ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு பெரும் தள்ளுபடி அறிவிப்பு! இப்பவே வாங்கிடுங்க அடுத்த மாசம் சலுகை கிடைக்காது!

ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு கேஷ்பேக் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு பெரும் தள்ளுபடி அறிவிப்பு... இப்பவே வாங்கிடுங்க, ஜூன் 30க்கு அப்புறம் சலுகை கிடைக்காது!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் அதன் கோரத் தாண்டவ ஆட்டத்தை வெகுநாட்களுக்கு பிறகு இப்போதுதான் குறைக்கத் தொடங்கியுள்ளது. இதற்குள்ளாக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் மூன்றாம் அலை பரவலைச் சமாளிக்க தயாராகுமாறு அரசுகளையும், மக்களையும் எச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு பெரும் தள்ளுபடி அறிவிப்பு... இப்பவே வாங்கிடுங்க, ஜூன் 30க்கு அப்புறம் சலுகை கிடைக்காது!!

இந்த நிலையை அறிந்து தனது வாகன விற்பனையை இப்போதே அதிகரிக்க செய்யும் வகையில் தள்ளுபடி திட்டத்தை ஹோண்டா அறிவிக்கத் தொடங்கியுள்ளது. அதன் புகழ்வாய்ந்த இருசக்கர வாகனங்களில் ஒன்றான ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு நிறுவனம் பெரும் தொகையை கேஷ்பேக்காக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு பெரும் தள்ளுபடி அறிவிப்பு... இப்பவே வாங்கிடுங்க, ஜூன் 30க்கு அப்புறம் சலுகை கிடைக்காது!!

ரூ. 3,500 வரை கேஷ்பேக் வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இதற்கு ஓர் கன்டிஷனை நிறுவனம் அறிவித்திருக்கின்றது. ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை எஸ்பிஐ கிரெடிட் கார்டு வாயிலாக இஎம்ஐ திட்டத்தின்மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு பெரும் தள்ளுபடி அறிவிப்பு... இப்பவே வாங்கிடுங்க, ஜூன் 30க்கு அப்புறம் சலுகை கிடைக்காது!!

ஆமாங்க, ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகைப் பொருந்தாது. எஸ்பிஐ கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இச்சலுகைப் பொருந்தும். ரூ. 3,500 தொகையை கேஷ்பேக்காக நிறுவனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு பெரும் தள்ளுபடி அறிவிப்பு... இப்பவே வாங்கிடுங்க, ஜூன் 30க்கு அப்புறம் சலுகை கிடைக்காது!!

இந்த சிறப்பு சலுகை வரும் ஜூன் 30ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என காலக்கெடுவையும் ஹோண்டா அறிவித்திருக்கின்றது. இந்த கேஷ்பேக் திட்டம் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு மட்டுமின்றி இன்னும் சில மாடல்களுக்கும் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு பெரும் தள்ளுபடி அறிவிப்பு... இப்பவே வாங்கிடுங்க, ஜூன் 30க்கு அப்புறம் சலுகை கிடைக்காது!!

லிவோ, கிரேஸியா, எக்ஸ்-பிளேட், எஸ்பி 125 மற்றும் ஷைன் ஆகிய மாடல்களுக்கும் இச்சலுகை பொருந்துமாம். இந்த சலுகையை சில மாற்றங்களுடன் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு பெரும் தள்ளுபடி அறிவிப்பு... இப்பவே வாங்கிடுங்க, ஜூன் 30க்கு அப்புறம் சலுகை கிடைக்காது!!

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் மூன்று விதமான வேரியண்டுகளில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஸ்டாண்டர்டு, அலாய் மற்றும் டீலக்ஸ் ஆகியவையே அவையாகும். இதில், ஸ்டாண்டர்டு வேரியண்டே ஆரம்ப நிலை தேர்வாக இருக்கின்றது.

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு பெரும் தள்ளுபடி அறிவிப்பு... இப்பவே வாங்கிடுங்க, ஜூன் 30க்கு அப்புறம் சலுகை கிடைக்காது!!

இத்தேர்வுக்கு ரூ. 71,674 என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. தொடர்ந்து, அலாய் வீல் தேர்வு 75,242 ரூபாய்க்கும், டீலக்ஸ் தேர்வு 78,797 ரூபாய்க்கும் விற்பனைக்குக் கிடைக்கிறது. தற்போது விற்பனைக்கும் கிடைக்கும் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் ஹோண்டாவின் ஈகோ தொழில்நுட்பம் மற்றும் எஸ்பி எனப்படக்கூடிய ஸ்மார்ட் பவர் உள்ளிட்ட சிறப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு பெரும் தள்ளுபடி அறிவிப்பு... இப்பவே வாங்கிடுங்க, ஜூன் 30க்கு அப்புறம் சலுகை கிடைக்காது!!

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் 124 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ப்யூவல் இன்ஜெக்சன் திறன் கொண்டது என்பதுகுறிப்பிடத்தகுந்தது. இந்த எஞ்ஜின் 8.14 பிஎச்பி மற்றும் 10.3 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு பெரும் தள்ளுபடி அறிவிப்பு... இப்பவே வாங்கிடுங்க, ஜூன் 30க்கு அப்புறம் சலுகை கிடைக்காது!!

இந்த எஞ்ஜினை சைடு ஸ்டாண்டு போட்டிருந்தால் ஸ்டார்ட் செய்ய இயலாது. பாதுகாப்பு கருதி இந்த சிறப்பு வசதியை ஹோண்டா வழங்கியிருக்கின்றது. இத்துடன் முன்பக்க வீலில் டிஸ்க் பிரேக் மற்றும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் நிறுவனம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Honda Announced Rs. 3,500 Cashback For Activa 125. This Offer Only Valid For SBI Credit Card Holders. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X