Just In
- 7 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தீயிற்கு இரையாகிய அரிய வகை வாகனங்கள்... எல்லாமே போச்சு... இனி இவற்றை எப்போமே பாக்க முடியாது...
உலகின் மிக உயரமான மற்றும் அரிய வகை வாகனங்களைக் கொண்டிருந்த மியூசியம் ஒன்று தீயிற்கு இரையாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழங்கால கல்வெட்டு மற்றும் பயன்பாட்டு பொருட்களைப் போலவே பழமையான வாகனங்களை சில வாகன ஆர்வலர்கள் பாதுகாத்து வருகின்றனர். அந்தவகையில், 200க்கும் அதிகமான வரலாற்று சிறப்புமிக்க இருசக்கர வாகனங்களைக் காட்சிப்படுத்தி வந்த வாகன மியூசியம் ஒன்றே தற்போது தீயிற்கு இரையாகியிருக்கின்றது.

இந்த சம்பவம்குறித்த அதிர்ச்சி மிகுந்த வீடியோ, புகைப்படம் மற்றும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆஸ்திரியா நாட்டின் டிம்மெல்ஸ்ஜோச் பாஸ் (Timmelsjoch) எனும் பகுதியில் இந்த அரிய வகை மியூசியம் அமைந்திருந்தது. இந்த மியூசியத்தைப் போலவே இது அமைந்திருந்த இடமும் சிறப்பு வாய்ந்த இடமாகும். மியூசியம் அமைந்திருந்த ஆல்ப்ஸ் பகுதி ஆஸ்திரியா மற்றும் இத்தாலியை இணைக்கக் கூடிய ஓர் பகுதியாகும்.

இந்த சிறப்புமிக்க பகுதியில் அமைந்திருந்த வாகன அருங்காட்சியகமே தற்போது தீயிற்கு இரையாகியிருக்கின்றது. டிம்மெல்ஸ்ஜோச் பாஸ் என்பது இரு நாட்டை இணைக்கக் கூடிய பகுதி மட்டுமில்லைங்க ஆஸ்திரியா நாட்டின் மிகவும் உயரமான மலைச் சிகரங்களிலும் ஒன்றாக இருக்கின்றது.

இந்த உயரமான இடத்திலேயே இந்த வாகன கண்காட்சியகம் அமைந்திருக்கின்றது. ஆகையால், உலகின் மிகவும் உயரமான வாகன அருங்காட்சியகமாக இது பார்க்கப்படுகிறது. இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க கண்காட்சியகம் தீ விபத்தினால் நாசமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

பல மணி நேரங்களாக உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் நெருப்பைக் கட்டுக்குள் கொண்டுவர போராடினர். இருப்பினும், காட்டு தீ போல் பரவி ஒட்டுமொத்த மியூசியத்தையுமே நெருங்கி விழுங்கியிருக்கின்றது. இதனால், அந்த மியூசியத்தில் இருந்த 200க்கும் அதிகமான அரிய மோட்டார்சைக்கிள் முற்றிலுமாக நாசமாகியிருக்கின்றன.

இந்த அருங்காட்சியகத்தில் இந்தியன் மோட்டார்சைக்கிள், ஹார்லி டேவிட்சன், வின்சென்ட், மேட்ச்லெஸ், சன்பீம், ஸண்ட்ஆப் ஆகிய நிறுவனங்களின் வரலாற்று சிறப்புமிக்க அரிய வகை இருசக்கர வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அரிய இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி சில அரிய கார்களும் இந்த அருங்காட்சியகத்தில் இருந்தன. ஆஸ்டன் மார்டின் டிபி5, பெர்ராரி மற்றும் போர்ஷே நிறுவனத்தின் பழமை வாய்ந்த கார்களும் இந்த மியூசியத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இவையனைத்துமே முற்றிலுமாக தீயில் கருகி நாசமாகியிருக்கின்றன.

தற்போது தீயினால் உருவாகிய சேதத்தின் மதிப்பு தெரியவரவில்லை. பல நேரங்கள் தீயை அணைக்க வீரர்கள் போராடியிருக்கின்றனர். மேலும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இச்சம்பவம்குறித்த வழக்கு பதிவு செய்த ஆஸ்திரியா போலீஸார் தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.
தீயில் கருகியது அரிய வகை வாகனம் என்பதால் ஒட்டுமொத்த வாகன ஆர்வலர்களும் அதிர்ச்சியில் உறைந்திருந்திருக்கின்றனர். குறிப்பாக, கிளாசிக் ரக வாகனங்களை விரும்புவோர் மத்தியில் இது மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.