புதிய லிமிடெட் எடிசன் ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்கள்!! யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ!

விட்பிளேன் 701 பைக்கின் ஸ்பெஷல் எடிசன்களை பற்றிய விபரங்களை ஹஸ்க்வர்னா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய லிமிடெட் எடிசன் ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்கள்!! யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ!

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இத்தாலிய துணி ஆடை பிராண்ட்டான ரீப்ளே (REPLAY) உடன் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து கூட்டணியில் உள்ளது. இந்த கூட்டணியில் இருந்து தான் தற்போது விட்பிளேன் 701 பைக்கின் சிறப்பு பதிப்பு வெளிவந்துள்ளது.

புதிய லிமிடெட் எடிசன் ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்கள்!! யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ!

இதனுடன் 701 சூப்பர்மோட்டோ மற்றும் 701 எண்டூரோ எல்ஆர் என்ற லிமிடெட் எடிசன்களையும் ஹஸ்க்வர்னா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை ஒவ்வொன்றும் உலகம் முழுவதிலுமே வெறும் 10 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளன.

புதிய லிமிடெட் எடிசன் ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்கள்!! யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ!

இதனால் இந்த ஸ்பெஷல் எடிசன் ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிளை வாங்குவோர் மிகவும் அரிதாகவே இருப்பர். இந்த மோட்டார்சைக்கிள்களின் பெயிண்ட்டிலும், லோகோக்களிலும் இந்த இத்தாலிய ஸ்வீடன் நிறுவனங்களின் கூட்டணி பிரதிப்பலிக்கிறது.

புதிய லிமிடெட் எடிசன் ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்கள்!! யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ!

ரீப்ளே பிராண்டின் லோகோ, ஹஸ்க்வர்னா நிறுவனம் மீண்டும் மோட்டோ3 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு பயன்படுத்திய மோட்டோ3 மோட்டார்சைக்கிள்களிலும் பார்க்க முடிந்தது.

புதிய லிமிடெட் எடிசன் ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்கள்!! யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ!

இந்த லேட்டஸ்ட் மிடில்வெய்ட்-எடிசன் மாடல்கள் புதிய நிறங்களையும், ஸ்பெஷல் ஆக்ஸஸரீகளையும் பெற்றுள்ளன. இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள விட்பிளேன் 250 பைக்கை காட்டிலும் விட்பிளேன் 701 பைக்குகள் அளவில் பெரியவை ஆகும்.

புதிய லிமிடெட் எடிசன் ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்கள்!! யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ!

அதற்கு ஏற்றாற்போல் இந்த பைக்குகளில் 692.7சிசி லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 75 பிஎச்பி மற்றும் 72 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

புதிய லிமிடெட் எடிசன் ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்கள்!! யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ!

என்ஜினிற்கு எரிபொருள் ரைடு-பை-வயர் சிஸ்டத்தின் மூலமாக எலக்ட்ரானிக் ஊசி ஏற்றுவது போல் கொடுக்கப்படுகின்றன. இவற்றுடன் விட்பிளேன் 701 லிமிடெட் எடிசன்களில் அபெக்ஸ் சஸ்பென்ஷன் தொகுப்பு மற்றும் ப்ரேம்போ ப்ரேக்குகள் பொருத்தப்படுகின்றன.

புதிய லிமிடெட் எடிசன் ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்கள்!! யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ!

விட்பிளேன் 701 பைக்கின் வழக்கமான என்ஜின் ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்தி தான் 701 சூப்பர்மோட்டோ மற்றும் எண்டூரோ எல்ஆர் பைக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 701 சூப்பர்மோட்டோ பைக்கை சாதாரண சாலைகளிலும், பந்தய ட்ராக்குகளில் மட்டுமே பயன்படுத்த முடியும், அதற்கு ஏற்றவாறு தான் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய லிமிடெட் எடிசன் ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்கள்!! யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ!

ஆனால் எண்டூரோ எல்ஆர், இந்த பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், ஆம் இது ஆஃப்-ரோடுகளுக்கு ஏற்ற மோட்டார்சைக்கிளாகும். ஆஃப்-ரோடு பைக்குகள் என்றாலே பொதுவாகவே அனைத்து விதமான சாலைகளுக்கும் பயன்படுத்த முடியும்.

புதிய லிமிடெட் எடிசன் ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள்கள்!! யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ!

முன்பு உலகம் முழுவதிலும் என்று கூறியிருந்தோம், உலகம் முழுக்க கிடையாது, இந்த லிமிடெட் எடிசன் மோட்டார்சைக்கிள்கள் சில குறிப்பிட்ட சர்வதேச சந்தைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. அந்த நாடுகள் என்னென்ன என்பது தற்போதைக்கு தெரியவில்லை.

Most Read Articles

English summary
Special edition Husqvarna Vitpilen 701 breaks cover. Only 10 units to be made.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X