ஹோண்டா மோட்டார்சைக்கிள்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிப்பு!! விற்பனை சீராகி வருது...

கடந்த 2021 ஜனவரி மாதத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்த மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா மோட்டார்சைக்கிள்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிப்பு!! விற்பனை சீராகி வருது...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 416,716 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2020 ஜனவரி மாதத்தை காட்டிலும் சுமார் 11.39 சதவீதம் அதிகம்.

ஹோண்டா மோட்டார்சைக்கிள்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிப்பு!! விற்பனை சீராகி வருது...

ஏனெனில் அந்த மாதத்தில் 374,114 யூனிட் இருசக்கர வாகனங்களையே ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. 2019ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து இந்திய சந்தையில் நிலவிய பொருளாதார மந்த நிலை கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் எதிரொலித்ததாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிப்பு!! விற்பனை சீராகி வருது...

உள்நாட்டு விற்பனை அதிகரித்தாலும் 2020 ஜனவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஹோண்டா மோட்டார்சைக்கிள் ஏற்றுமதி 30 சதவீதம் குறைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஜனவரியில் 20,467 ஹோண்டா மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஹோண்டா மோட்டார்சைக்கிள்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிப்பு!! விற்பனை சீராகி வருது...

ஆனால் கடந்த வருடம் இதே மாதத்தில் 29,292 யூனிட் மோட்டார்சைக்கிள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. இதுகுறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா கருத்து தெரிவிக்கையில், ஹோண்டா இரட்டை இலக்க வளர்ச்சி மற்றும் தொழில்துறையில் அதிகபட்ச அதிகரிக்கும் தொகுதிகளுடன் 2021இல் நுழைந்துள்ளது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிப்பு!! விற்பனை சீராகி வருது...

இது அப்படியே 2020-21ஆம் நிதியாண்டின் நான்காம் கால்பகுதி முதல் FY'22-இன் முதல் கால்பகுதிவரை தொடரும் என்று எதிர்பார்க்கிறோம்; கல்லூரிகளை மீண்டும் திறப்பது, நடந்து கொண்டிருக்கும் கோவிட் தடுப்பூசி இயக்கம் மற்றும் வலுவான நகர்ப்புற தேவை ஆகியவை உள்நாட்டு 2 வீலர் விற்பனைக்கு உந்துதலாக செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஹோண்டா மோட்டார்சைக்கிள்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிப்பு!! விற்பனை சீராகி வருது...

ஒட்டுமொத்தமாக, இந்த மாதத்தில் ஹோண்டாவிலிருந்து மற்றொரு புதிய மாடலை அறிமுகப்படுத்துவதற்கான மேடை அமைக்கப்பட்டுள்ளதால் 2021ஐ நாங்கள் மகிழ்ச்சி உடன் ஆரம்பிக்கிறோம் என கூறினார்.

ஹோண்டா மோட்டார்சைக்கிள்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிப்பு!! விற்பனை சீராகி வருது...

ஹோண்டா கடந்த ஆறு மாதங்களாக விற்பனையில் வளர்ச்சியினை கண்டு வருகிறது. இது ஊரடங்கிற்கு பிறகு ஹோண்டா மெல்ல மெல்ல இருசக்கர வாகன விற்பனையில் வலுப்பெற்று வருவதை காட்டுகிறது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிப்பு!! விற்பனை சீராகி வருது...

பிரபலமான ஆக்டிவா ஸ்கூட்டர் மாடலின் விற்பனையில் 2.5 கோடியை கடந்த மாதத்தில் கடந்திருந்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் பிக்விங் டீலர்ஷிப் நெட்வொர்க்கை விரிவுப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதன்படி புதிய மூன்று பிங்விங் டீலர்ஷிப் மையங்கள் கடந்த ஜனவரியில் இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Honda two wheeler domestic sales January 416,716 units.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X