சென்னையில் 3வது பிக்விங் ஷோரூம் திறப்பு! புதிய ஷோரூம் எந்த பகுதியில் திறக்கப்பட்டிருக்கு தெரியுமா?

சென்னையில் தனது மூன்றாவது பிக்விங் ஷோரூமை ஹோண்டா நிறுவனம் திறந்துள்ளது. இது எந்த பகுதியில் திறக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

சென்னையில் 3வது பிக்விங் ஷோரூம் திறப்பு! புதிய ஷோரூம் எந்த பகுதியில் திறக்கப்பட்டிருக்கு தெரியுமா?

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா 'பிக்விங்' ஷோரூம்கள் வாயிலாக தனது பிரீமியம் தர இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே இந்த ஷோரூம் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

சென்னையில் 3வது பிக்விங் ஷோரூம் திறப்பு! புதிய ஷோரூம் எந்த பகுதியில் திறக்கப்பட்டிருக்கு தெரியுமா?

ஒட்டுமொத்தமாகவே நாடு முழுவதும் 40 பிக்விங் ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் இரண்டு சென்னையில் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வரிசையிலேயே புதிதாக மூன்றாவது பிக்விங் ஷோரூமையும் ஹோண்டா சென்னையில் திறந்து வைத்திருக்கின்றது.

சென்னையில் 3வது பிக்விங் ஷோரூம் திறப்பு! புதிய ஷோரூம் எந்த பகுதியில் திறக்கப்பட்டிருக்கு தெரியுமா?

புதிய பிக்விங் ஷோரூம் 372, அண்ணாசாலை, சைதாப்பேட்டை எனும் முகவரியில் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை அடையாறு (லேட்டிஸ் மேம்பாலம் அருகில்) மற்றும் அம்பத்தூர் (இன்டஸ்டிரியல் எஸ்டேட் பகுதியில்) ஆகிய பகுதிகளில் பிக்-விங் ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன.

சென்னையில் 3வது பிக்விங் ஷோரூம் திறப்பு! புதிய ஷோரூம் எந்த பகுதியில் திறக்கப்பட்டிருக்கு தெரியுமா?

இந்த நிலையிலேயே புதிதாக சைதாப்பேட்டை பகுதியில் பிக்விங் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள இளைஞர்களையும், இருசக்கர வாகன பிரியர்களையும் கவரும் வகையில் அங்கு புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 3வது பிக்விங் ஷோரூம் திறப்பு! புதிய ஷோரூம் எந்த பகுதியில் திறக்கப்பட்டிருக்கு தெரியுமா?

பிக்விங் ஷோரூம்கள் வாயிலாக நிறுவனத்தின் உயர்நிலை மற்றும் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. சிபி350, சிபி350ஆர்எஸ், சிபி500எக்ஸ், சிபி650ஆர், சிபிஆர்650ஆர், சிபிஆர்1000ஆர்ஆர்-ஆர், ஆப்பிரிக்கா ட்வின் மற்றும் கோல்டு விங் ஆகிய மாடல்கள் இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் 3வது பிக்விங் ஷோரூம் திறப்பு! புதிய ஷோரூம் எந்த பகுதியில் திறக்கப்பட்டிருக்கு தெரியுமா?

இவையனைத்தும் பிரீமியம் மற்றும் அதிக தொழில்நுட்பங்கள் அடங்கிய விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள்கள் ஆகும். எனவேதான், அவற்றை பிரத்யேகமாக பிக்விங் ஷோரூம் வாயிலாக ஹோண்டா ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனைச் செய்கின்றது.

சென்னையில் 3வது பிக்விங் ஷோரூம் திறப்பு! புதிய ஷோரூம் எந்த பகுதியில் திறக்கப்பட்டிருக்கு தெரியுமா?

ஹோண்டா நிறுவனம் மிக விரைவில் புதிய அட்வென்சர் ரக பைக் ஒன்றை விற்பனைக்கு களமிறக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இந்த புதிய பைக்கும் ஹோண்டாவின் பிக்விங் ஷோரூம் வாயிலாகவே விற்பனைக்கு வர இருக்கின்றன.

சென்னையில் 3வது பிக்விங் ஷோரூம் திறப்பு! புதிய ஷோரூம் எந்த பகுதியில் திறக்கப்பட்டிருக்கு தெரியுமா?

என்எக்ஸ்200 எனும் இருசக்கர வாகனமே விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் மோட்டார்சைக்கிளாகும். இது வரும் ஆகஸ்டு மாதத்திற்குள் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் ஹோண்டா வெளியடவில்லை.

சென்னையில் 3வது பிக்விங் ஷோரூம் திறப்பு! புதிய ஷோரூம் எந்த பகுதியில் திறக்கப்பட்டிருக்கு தெரியுமா?

இருப்பினும், பைக்கிற்கான வர்த்தக பதிவு செய்தது குறித்த தகவல் மட்டும் வெளியாகியது. இதன் அடிப்படையிலேயே ஹோண்டா என்எக்ஸ் 200 மோட்டார்சைக்கிளின் அறிமுகம் உறுதியாகியுள்ளது. புதிய அட்வென்சர் பைக் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடனும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Honda Opens 3rd BigWing Showroom In Chennai; Here Is Where?
Story first published: Wednesday, July 21, 2021, 9:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X