கழட்டி தூக்கி போட்டிருந்த உடனே எடுத்து மாட்டிடுங்க... அபராதம் விதிக்க தயார்நிலையில் போலீஸ்...

மக்களிடம் இருந்து பணம் பறிக்கவே இந்த புதிய எனும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் காவல்துறையின்மீது புகார் சுமத்த தொடங்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

கழட்டி தூக்கி போட்டிருந்த உடனே எடுத்து மாட்டிடுங்க... அபராதம் விதிக்க தயார்நிலையில் போலீஸ்...

இருசக்கர வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதனால் நாட்டில் அரங்கேறும் விபத்துகளின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. எனவே, இதனைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

கழட்டி தூக்கி போட்டிருந்த உடனே எடுத்து மாட்டிடுங்க... அபராதம் விதிக்க தயார்நிலையில் போலீஸ்...

குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல்களைக் குறைப்பதற்காக புதிய விதிகளை உருவாக்குவது மற்றும் பழைய விதிகளைச் சீர்த்திருத்துவது பல்வேறு நடவடிக்கைகளில் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இதுதவிர, பழைய விதிகள் சிலவற்றையும் மத்திய, மாநில அரசுகள் தூசி தட்டவும் தொடங்கியிருக்கின்றன.

கழட்டி தூக்கி போட்டிருந்த உடனே எடுத்து மாட்டிடுங்க... அபராதம் விதிக்க தயார்நிலையில் போலீஸ்...

அந்தவகையில், மிக சமீபத்தில் தலைநகர் டெல்லியில், பின்பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடிகள் இல்லாத இருசக்கர வாகனங்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 'மக்களிடத்தில் இருந்து பணத்தை பிடுங்க இது புது ரூட் போலிருக்கு' என பலர் கேள்வி எழுப்பினர்.

கழட்டி தூக்கி போட்டிருந்த உடனே எடுத்து மாட்டிடுங்க... அபராதம் விதிக்க தயார்நிலையில் போலீஸ்...

உண்மையில் இது புது விதிதானா?, இல்லை, மத்திய மோட்டார் வாகன விதி 1988, பிரிவு 5 மற்றும் 7இல் இதற்கான விதிகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதனையே டெல்லி அரசு அண்மையில் மீண்டும் தூசி தட்டி பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது. இதே நடவடிக்கையில் தற்போது தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகர போலீஸாரும் ஈடுபட தொடங்கியிருக்கின்றனர்.

கழட்டி தூக்கி போட்டிருந்த உடனே எடுத்து மாட்டிடுங்க... அபராதம் விதிக்க தயார்நிலையில் போலீஸ்...

இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளைப் பொருத்துவது உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தாத வாகனங்களின்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹைதராபாத் நகர போலீஸார் அறிவித்தனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சற்றே கலக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

கழட்டி தூக்கி போட்டிருந்த உடனே எடுத்து மாட்டிடுங்க... அபராதம் விதிக்க தயார்நிலையில் போலீஸ்...

பிற வாகனங்களைக் காட்டிலும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சற்று பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகின்றது. ஆகையால்தான் இருசக்கர வாகனங்கள்சார்ந்து பல்வேறு அதிரடி விதிகள் உருவாக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

கழட்டி தூக்கி போட்டிருந்த உடனே எடுத்து மாட்டிடுங்க... அபராதம் விதிக்க தயார்நிலையில் போலீஸ்...

அண்மையில்கூட, இருசக்கர வாகனத்தை இயக்குபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற பழைய விதியை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்தது இந்திய அரசு. இந்த நிலையிலேயே மிக பழைய விதிகளில் ஒன்றான இருசக்கர வாகனங்களில் கண்ணாடியை பயன்படுத்தும் விதியை டெல்லியைத் தொடர்ந்து ஹைதராபாத் நகர போலீஸார் கட்டமாயமாக்கியுள்ளனர்.

கழட்டி தூக்கி போட்டிருந்த உடனே எடுத்து மாட்டிடுங்க... அபராதம் விதிக்க தயார்நிலையில் போலீஸ்...

கண்ணாடிகளைப் பயன்படுத்தாத இருசக்கர வாகன ஓட்டிகளிடத்தில் அதிகபட்ச அபராதத் தொகை வசூலிக்கப்பட இருப்பதாக போலீஸார் எச்சரித்திருக்கின்றனர். எச்சரித்த கையோடு சிலருக்கு அபராதத்தையும் காவல்துறையினர் விதித்திருக்கின்றனர். ரூ. 135 வரை அபராத செல்லாண் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கழட்டி தூக்கி போட்டிருந்த உடனே எடுத்து மாட்டிடுங்க... அபராதம் விதிக்க தயார்நிலையில் போலீஸ்...

முன் அறிவிப்பு மற்றும் கால அவகாசம் ஏதுமின்றி திடீரென போலீஸார் கண்ணாடி இல்லாததற்காக அபராதத்தை வழங்கி வருவதாக ஹைதராபத் வாசிகள் சிலர் கவலைத் தெரிவித்திருக்கின்றனர். போலீஸாரின் திடீர் நடவடிக்கையால் நகரத்தைச் சேர்ந்த பல்வேறு இருசக்கர வாகன ஓட்டிகள் தற்போது பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கழட்டி தூக்கி போட்டிருந்த உடனே எடுத்து மாட்டிடுங்க... அபராதம் விதிக்க தயார்நிலையில் போலீஸ்...

ஆனால், போலீஸார் தரப்பிலோ இருசக்கர வாகனங்கள் சார்ந்து அண்மைக் காலங்களாக அதிகளவில் விபத்துகள் நடைபெறுவதாகவும், அதற்கு, டூவீலர்களில் கண்ணாடிகள் இல்லாததும் ஓர் காரணமாக அமைந்திருப்பதாக அவர்கள் அதிர்ச்சி தவல்கள் வெளியிட்டனர்.

கழட்டி தூக்கி போட்டிருந்த உடனே எடுத்து மாட்டிடுங்க... அபராதம் விதிக்க தயார்நிலையில் போலீஸ்...

இதன்காரணத்தினாலேயே இருசக்கர வாகனங்களில் பின் பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடிகள் மிக அவசியம் என்பதை உணர்த்த வேண்டும் என்பதற்காக பழைய விதியை தற்போது தூசி தட்டி பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றோம் என கூறியிருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyderabad Police Started To Fine Rider Who Does Not Have Rearview On Motorcycles. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X