லாக்டவுண் காலத்துல உங்க ஹோண்டா டூ-வீலரின் ஃப்ரீ சர்வீஸ் முடிஞ்சுடுச்சா? கவலை வேண்டாம் நாட்கள நீட்டிச்சிட்டாங்க

ஹோண்டா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் வாரண்டி மற்றும் ஃப்ரீ சர்வீஸ் கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கு. எப்போது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலைக் கீழே பார்க்கலாம் வாங்க.

லாக்டவுண் காலத்துல உங்க ஹோண்டா டூ-வீலரின் ஃப்ரீ சர்வீஸ் முடிஞ்சு போச்சா?.. கவலை வேண்டாம் கால அவகாசத்த நீட்டிச்சியிருக்காங்க!!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது கொவிட்-19 வைரசின் இரண்டாம் அலை பரவல் நாட்டில் மிக இக்கட்டான சூழ்நிலைகளை உருவாக்கியிருக்கின்றது.

லாக்டவுண் காலத்துல உங்க ஹோண்டா டூ-வீலரின் ஃப்ரீ சர்வீஸ் முடிஞ்சு போச்சா?.. கவலை வேண்டாம் கால அவகாசத்த நீட்டிச்சியிருக்காங்க!!

மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை, அதிகப்படியான தொற்று, இறப்பு என கடந்த சில நாட்களாகவே பெரும் துயரங்களை இரண்டாம் அலை பரவல் இந்தியாவில் ஏற்படுத்தி வருகின்றது. இத்தகைய மிக கடுமையான சூழ்நிலையால் நாட்டின் பெருவாரியான மாநிலங்கள் முழு பொதுமுடக்கத்தை அறிவித்திருக்கின்றன.

லாக்டவுண் காலத்துல உங்க ஹோண்டா டூ-வீலரின் ஃப்ரீ சர்வீஸ் முடிஞ்சு போச்சா?.. கவலை வேண்டாம் கால அவகாசத்த நீட்டிச்சியிருக்காங்க!!

இதனால், அத்தியாவசிய தேவையைத் தவிர வெறு எதற்காகவும் வெளியில் தலைக் காட்ட முடியாத சூழ்நிலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உருவாகியுள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வாரண்டி மற்றும் சர்வீஸ் ஆகியவற்றின் கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது, ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம்.

லாக்டவுண் காலத்துல உங்க ஹோண்டா டூ-வீலரின் ஃப்ரீ சர்வீஸ் முடிஞ்சு போச்சா?.. கவலை வேண்டாம் கால அவகாசத்த நீட்டிச்சியிருக்காங்க!!

அதாவது, ஏப்ரல் 1 தொடங்கி மே 31ம் தேதிக்குள் உங்களுடை ஹோண்டா இருசக்கர வாகனத்திற்கான வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் காலவதியாக இருக்கின்றது என்றால், கவலையேப்படாதீங்க நீங்க 31ம் தேதிக்குள் எந்த நாளில் வேண்டுமானாலும் உங்கள் வாரண்டி அல்லது இலவச சர்வீஸை பயன்படுத்திக் கொள்ளலாம்.

லாக்டவுண் காலத்துல உங்க ஹோண்டா டூ-வீலரின் ஃப்ரீ சர்வீஸ் முடிஞ்சு போச்சா?.. கவலை வேண்டாம் கால அவகாசத்த நீட்டிச்சியிருக்காங்க!!

கோவிட்-19 வைரஸ் பன்முக தரப்பில் அவதிக்கு ஆளாகி வரும் மக்களுக்கு ஹோண்டா இந்த அறிவிப்பு லேசான மன நிம்மதியை வழங்கியிருக்கின்றது என்றே கூறலாம். குறிப்பாக, ஹோண்டா நிறுவனத்தின் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கியிருப்போருக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாக்டவுண் காலத்துல உங்க ஹோண்டா டூ-வீலரின் ஃப்ரீ சர்வீஸ் முடிஞ்சு போச்சா?.. கவலை வேண்டாம் கால அவகாசத்த நீட்டிச்சியிருக்காங்க!!

தொடர்ந்து, ஹோண்டா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் கொரோனா நிவாரண நிதியையும் அறிவித்திருக்கின்றது. நிறுவனம், ரூ. 6.5 கோடி நிதியை நாட்டின் குறிப்பிட்ட ஐந்து மாநிலங்களுக்காக ஒதுக்கியிருக்கின்றது. ஹர்யானா, ராஜஸ்தான், கர்நாடகா, உபி மற்றும் குஜராஜ் ஆகிய மாநிலங்களுக்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

லாக்டவுண் காலத்துல உங்க ஹோண்டா டூ-வீலரின் ஃப்ரீ சர்வீஸ் முடிஞ்சு போச்சா?.. கவலை வேண்டாம் கால அவகாசத்த நீட்டிச்சியிருக்காங்க!!

தொடர்ந்து, ஹர்யானாவின் மனேசர் மற்றும் ராஜஸ்தானில் உள்ள தபுகாரா ஆகிய பிளாணட்டில் தலா 100 படுக்கை வசதிகளையும் நிறுவனம் ஏற்படுத்தியிருக்கின்றது. கோவிட்-19 நோயாளிகளுக்கு உதவும் வகையில் இந்த படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லாக்டவுண் காலத்துல உங்க ஹோண்டா டூ-வீலரின் ஃப்ரீ சர்வீஸ் முடிஞ்சு போச்சா?.. கவலை வேண்டாம் கால அவகாசத்த நீட்டிச்சியிருக்காங்க!!

தற்போது நாடு முழுவதும் ஆம்புலன்ஸ், படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடி வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே நோயாளிகளுக்கான படுக்கை வசதியை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இத்துடன், தனது உற்பத்தி ஆலைகளில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளையும் நிறுவனம் மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றது.

Most Read Articles
English summary
HMSI Extends Warranty And Free Service Till July 31. Read In Tamil.
Story first published: Monday, May 17, 2021, 19:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X