பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 vs ராயல்என்பீல்டு 650 பைக்குகள்!! எது அதிக வாடிக்கையாளர்களை கவரும்? ஆற்றல்மிக்கது எது?

கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் அதன் பிஎஸ்ஏ மற்றும் யெஸ்டி பிராண்ட்களை மீண்டும் புத்துயிர் கொடுக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் ஜாவா பிராண்டை இந்த நிறுவனம் மறுப்படியும் செயல்பாட்டிற்கு கொண்டுவந்திருந்தது.

பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 vs ராயல்என்பீல்டு 650 பைக்குகள்!! எது அதிக வாடிக்கையாளர்களை கவரும்? ஆற்றல்மிக்கது எது?

பழமையான மோட்டார்சைக்கிள் பிராண்ட்களுள் ஒன்றான பிஎஸ்ஏ-வில் இருந்து சமீபத்தில் தான் கோல்ட் ஸ்டார் 650 மோட்டார்சைக்கிள் வெளியீடு செய்யப்பட்டு இருந்தது. தோற்றத்தை பொறுத்தவரையில் இந்த பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிளுக்கு ராயல் என்பீல்டின் 650 இரட்டை பைக்குகள் முக்கிய போட்டி மாடல்களாக விளங்கவுள்ளன.

பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 vs ராயல்என்பீல்டு 650 பைக்குகள்!! எது அதிக வாடிக்கையாளர்களை கவரும்? ஆற்றல்மிக்கது எது?

இண்டர்செப்டர் 650 & காண்டினெண்டல் ஜிடி650 என்ற ராயல் என்பீல்டின் 650 இரட்டை பைக்குகள் இந்தியா மட்டுமின்றி ஐரோப்பாவிலும் பிரபலமான கிளாசிக் பைக்குகளாக விளங்குகின்றன. 650 இரட்டை பைக்குகளில் இருந்து பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக் எந்த விதங்களில் வேறுப்பட்டது. வாருங்கள் இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 vs ராயல்என்பீல்டு 650 பைக்குகள்!! எது அதிக வாடிக்கையாளர்களை கவரும்? ஆற்றல்மிக்கது எது?

இந்த 2021 டிசம்பர் மாத துவக்கத்தில் வெளியீடு செய்யப்பட்ட புதிய கோல்டு ஸ்டார் 650 பைக்கில் 652சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. லிக்யுடு-கூல்டு, DOHC, 4-வால்வு என்ஜினான இது அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 45 பிஎச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம்-இல் 55 என்எம் டார்க் திறன் வரையில் பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இதனுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 vs ராயல்என்பீல்டு 650 பைக்குகள்!! எது அதிக வாடிக்கையாளர்களை கவரும்? ஆற்றல்மிக்கது எது?

ஆனால் முந்தைய காலங்களில் விற்பனையில் இருந்து கோல்டு ஸ்டார் பைக்கில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருந்தது. இந்த என்ஜின் குறித்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "டார்க் திறனானது 1,800 ஆர்பிஎம்-இல் இருந்து உருவாக தொடங்குகிறது. இதன் விளைவாக ரெவ் வரம்பு முழுவதும் சிறப்பான ஓட்டத்தை வழங்குகிறது.

பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 vs ராயல்என்பீல்டு 650 பைக்குகள்!! எது அதிக வாடிக்கையாளர்களை கவரும்? ஆற்றல்மிக்கது எது?

இதனால் சிரமமின்றி பயணம் செய்து, தேவைப்படும்போது முடுக்கம் ஏற்படுகிறது" என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்படியே விற்பனையில் உள்ள ராயல் என்பீல்டு 650 இரட்டை பைக்குகளுக்கு வந்தோமேயானால், இந்த பைக்குகளில் 648சிசி இணையான-இரட்டை, 4-ஸ்ட்ரோக், சிங்கிள் ஓவர்ஹெட் காம், காற்று/ஆயில்-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது.

பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 vs ராயல்என்பீல்டு 650 பைக்குகள்!! எது அதிக வாடிக்கையாளர்களை கவரும்? ஆற்றல்மிக்கது எது?

அதிகப்பட்சமாக 7,150 ஆர்பிஎம்-இல் 47 பிஎச்பி மற்றும் 5,250 ஆர்பிஎம்-இல் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இவற்றின்படி பார்க்கும்போது, பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கில் கூடுதல் டார்க் திறன் குறைவான ஆர்பிஎம் நிலையிலேயே கிடைக்கிறது.

பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 vs ராயல்என்பீல்டு 650 பைக்குகள்!! எது அதிக வாடிக்கையாளர்களை கவரும்? ஆற்றல்மிக்கது எது?

இரும்பு குழாய், இரட்டை-தொட்டி சட்டகத்தில் உருவாக்கப்படும் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 41மிமீ-இல் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங் பணியினை இந்த பைக்கில் முன் & பின் சக்கரங்களில் உள்ள 320மிமீ மற்றும் 255மிமீ-இல் டிஸ்க் ப்ரேக்குகள் கவனிக்கின்றன.

பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 vs ராயல்என்பீல்டு 650 பைக்குகள்!! எது அதிக வாடிக்கையாளர்களை கவரும்? ஆற்றல்மிக்கது எது?

இதன் பெட்ரோல் டேங்க் 12 லிட்டர்கள் கொள்ளளவிலும், பைக்கின் எடை 213 கிலோவாகவும் உள்ளது. ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 பைக்கும் இரும்பு குழாய் ஃப்ரேமை பயன்படுத்தியே உருவாக்கப்படுகிறது. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 110மிமீ டிராவல் உடன் 41மிமீ-இல் முன்பக்க ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 88மிமீ டிராவல் உடன் இரட்டை காயில்-ஓவர் ஷாக்குகளும் வழங்கப்படுகின்றன.

பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 vs ராயல்என்பீல்டு 650 பைக்குகள்!! எது அதிக வாடிக்கையாளர்களை கவரும்? ஆற்றல்மிக்கது எது?

இந்த ராயல் என்பீல்டு பைக்கின் க்ரவுண்ட் க்ளியரென்ஸ், நம் இந்திய சாலைகளுக்கு ஏற்ப 174மிமீ வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் டேங்க் 13.7 லிட்டர்கள் கொள்ளளவிலும், பைக்கின் மொத்த எடை 202 கிலோவாகவும் உள்ளன. தோற்றத்தை பொறுத்தவரையில், கோல்டு ஸ்டார் 650 & ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் என்பவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கிளாசிக் தோற்றத்தை கொண்டிருந்தாலும், தனித்துவமான ஸ்டைலிங் பாகங்களை இவை கொண்டுள்ளன.

பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 vs ராயல்என்பீல்டு 650 பைக்குகள்!! எது அதிக வாடிக்கையாளர்களை கவரும்? ஆற்றல்மிக்கது எது?

பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650-இல் இருக்கை அமைப்பு ஒற்றை துண்டாகவும், வயர் ஸ்போக் சக்கரங்கள், வட்ட வடிவில் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. முதற்கட்டமாக விரைவில் இங்கிலாந்தில் விற்பனையை துவங்கவுள்ள கோல்டு ஸ்டார் 650 பைக்கின் விலை குறித்த விபரங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை.

பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 vs ராயல்என்பீல்டு 650 பைக்குகள்!! எது அதிக வாடிக்கையாளர்களை கவரும்? ஆற்றல்மிக்கது எது?

ராயல் என்பீல்டு 650 இரட்டை பைக்குகளிலும் ஒற்றை இருக்கை அமைப்பே (காண்டினெண்டல் மாடலில் சற்று வித்தியாசமாக) வழங்கப்படுகிறது. அதேபோல் வட்ட வடிவிலான பின்பக்கத்தை காட்டும் கண்ணாடி, ஸ்போக் சக்கரங்களையே இந்த ராயல் என்பீல்டு பைக்குகள் பெறுகின்றன. ஆனால் உண்மையில், தற்கால மாடர்ன் தொடுதல்களுடன் பைக்கை விரும்ப நினைப்பவர்களுக்கு 650 ட்வின்ஸ் பைக்குகளே ஏற்றதாக இருக்கும்.

Most Read Articles
English summary
How bsa s gold star 650 offering compares against 650cc royal enfield bikes
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X