அடுத்த அறிமுகம் இதுதான்! மின்சார ஸ்கூட்டருக்கான டிரேட்மார்க் பதிவு செய்தது ஹோண்டா... அட்டகாசமா இருக்கு!

மின்சார ஸ்கூட்டருக்கான டிரேட்மார்க் பதிவை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

அடுத்த அறிமுகம் இதுதான்! மின்சார ஸ்கூட்டருக்கான டிரேட்மார்க் பதிவு செய்தது ஹோண்டா... அட்டகாசமா இருக்கு!

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்கூட்டர் ஒன்றிற்காக டிரேட்மார்க் பதிவை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, புதிய வாகனத்தின் வர்த்தகத்திற்கான உரிமத்திற்கு நிறுவனம் பதிவு செய்திருக்கின்றது. பிசிஎக்ஸ் எனப்படும் மின்சார ஸ்கூட்டருக்கே நிறுவனம் டிரேட்மார்க் பதிவை செய்துள்ளது.

அடுத்த அறிமுகம் இதுதான்! மின்சார ஸ்கூட்டருக்கான டிரேட்மார்க் பதிவு செய்தது ஹோண்டா... அட்டகாசமா இருக்கு!

இப்பதிவைத் தொடர்ந்து புதிய இருசக்கர வாகனத்தின் பேடெண்ட் (மாதிரி படம்) புகைப்படம் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சந்தை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான நிலையில் ஹோண்டா நிறுவனம் தனது புதுமுக மின்சார வாகனத்திற்கான டிரேட்மார்க்கை நாட்டில் பதிவு செய்திருக்கின்றது.

அடுத்த அறிமுகம் இதுதான்! மின்சார ஸ்கூட்டருக்கான டிரேட்மார்க் பதிவு செய்தது ஹோண்டா... அட்டகாசமா இருக்கு!

இந்த நடவடிக்கை ஏற்கனவே இந்திய இருசக்கர வாகன சந்தையில் தனது மின்சார வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வரும் நிறுவனங்களுக்கு லேசான கலக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. முக்கியமாக ஏத்தர், ஹீரோ எலெக்ட்ரிக், பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் ஆகிய மின்சார ஸ்கூட்டர்களுக்கு ஹோண்டா பிசிஎக்ஸ் தலைவலியாக அமையும் எதிர் பார்க்கப்படுகின்றது.

அடுத்த அறிமுகம் இதுதான்! மின்சார ஸ்கூட்டருக்கான டிரேட்மார்க் பதிவு செய்தது ஹோண்டா... அட்டகாசமா இருக்கு!

ஹோண்டா பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு வருமானால் நிச்சயம் மேலே பார்த்த அனைத்து மின்சார ஸ்கூட்டர்களுக்கும் கடுமையான போட்டியை வழங்கும். இதற்கேற்ப அட்டகாசமான ஸ்டைல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் மின்சார வாகனம் உருவாகி வருகின்றது.

அடுத்த அறிமுகம் இதுதான்! மின்சார ஸ்கூட்டருக்கான டிரேட்மார்க் பதிவு செய்தது ஹோண்டா... அட்டகாசமா இருக்கு!

மேக்ஸி ரக ஸ்டைல், கழட்டி மாட்டும் பேட்டரிகள் (ஸ்வாப்பபிள் பேட்டரி) என தொழில்நுட்ப வசதிகளை இந்த மின்சார ஸ்கூட்டர் வாரி வழங்குகின்றது. இதுமட்டுமின்றி, தனி தனியான ஃபூட்போர்ட், உயரமான ஒற்றை நீளமான இருக்கை, கருப்பு நிற அலாய் மற்றும் கிராப் ரெயில்கள் என அட்டகாசமான வசதிகளை பிசிஎக்ஸ் மின்சார ஸ்கூட்டர் பெற்றிருக்கின்றது.

அடுத்த அறிமுகம் இதுதான்! மின்சார ஸ்கூட்டருக்கான டிரேட்மார்க் பதிவு செய்தது ஹோண்டா... அட்டகாசமா இருக்கு!

மேலும், அலாய் ஃபூட் பெக்குகள், டெலிஸ்கோபிக் ஃபோர்க், ஸ்கூட்டரின் பின்பக்கத்தின் இரு புறங்களிலும் ஷாக் அப்சார்பர்கள், 220 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் (முன் மற்றும் பின் பக்கங்களில்), முழு டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், சி-போர்ட் யுஎஸ்பி, ரிமோட் சாவி, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் போன்ற பிரீமியம் மற்றும் சிறப்பம்சங்களும் இந்த வாகனத்தில் இடம் பெற இருக்கின்றன.

அடுத்த அறிமுகம் இதுதான்! மின்சார ஸ்கூட்டருக்கான டிரேட்மார்க் பதிவு செய்தது ஹோண்டா... அட்டகாசமா இருக்கு!

இத்தகைய சிறப்பு வசதிக் கொண்ட மின்சார ஸ்கூட்டருக்கான டிரேட்மார்க் பதிவை ஹோண்டா இந்தியாவில் தற்போது செய்திருக்கின்றது. ஆகையால், இந்த மின்சார ஸ்கூட்டரின் அறிமுகம் எப்போதும் வேண்டுமானாலும் அரங்கேறலாம் என தெரிகின்றது.

அடுத்த அறிமுகம் இதுதான்! மின்சார ஸ்கூட்டருக்கான டிரேட்மார்க் பதிவு செய்தது ஹோண்டா... அட்டகாசமா இருக்கு!

அதேசமயம், இதன் அறிமுகம் மற்றும் டிரேட்மார்க் பதிவுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், இதுகுறித்த தகவல் மிக விரைவில் நிறுவனம் தரப்பில் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. அப்போது பிசிஎக்ஸ் குறித்த இன்னும் பிற முக்கியமான தகவல்கள் வெளியிடப்பட இருக்கின்றது.

Most Read Articles

English summary
Honda Filed PCX Electric Scooter For Trademark Rights In India. Read In Tamil.
Story first published: Friday, May 14, 2021, 6:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X