சிட்டீங்க மாறா...

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு மெல்ல மெல்ல பெருகி வருகிறது. குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்தளவிற்கு புக்கிங்கை எதிர்பார்க்கவே இல்ல!! பிரம்மித்து போன ஓலா சிஇஓ! ஜெய்ச்சிட்டீங்க மாறா...

இதானலேயே புதிய புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பில் இறங்கி வருகின்றன. இந்த வகையில் கேப் சேவையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஓலா க்ரூப் அதன் எலக்ட்ரிக் வாகன பிரிவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்தளவிற்கு புக்கிங்கை எதிர்பார்க்கவே இல்ல!! பிரம்மித்து போன ஓலா சிஇஓ! ஜெய்ச்சிட்டீங்க மாறா...

இதன்படி ஓலா பிராண்டில் இருந்து வெளிவரவுள்ள முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வெறும் ரூ.499 என்கிற முன் தொகையுடன் சமீபத்தில் துவங்கப்பட்டன.

இந்தளவிற்கு புக்கிங்கை எதிர்பார்க்கவே இல்ல!! பிரம்மித்து போன ஓலா சிஇஓ! ஜெய்ச்சிட்டீங்க மாறா...

இந்த நிலையில், எதிர்பார்த்ததை காட்டிலும் தங்களது எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து மிகுந்த வரவேற்பு கிடைத்து வருவதாக ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தளவிற்கு புக்கிங்கை எதிர்பார்க்கவே இல்ல!! பிரம்மித்து போன ஓலா சிஇஓ! ஜெய்ச்சிட்டீங்க மாறா...

இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், ஸ்கூட்டரை முன்பதிவு செய்யும்போது யாராவது ஆரம்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்திருந்தால், அத்தகையவர்கள் எங்களை மன்னித்து கொள்ளுங்கள். இந்த கிரேஸியான தேவையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

இந்தளவிற்கு புக்கிங்கை எதிர்பார்க்கவே இல்ல!! பிரம்மித்து போன ஓலா சிஇஓ! ஜெய்ச்சிட்டீங்க மாறா...

இணைய பக்கத்தில் போதுமான அளவை திட்டமிடவில்லை. அனைத்தும் தற்போது சரிச்செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்யும்போது சிலருக்கு OTP எனப்படும் ஒருமுறை பாஸ்வேர்ட் வருவதில் தாமதமாகியுள்ளது.

இந்தளவிற்கு புக்கிங்கை எதிர்பார்க்கவே இல்ல!! பிரம்மித்து போன ஓலா சிஇஓ! ஜெய்ச்சிட்டீங்க மாறா...

ஒரு சிலருக்கோ, ஒருமுறை பாஸ்வேர்ட்டிற்கான அமர்வு காலம் காலாவதியானதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் பலர் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.

இந்தளவிற்கு புக்கிங்கை எதிர்பார்க்கவே இல்ல!! பிரம்மித்து போன ஓலா சிஇஓ! ஜெய்ச்சிட்டீங்க மாறா...

இன்னும் நேரம் ஆக ஆக முன்பதிவுகள் அதிகரித்து வருவதாகவே செய்திகள் கூறுகின்றன. இருப்பினும் இந்த ஒடிபி பிரச்சனையை ஓலா நிறுவனம் சரி செய்ததால் தற்போது இவ்வாறான புகார்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து பார்க்க முடியவில்லை.

இந்தளவிற்கு புக்கிங்கை எதிர்பார்க்கவே இல்ல!! பிரம்மித்து போன ஓலா சிஇஓ! ஜெய்ச்சிட்டீங்க மாறா...

ஸ்கூட்டரை முன்பதிவு செய்யும்போது செலுத்த வேண்டிய ரூ.499 தொகை மீண்டும் பெறக்கூடியதாகும். அதாவது முன்பதிவில் எதாவது தவறு நடந்திருந்தாலோ அல்லது முன்பதிவை வாடிக்கையாளர் ரத்து செய்தாலோ இந்த பணம் மீண்டும் வாடிக்கையாளருக்கே வந்துவிடும் என தெரிவித்துள்ளனர்.

இந்தளவிற்கு புக்கிங்கை எதிர்பார்க்கவே இல்ல!! பிரம்மித்து போன ஓலா சிஇஓ! ஜெய்ச்சிட்டீங்க மாறா...

அதுமட்டுமில்லாமல் ரூ.499 என்கிற டோக்கன் தொகையுடன் ஸ்கூட்டரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கே ஓலா இ-ஸ்கூட்டர் முதலாவதாக டெலிவிரி செய்யப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
'Crazy demand': Many report errors as Ola Electric opens bookings for e-scooter.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X