ஒரு பிரீமியம் ரக காரையே வாங்கியிருக்கலாம்... மிக அதிக விலை கொண்ட டுகாட்டி பைக்கை வாங்கிய இந்தி நடிகர்!

பிரபல இந்தி நடிகர் ஒருவர் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 (Ducati Streetfighter V4 S) பைக்கை புதிதாக வாங்கியிருக்கின்றனார். தனக்கான கிறிஸ்துமஸ் பரிசாக இந்த பைக்கை அவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருசக்கர வாகனத்தின் விலை மற்றும் பிற சிறப்புகள் பற்றிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

இந்த பைக்கோட விலை இவ்ளோ அதிகமா! ஒரு பிரீமியம் காரையே வாங்கியிருக்கலாமே... ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கை வாங்கிய இந்தி நடிகர்!

டுகாட்டி (Ducati) நிறுவனத்தின் சிறப்பு வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றாக ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 எஸ் (Streetfighter V4 S) தேர்வு இருக்கின்றது. இந்த சூப்பர் பைக்கையே பிரபல நடிகர் ஒருவர் தனக்கு தானே கிறிஸ்துமஸ் பரிசாக வழங்குவதற்காக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல இந்தி திரைப்பட நடிகர்களில் ஒருவரான சூரஜ் பன்சோலி, இவரே இப்பைக்கை வாங்கியவர் ஆவார்.

இந்த பைக்கோட விலை இவ்ளோ அதிகமா! ஒரு பிரீமியம் காரையே வாங்கியிருக்கலாமே... ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கை வாங்கிய இந்தி நடிகர்!

"இந்த பைக்கை வாங்கியதனால் இந்த கிறிஸ்துமஸ் தனக்கு மிக சிறந்த பண்டிகை நாளாக அமைந்ததாக" அவர் சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து, "இந்த சிறப்பான தயாரிப்பை வழங்கியதற்கு டுகாட்டி இந்தியா நிறுவனத்திற்கு நன்றிகள்" எனவும் அவர் அப்பதிவில் கூறி இருக்கின்றார்.

இந்த பைக்கோட விலை இவ்ளோ அதிகமா! ஒரு பிரீமியம் காரையே வாங்கியிருக்கலாமே... ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கை வாங்கிய இந்தி நடிகர்!

ஸ்பெஷல் மேட் கருப்பு நிற டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 எஸ் மாடல் பைக்கையே நடிகர் சூரஜ் பஞ்சோலி வாங்கியிருக்கின்றார். இந்த பைக் இந்தியாவில் தற்போது ரூ. 26 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இந்த விலை மும்பை ஆன்-ரோடு மதிப்பு ஆகும். இத்தகைய உச்சபட்ச விலைக் கொண்ட பைக்கையே சூரஜ் பஞ்சோலி வாங்கியிருக்கின்றார். இவர் வாங்கியிருக்கும் இந்த விலையில் இந்தியாவில் நடுத்தர பிரீமியம் ரக ஒற்றைக் காரையே வாங்கியிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த பைக்கோட விலை இவ்ளோ அதிகமா! ஒரு பிரீமியம் காரையே வாங்கியிருக்கலாமே... ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கை வாங்கிய இந்தி நடிகர்!

டுகாட்டி ஸ்ட்ரீஃபைட்டர் வி4 எஸ் ஓர் நேக்கட் சூப்பர் ஸ்போர்ட் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பைக்கை டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் கடந்த மே மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இரு விதமான தேர்வுகளில் இப்பைக் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மற்றும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 எஸ் ஆகிய தேர்வுகளிலேயே இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்த பைக்கோட விலை இவ்ளோ அதிகமா! ஒரு பிரீமியம் காரையே வாங்கியிருக்கலாமே... ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கை வாங்கிய இந்தி நடிகர்!

இத்துடன், இதன் ஆரம்ப நிலை தேர்வான ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி2 மற்றும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 எஸ்பி ஆகிய இரு தேர்வுகளையும் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர டுகாட்டி திட்டமிட்டுள்ளது. இதற்கான முயற்சிகளில் நிறுவனம் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஆகையால், மிக விரைவில் இந்த தேர்வுகளும் நாட்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பைக்கோட விலை இவ்ளோ அதிகமா! ஒரு பிரீமியம் காரையே வாங்கியிருக்கலாமே... ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கை வாங்கிய இந்தி நடிகர்!

ஆனால், இதன் அதிகாரப்பூர்வ வெளியீடு பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், மிக விரைவில் இதன் வருகை அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த பைக்கில் 1,103 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய வி4 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கோட விலை இவ்ளோ அதிகமா! ஒரு பிரீமியம் காரையே வாங்கியிருக்கலாமே... ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கை வாங்கிய இந்தி நடிகர்!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 205 பிஎச்பி பவரை 13 ஆயிரம் ஆர்பிஎம்மிலும், 122 என்எம் டார்க்கை 9,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இத்தகைய உச்சபட்ச திறனை வெளிப்படுத்தக் கூடிய எஞ்ஜினையே டுகாட்டி நிறுவனம் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கில் பயன்படுத்தியிருக்கின்றது. இத்தகைய உச்சபட்ச எஞ்ஜின் மட்டுமில்லைங்க அக்ரோபோவிக் எக்சாஸ்ட், பை பிளேன் விங் உள்ளிட்ட அம்சங்கள் இந்தத பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த பைக்கோட விலை இவ்ளோ அதிகமா! ஒரு பிரீமியம் காரையே வாங்கியிருக்கலாமே... ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கை வாங்கிய இந்தி நடிகர்!

தொடர்ந்து, 5 இன்ச் அளவுள்ள டிஎஃப்டி உயர்-ரெசல்யூசன் வசதிக் கொண்ட வண்ண திரை மற்றும் டுகாட்டி மல்டி மீடியா சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் இப்பைக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மேலும், 6 ஆக்சிஸ் ஐஎம்யூ கார்னரிங் ஏபிஎஸ் வசதி உடன், டிராக்சன் கன்ட்ரோல், ஸ்லைட் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல், பவர் லாஞ்ச், பை-டைரக்சனல் குயிக் ஷிஃப்டர், எஞ்ஜின் பிரேக் கன்ட்ரோல் மற்றும் எலெக்ட்ரானிக் சஸ்பென்ஷன் ஆகிய அம்சங்களும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த பைக்கோட விலை இவ்ளோ அதிகமா! ஒரு பிரீமியம் காரையே வாங்கியிருக்கலாமே... ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கை வாங்கிய இந்தி நடிகர்!

இத்தகைய மிக மிக அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஆடம்பர பைக்கையே அதிக விலை கொடுத்து சூரஜ் பஞ்சோலி தற்போது வாங்கியிருக்கின்றார். ரொமேன்ஸ் மற்றும் ஆக்ஷன் நடிப்பிற்கு பெயர்போன நடிகராக இவர் பாலிவுட்டில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இவரின் நடிப்பில் வெளிவந்த சமீபத்திய திரைப்படம் 'டைம் டூ டான்ஸ்'.

இந்த பைக்கோட விலை இவ்ளோ அதிகமா! ஒரு பிரீமியம் காரையே வாங்கியிருக்கலாமே... ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கை வாங்கிய இந்தி நடிகர்!

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தனக்கான கிறிஸ்துமஸ் பரிசை தானே வாங்கி, தன்னை தானே மகிழ்வித்திருக்கின்றார் நடிகர் சூரஜ் பஞ்சோலி. இவரிடத்தில் ஏரளமான சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்து. இந்த நிலையில் ஏற்கனவே அவரிடம் இருக்கும் ஆடம்பர ரக வாகனங்களின் பட்டியலில் புதியதாக டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 எஸ் ஆடம்பர பைக்கும் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hindi actor sooraj pancholi buys ducati streetfighter v4 s as christmas gift
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X