பஜாஜ் எம்80 ஸ்டைலில் ஹோண்டாவின் சூப்பர் கப் 125... இதுல என்னென்ன வசதி இருக்கு தெரிஞ்சா பிரம்மிச்சு போய்ருவீங்க

ஹோண்டாவின் புதுப்பிக்கப்பட்ட சூப்பர் கப் 125 இருசக்கர வாகனம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம்குறித்த சுவாரஷ்ய தகவல்களைக் கீழே காணலாம்.

பஜாஜ் எம்80 ஸ்டைலில் ஹோண்டாவின் சூப்பர் கப் 125... இதுல என்னென்ன வசதிகள் இருக்கு தெரிஞ்சா பிரம்மிச்சு போய்ருவீங்க!

ஹோண்டா நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட மொபட் ரக வாகனம் ஒன்றை வெளியீடு செய்துள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகனமான எம்80 தோற்றத்தைக் கொண்டிருக்கும் சூப்பர் கப் 125 (Super Cub 125) எனும் வாகனத்தையே நிறுவனம் புதுப்பித்து வெளியீடு செய்திருக்கின்றது.

பஜாஜ் எம்80 ஸ்டைலில் ஹோண்டாவின் சூப்பர் கப் 125... இதுல என்னென்ன வசதிகள் இருக்கு தெரிஞ்சா பிரம்மிச்சு போய்ருவீங்க!

இது 2022ம் ஆண்டிற்கான மாடலாகும். புதுப்பித்தலின் அடிப்படையில் சூப்பர் கப் 125 மொபட்டில் யூரோ 5 தரத்திலான எஞ்ஜினை ஹோண்டா புகுத்தியுள்ளது. இது ஓர் இரு வால்வுகள் கொண்ட எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜின் 9.6 பிஎச்பி பவரை 7,500 ஆர்பிஎம்மிலும், 10.4 என்எம் டார்க்கை 6,250 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது.

பஜாஜ் எம்80 ஸ்டைலில் ஹோண்டாவின் சூப்பர் கப் 125... இதுல என்னென்ன வசதிகள் இருக்கு தெரிஞ்சா பிரம்மிச்சு போய்ருவீங்க!

இதுமட்டுமின்றி இன்னும் சில சிறப்பு அம்சங்களையும் சூப்பர் கப் 125 வாகனத்தில் புதுப்பித்தலின்கீழ் ஹோண்டா சேர்த்துள்ளது. அந்தவகையில், புதிய ஏர்பாக்ஸ், 4 ஸ்பீடு வேகக்கட்டுப்பாட்டு கருவி மற்றும் சென்ட்ரிஃபுகல் க்ளட்ச் ஆகிய சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

பஜாஜ் எம்80 ஸ்டைலில் ஹோண்டாவின் சூப்பர் கப் 125... இதுல என்னென்ன வசதிகள் இருக்கு தெரிஞ்சா பிரம்மிச்சு போய்ருவீங்க!

தொடர்ந்து, ஸ்மார்ட் கீ சிஸ்டமும் சூப்பர் கப் 125 வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதனைக் கொண்டு எஞ்ஜினை இயக்க செய்தல், வாகனத்தை லாக் செய்தல் மற்றும் மின் விளக்குகளை ஒளிரச் செய்தல் போன்ற செயல்களைச் செய்ய முடியும். இந்த வசதி பயனருக்கு அதிக பயன்பாட்டை வழங்கும் நோக்கில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

பஜாஜ் எம்80 ஸ்டைலில் ஹோண்டாவின் சூப்பர் கப் 125... இதுல என்னென்ன வசதிகள் இருக்கு தெரிஞ்சா பிரம்மிச்சு போய்ருவீங்க!

சூப்பர் கப் வாகனத்தை ஹோண்டா நிறுவனம் 1958ம் ஆண்டில் இருந்து உலக சந்தைகள் சிலவற்றில் விற்பனைச் செய்து வருகின்றது. தொடர் புதுப்பித்தல்களின் அடிப்படையில் இவ்வாகனம் தற்போதும் விற்பனையில் இருந்து வருகின்றது. 2017ம் ஆண்டு 100 மில்லியன் விற்பனை எனும் புதிய மைல்கல்லை சாதனையை இவ்வாகனம் எட்டியிருந்தது.

பஜாஜ் எம்80 ஸ்டைலில் ஹோண்டாவின் சூப்பர் கப் 125... இதுல என்னென்ன வசதிகள் இருக்கு தெரிஞ்சா பிரம்மிச்சு போய்ருவீங்க!

இந்த நிலையிலேயே புதிய சிறப்பம்சங்கள் சேர்ப்புடன் ஹோண்டா சூப்பர் கப் 125 வாகனத்தை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இது, அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதன் இந்திய வருகை சற்று சந்தேகம்தான்.

பஜாஜ் எம்80 ஸ்டைலில் ஹோண்டாவின் சூப்பர் கப் 125... இதுல என்னென்ன வசதிகள் இருக்கு தெரிஞ்சா பிரம்மிச்சு போய்ருவீங்க!

பஜாஜ் எம்80 மொபட்டிற்கு பின்னர் இந்த ரகத்திலான வாகனங்களுக்கு இந்தியாவில் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த காரணத்தினால்தான் சூப்பர் கப் 125 இந்திய அறிமுகத்திற்காக இதுவரை எந்த திட்டமும் ஹோண்டா மேற்கொள்ளவில்லை.

பஜாஜ் எம்80 ஸ்டைலில் ஹோண்டாவின் சூப்பர் கப் 125... இதுல என்னென்ன வசதிகள் இருக்கு தெரிஞ்சா பிரம்மிச்சு போய்ருவீங்க!

அதேசமயம், இந்தியாவில் இப்போதும் எம்80 பிரியர்கள் இருந்த வண்ணம் இருக்கின்றனர். தற்போதும் நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பஜாஜ் எம்80 பயன்பாட்டில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. இது ஓர் 80 சிசி திறன் கொண்ட வாகனம் ஆகும்.

பஜாஜ் எம்80 ஸ்டைலில் ஹோண்டாவின் சூப்பர் கப் 125... இதுல என்னென்ன வசதிகள் இருக்கு தெரிஞ்சா பிரம்மிச்சு போய்ருவீங்க!

குறிப்பாக, கிராமப்புற பகுதி மற்றும் விற்பனையாளர்கள் இடத்தில் இந்த வாகனம் பயன்படாட்டில் இருந்து வருகின்றது. குறைந்த பராமரிப்பு செலவு, அதிகப் பயன்பாடு, எரிபொருள் சிக்கனம் என பல்வேறு சிறப்பு வசதிக் கொண்ட வாகனம் எம்80 ஆகும். இது 1980ஸ்களில் மிக சிறந்த விற்பனையான வாகனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Honda Unveiled Updated 2022 Super Cub 125 With Euro 5 Engine. Read In Tamil.
Story first published: Tuesday, June 22, 2021, 13:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X