இந்திய தயாரிப்பு பைக்கை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் ஹோண்டா... இந்த அட்டகாசமான பைக்கை யாருக்குதான் பிடிக்காது

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதுமுக பைக்கை ஹோண்டா நிறுவனம் அதன் தாய்நாடான ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்திய தயாரிப்பு பைக்கை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் ஹோண்டா... இந்த அட்டகாசமான பைக்கை யாருக்குதான் பிடிக்காது!

இந்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஓர் பைக்கை ஹோண்டா நிறுவனம் சில மாற்றங்களுடன் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்திய தயாரிப்பு பைக்கை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் ஹோண்டா... இந்த அட்டகாசமான பைக்கை யாருக்குதான் பிடிக்காது!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிரத்யேகமாக இந்திய இளைஞர்களைக் கவரும் வகையில் (இந்தியர்களின் ரசனைக்கு ஏற்ற மாடலாக) சிபி350 பைக் உருவாக்கியிருக்கின்றது. இந்த பைக்கையே நிறுவனம் கணிசமான சில மாற்றங்களுடன் ஜப்பானிய இருசக்கர வாகன சந்தைக்காக ஏற்றுமதி செய்திருக்கின்றது.

இந்திய தயாரிப்பு பைக்கை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் ஹோண்டா... இந்த அட்டகாசமான பைக்கை யாருக்குதான் பிடிக்காது!

குறிப்பாக இந்த இருசக்கர வாகனம் பெயர் மாற்றத்துடன் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹைனெஸ் சிபி 350 என்ற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும் இப்பைக்கை ஜிபி350 எனும் பெயரில் ஏற்றுமதி செய்திருக்கின்றது.

இந்திய தயாரிப்பு பைக்கை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் ஹோண்டா... இந்த அட்டகாசமான பைக்கை யாருக்குதான் பிடிக்காது!

இந்த பெயரிலேயே வரும் ஜூலை மாதத்தில் இருந்து ஜப்பானில் அப்பைக் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஜூலை 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பைக் இந்தியாவில் இருந்தே ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது.

இந்திய தயாரிப்பு பைக்கை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் ஹோண்டா... இந்த அட்டகாசமான பைக்கை யாருக்குதான் பிடிக்காது!

ஹோண்டா ஜிபி350 மற்றும் ஹோண்டா ஜிபி350 எஸ் என இரு விதமான தேர்வுகளில் இப்பைக் ஜப்பானில் விற்பனைக்குக் கிடைக்கும். இதில் 'எஸ்' என்ற பெயர் சேர்ப்பைக் கொண்டிருக்கும் தேர்வானது அதிக சிறப்பு வசதிகள் கொண்ட மாடலாகும். அதாவது, தனித்துவமான நிற தேர்வு, பிரீமியம் அம்சங்கள் ஆகியவற்றுடன் அது விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்திய தயாரிப்பு பைக்கை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் ஹோண்டா... இந்த அட்டகாசமான பைக்கை யாருக்குதான் பிடிக்காது!

ஆனால், எஞ்ஜினைப் பொருத்த வரை இரண்டு தேர்விலுமே ஒரே மாதிரியான எஞ்ஜினைதான் பெற இருக்கின்றன. அந்தவகையில், 349சிசி ஏர் கூல்டு எஞ்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் லாங்-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் ஆகும்.

இந்திய தயாரிப்பு பைக்கை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் ஹோண்டா... இந்த அட்டகாசமான பைக்கை யாருக்குதான் பிடிக்காது!

இந்த எஞ்ஜின் 20.8 பிஎச்பி பவரை 5,500 ஆர்பிஎம்மிலும், 30 என்எம் டார்க்கை 3,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இப்பைக்கில் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான டயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பைக்கின் பின் பக்கத்தில் 130 மிமீ டயரும், பின் பக்கத்தில் 150 மிமீ டயரும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்திய தயாரிப்பு பைக்கை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் ஹோண்டா... இந்த அட்டகாசமான பைக்கை யாருக்குதான் பிடிக்காது!

இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட பைக்கையே ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் தயாரித்து ஜப்பானில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதே ரெட்ரோ ஸ்டைலிலான பைக்கையே ஆசியா-பசிஃபிக் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்குக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 23, 2021, 13:36 [IST]
English summary
Honda Planning To Launch Made in India Honda CB350 Bike In Japanese Two Wheeler Market. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+