ராயல் என்பீல்டுக்கு சரியான போட்டியாக உருவெடுக்கும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350... விற்பனையில் புதிய மைல்கல்...

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டுக்கு சரியான போட்டியாக உருவெடுக்கும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350... விற்பனையில் புதிய மைல்கல்...

ஹோண்டா நிறுவனத்தின் ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சந்தைக்கு வந்து சுமார் 3 மாத காலம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அதன் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 10 ஆயிரம் யூனிட்கள் என்ற மைல்கல்லை தற்போது கடந்துள்ளது.

ராயல் என்பீல்டுக்கு சரியான போட்டியாக உருவெடுக்கும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350... விற்பனையில் புதிய மைல்கல்...

இந்த தகவலை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இன்று (பிப்ரவரி 10ம் தேதி) அறிவித்தது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350, ராயல் என்பீல்டு மீட்டியோர் 350, ஜாவா கிளாசிக் மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுடன், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 போட்டியிட்டு வருகிறது.

ராயல் என்பீல்டுக்கு சரியான போட்டியாக உருவெடுக்கும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350... விற்பனையில் புதிய மைல்கல்...

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதற்கு அதன் டிசைன் மற்றும் வசதிகள்தான் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு விஷயங்களிலும் ஹோண்டா நிறுவனம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. மாடர்ன்-கிளாசிக் டிசைனில், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டுக்கு சரியான போட்டியாக உருவெடுக்கும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350... விற்பனையில் புதிய மைல்கல்...

தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனத்தின் பிக்விங் டீலர்ஷிப்கள் வாயிலாக மட்டுமே ஹைனெஸ் சிபி350 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது ஹோண்டா நிறுவனத்தின் வழக்கமான ஷோரூம் கிடையாது. மாறாக பிரீமியம் ஷோரூம் ஆகும். இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பிக்விங் ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன.

ராயல் என்பீல்டுக்கு சரியான போட்டியாக உருவெடுக்கும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350... விற்பனையில் புதிய மைல்கல்...

அப்படி இருந்தும் மிக குறுகிய காலத்தில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்துள்ளது. ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளின் காத்திருப்பு காலத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது.

ராயல் என்பீல்டுக்கு சரியான போட்டியாக உருவெடுக்கும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350... விற்பனையில் புதிய மைல்கல்...

அத்துடன் தனது பிக்விங் பிரீமியம் டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கைகளையும் ஹோண்டா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பல்வேறு நகரங்களுக்கு பிக்விங் பிரீமியம் டீலர்ஷிப்களை விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் இன்னும் நன்கு பிரபலமாக இது உதவும்.

ராயல் என்பீல்டுக்கு சரியான போட்டியாக உருவெடுக்கும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350... விற்பனையில் புதிய மைல்கல்...

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளில், 350 சிசி, 4-ஸ்ட்ரோக், ஓஹெச்சி சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 21 பிஎஸ் பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. டிஎல்எக்ஸ மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என மொத்தம் 2 வேரியண்ட்களில், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் கிடைக்கிறது.

ராயல் என்பீல்டுக்கு சரியான போட்டியாக உருவெடுக்கும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350... விற்பனையில் புதிய மைல்கல்...

இதில், டிஎல்எக்ஸ் வேரியண்ட்டின் விலை 1.86 லட்ச ரூபாய் ஆகவும், டிஎல்எக்ஸ் ப்ரோ வேரியண்ட்டின் விலை 1.92 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கை நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவ் செய்துள்ளோம். அப்போது இந்த பைக் எங்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Honda H’ness CB350 Hits 10,000 Sales Mark - Here Are All The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X