ஆக்டிவாவை தொடர்ந்து, லிவோ பைக்கிற்கும் பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்தது ஹோண்டா!!
ஆக்டிவா 125 ஸ்கூட்டரை தொடர்ந்து லிவோ பைக்கிற்கான பணம் தள்ளுபடி சலுகையினையும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வைரஸ் பீதியினால் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த இன்னமும் அச்சப்படுகின்றனர். இது தான் அவர்களை தனக்கென சொந்தமாக ஒரு வாகனத்தை வாங்க வைக்கிறது.

இதன் காரணமாக குறிப்பாக இருசக்கர வாகனங்களின் விற்பனை கடந்த சில மாதங்களாக மிக நல்லப்படியாக இருந்து வருகிறது. இருப்பினும் இந்த நிலையை அடுத்தடுத்த மாதங்களுக்கும் கொண்டு செல்ல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அவ்வப்போது சில சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அறிவித்து வருகின்றன.

இந்த வகையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் மிக சமீபத்தில் அதன் பிரபலமான ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு ரூ.5,000 பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஹோண்டா லிவோ பைக்கிற்கும் இதே ரூ.5,000 பணம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லிவோவிற்கு வழங்கப்பட்டுள்ள இந்த சலுகையினையும், ஆக்டிவா 125 ஸ்கூட்டரை போன்று க்ரெட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் உபயோகித்து மாதத்தவணையில் பைக்கை வாங்குவோருக்கு மட்டுமே கிடைக்கும்.

அதேபோல் ஐசிஐசிஐ, பேங்க் ஆஃப் பரோடா, யெஸ் பேங்க், ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் மற்றும் ஃபெடரல் பேங்க் உள்ளிட்ட ஹோண்டாவின் கூட்டணி வங்கிகளின் மூலமாக பண பரிவர்த்தணையை மேற்கொள்பவர்களால் மட்டுமே இந்த பணம் தள்ளுபடியை பெற முடியும்.

ஆக்டிவா மற்றும் லிவோ இரண்டிற்கும் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் இந்த மார்ச் மாதம் நிறைவு பெறும் வரையில் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா லிவோவில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 109.51சிசி காற்று-குளிர்விப்பான், ஃப்யுல் இன்ஜெக்ஷன் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 8.67 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-ல் 9.30 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 60 kmpl மைலேஜ் தரக்கூடியதாக விளங்கும் லிவோ மோட்டார்சைக்கிள் ட்ரம் & டிஸ்க் என்ற இரு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலைகள் முறையே ரூ.71,548 மற்றும் ரூ.75,748 ஆக உள்ளன.


Click it and Unblock the Notifications








