எதிர்கால பைக் ரேஸர்களை அடையாளம் காணும் போட்டிகளை மீண்டும் துவங்கியது ஹோண்டா!! 11 வயது சிறுமி பங்கேற்பு

அடுத்த தலைமுறை இந்திய பைக் ரேஸர்களை அடையாளம் காணும் போட்டிகளை மீண்டும் துவங்குவதாக ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

எதிர்கால பைக் ரேஸர்களை அடையாளம் காணும் போட்டிகளை மீண்டும் துவங்கியது ஹோண்டா!! 11 வயது சிறுமி பங்கேற்பு

இளம் பைக் ரேஸர்களை அவர்களது சிறு வயதிலேயே அடையாளுவதில் ஹோண்டா 2 வீலர்ஸ் நிறுவனம் எப்போதுமே முனைப்புடன் இருக்கக்கூடியது. இதன்படி கடந்த 2018ஆம் ஆண்டில் IDEMITSU ஹோண்டா இந்தியா திறமை தேடல் என்ற போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

எதிர்கால பைக் ரேஸர்களை அடையாளம் காணும் போட்டிகளை மீண்டும் துவங்கியது ஹோண்டா!! 11 வயது சிறுமி பங்கேற்பு

இந்த ப்ளாட்ஃபாரம் ஆனது இந்தியாவில் உள்ள இளம் ரைடர்களில் சிறந்தவர்களை கண்டறிந்து, அவர்களை எதிர்கால தேசிய மற்றும் சர்வதேச சாலை பந்தயம் மற்றும் எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக தயார்படுத்துகிறது. இத்தகைய IDEMITSU ஹோண்டா இந்தியா திறமை தேடல் போட்டிகளின் 2021ஆம் ஆண்டிற்கான இரண்டாவது சுற்றை தான் தற்போது ஹோண்டா 2வீலர்ஸ் இந்தியா நிறுவனம் மீண்டும் துவங்கியுள்ளது.

எதிர்கால பைக் ரேஸர்களை அடையாளம் காணும் போட்டிகளை மீண்டும் துவங்கியது ஹோண்டா!! 11 வயது சிறுமி பங்கேற்பு

IDEMITSU ஹோண்டா இந்தியா திறமை தேடல் 2021 போட்டியின் இரண்டாவது சுற்று பெங்களூரில் துவங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 14 இளம் பைக் ரைடர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் நமது தமிழ்நாடு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும், பெங்களூர், மஹாராஷ்டிரா (கொல்காபூர்), கேரளா (கன்னூர், கோட்டயம், திரிச்சூர் மற்றும் பெரிந்தல்மன்னா) உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் 11 வயதில் இருந்து அதிகப்பட்சமாக 17 வயது வரையில் உள்ளனர். இவர்களில் ஆர்வத்துடன் முதலாவதாக இவ்வாறான போட்டிகளில் கலந்து கொள்பவர்களும் உள்ளனர், அதேநேரம் நன்கு பயிற்சி பெற்ற ரைடர்களும் உள்ளனர். IDEMITSU ஹோண்டா இந்தியா திறமை தேடல் 2021-இன் இரண்டாவது சுற்றில் 11 வயதில் சிறுமி ஒருவரும் கலந்து கொண்டு நம்மை பரவசமடைய செய்துள்ளார்.

எதிர்கால பைக் ரேஸர்களை அடையாளம் காணும் போட்டிகளை மீண்டும் துவங்கியது ஹோண்டா!! 11 வயது சிறுமி பங்கேற்பு

இதுகுறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிராண்ட் & தகவல்தொடர்பு பிரிவின் முதன்மை துணை தலைவர் பிரபு நாகராஜ் கருத்து தெரிவிக்கையில், IDEMITSU ஹோண்டா இந்தியா திறமை தேடல் என்பது ஹோண்டாவால் உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும். இது இந்தியா முழுவதிலும் உள்ள ஆர்வமுள்ள மற்றும் வளரும் பந்தய வீரர்களுக்கு பந்தய பாதையில் தங்கள் திறனை வெளிக்கொணர ஒரு வழியினை வழங்குகிறது.

எதிர்கால பைக் ரேஸர்களை அடையாளம் காணும் போட்டிகளை மீண்டும் துவங்கியது ஹோண்டா!! 11 வயது சிறுமி பங்கேற்பு

2021ஆம் ஆண்டிற்கான அடுத்த தலைமுறை ரேசர்கள் தேடலை இந்த ஆண்டின் துவங்கத்தில் சென்னையில் தொடங்கினோம். இப்போது IDEMITSU ஹோண்டா இந்தியா திறமை கோப்பை சிபிஆர்150ஆர்-இல் தங்களின் பந்தய திறமைகளை வெளிப்படுத்தும் இரு ரைடர்களை தேர்வு செய்துள்ளோம். பெங்களூரில் இந்த சுற்றுடன் முன்னேறி, நாங்கள் 2ஆம் சுற்றிற்கு 7 போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளோம்.

எதிர்கால பைக் ரேஸர்களை அடையாளம் காணும் போட்டிகளை மீண்டும் துவங்கியது ஹோண்டா!! 11 வயது சிறுமி பங்கேற்பு

இந்த 7 பேரில் சிறந்தவர்கள் சிபிஆர்150ஆர் கிளாஸ் ஆஃப் டேலண்ட் போட்டியில் கலந்து கொள்ளவும், அதில் போட்டியிடவும் வாய்ப்பை பெறுவார்கள். இது அவர்களின் தொழில்முறை பந்தய வாழ்க்கையின் தொடக்கமாகும். ஆசியா டேலண்ட் கோப்பை, ஆசியா ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப், எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் போன்ற பல தேசிய மற்றும் சர்வதேச பந்தயங்களில் இளம் இந்திய திறமை வாய்ந்த வீரர்களை ஈடுப்படுத்துவதே நீண்ட காலமாக ஹோண்டாவின் நோக்கமாக உள்ளது.

இந்த வளரும் ரைடர்கள் இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸின் சூழ்நிலையை மாற்றி தேசிய மற்றும் சர்வதேச அளவில் தேசத்தை பெருமைப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன் என்றார். இரண்டாம் சுற்றின் முதல் நிலையில் அனைத்து 14 போட்டியாளர்களும் கடுமையான 3-நிலை சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எதிர்கால பைக் ரேஸர்களை அடையாளம் காணும் போட்டிகளை மீண்டும் துவங்கியது ஹோண்டா!! 11 வயது சிறுமி பங்கேற்பு

முதலில் ஒரு கடினமான உடல் தகுதி தேர்வு போட்டியாளர்கள் அனைவருக்கும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இளம் ரைடர்களின் ரைடிங் திறன்கள் மற்றும் சூழ்ச்சி திறன் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன. இதை தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரபலமான ரைடராக மாற, அவர்களின் மோட்டார் ஸ்போர்ட் மீதான ஆர்வம் மற்றும் குடும்ப ஆதரவு என இரண்டையும் தெரிந்து கொள்வதற்காக, போட்டியாளர் மற்றும் அவர்களது பெற்றோர்/ பாதுகாவலர்களுடன் தனித்தனியாக நேர்காணல் நடத்தப்பட்டது.

எதிர்கால பைக் ரேஸர்களை அடையாளம் காணும் போட்டிகளை மீண்டும் துவங்கியது ஹோண்டா!! 11 வயது சிறுமி பங்கேற்பு

நிலை-1 முடிந்த பிறகு, 1 பெண் ரைடர் உள்பட அதில் தேர்வு செய்யப்பட்ட 7 போட்டியாளர்கள் நிலை-2இல் பந்தய களத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டும் வாய்ப்பினை பெற்றனர். இந்த போட்டிகள் அனைத்தும் ஓர் வடிக்கட்டி போன்றதே. இதில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தும் மிகவும் சில போட்டியாளர்களை மட்டுமே ஹோண்டா தனது எதிர்கால மேம்பாடுகளுக்கு பயன்படுத்த உள்ளது.

ஏற்கனவே கூறியதுதான், இதில் இறுதியில் வெற்றி பெறும் ரைடர்கள், IDEMITSU ஹோண்டா இந்தியா திறமை கோப்பை சிபிஆர் 150ஆர் பிரிவில் போட்டியும் வாய்ப்பை பெறுவர். இதேபோன்று இவி பயன்பாட்டை அதிகப்படுத்தவும் ஏகப்பட்ட திட்டங்களை ஹோண்டா 2-வீலர்ஸ் இந்தியா நிறுவனம் கைவசம் வைத்துள்ளது.

Most Read Articles
English summary
Honda 2Wheelers India resumes the hunt for Next-Generation Iconic Indian rider
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X