பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வரும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர்... முக்கிய தகவல்கள்!

டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் பற்றிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வரும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர்... முக்கிய தகவல்கள்!

டிவிஎஸ் நிறுவனம் 125 சிசி செக்மெண்ட்டில் புதிய ஸ்கூட்டர் ஒன்றை இன்று (அக்டோபர் 7ம் தேதி) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால் அது என்ன ஸ்கூட்டர்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. எனினும் இது டிவிஎஸ் ஜூபிடர் 125 சிசி ஸ்கூட்டராக இருக்கலாம் என ஆட்டோமொபைல் துறையினர் அனைவரும் உறுதியாக நம்புகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வரும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர்... முக்கிய தகவல்கள்!

இந்த சந்தேகங்கள் அனைத்திற்கும் நமக்கு இன்னும் சிறிது நேரத்தில் விடை கிடைத்து விடும். டிவிஎஸ் நிறுவனம் இன்னமும் இது தொடர்பாக தனது உதடுகளை திறக்கவே இல்லை. இருப்பினும் இது டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டராகதான் இருக்கும் என அனைவராலும் நம்பப்படுகிறது. டிவிஎஸ் ஜூபிடர் என்பது ஏற்கனவே இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு பெயர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வரும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர்... முக்கிய தகவல்கள்!

இதில், பெரிய வேரியண்ட் என்பது அதனை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். டிவிஎஸ் ஜூபிடர் 125 இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த புதிய ஸ்கூட்டரில் ஒரு சில வசதிகள் வாடிக்கையாளர்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வரும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர்... முக்கிய தகவல்கள்!

அவை என்னென்ன? என்பதை பின் வரும் ஸ்லைடர்களில் கூறியுள்ளோம். நாங்கள் இங்கே கூறியுள்ள வசதிகள் எல்லாம் எல்லாம் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் எல்லாம் இன்று இந்த புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் வெளியாகும்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வரும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர்... முக்கிய தகவல்கள்!

டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில், டிவிஎஸ் இன்டெலிகோ தொழில்நுட்பம் (TVS IntelliGo Technology) இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து சிக்னல்களில் சிகப்பு விளக்கு எரியும்போது 2 வினாடிகளுக்கும் மேலாக காத்திருக்க நேரிட்டால், இந்த தொழில்நுட்பம் ஸ்கூட்டரை அதுவாவகே ஆஃப் செய்து விட உதவி செய்கிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வரும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர்... முக்கிய தகவல்கள்!

இன்ஜினை எரிபொருள் சிக்கனம் வாய்ந்ததாக வைத்திருக்க இந்த தொழில்நுட்பம் உதவி செய்கிறது. இன்றைய தேதியில் இந்திய வாடிக்கையாளர்கள் அனைவரும் விரும்புவது இதுபோன்ற தொழில்நுட்பமாகதான் இருக்கும். ஏனெனில் இந்தியாவில் பெட்ரோல் அந்த அளவிற்கு மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வரும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர்... முக்கிய தகவல்கள்!

இதற்கு அடுத்தபடியாக டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் முழு எல்இடி லைட் வசதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நாட்களில் முழு எல்இடி லைட் வசதியை வழங்குவது பொதுவான ஒரு விஷயமாக மாறி வருகிறது. இதன்படி டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரிலும் முழு எல்இடி லைட்டிங் வசதி இடம்பெறலாம்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வரும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர்... முக்கிய தகவல்கள்!

முழு எல்இடி லைட்டிங் எனும்போது, பகல் நேர விளக்குகளும் எல்இடி லைட்களாகதான் இருக்கும். டிவிஎஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட இந்த புதிய ஸ்கூட்டரின் டீசர் புகைப்படங்களில் எல்இடி பகல் நேர விளக்குகள் இடம்பெறுவதை உறுதி செய்திருந்தது. எனவே இறுதி தயாரிப்பு நிலை வெர்ஷனிலும், இதே அம்சம் இடம்பெறலாம்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வரும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர்... முக்கிய தகவல்கள்!

இதேபோல் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. அதே நேரத்தில் டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரில், செமி டிஜிட்டல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வரும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர்... முக்கிய தகவல்கள்!

டிவிஎஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் ரைடர் 125 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 125 சிசி செக்மெண்ட்டிற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு இருப்பதால், தொடர்ச்சியாக இந்த செக்மெண்ட்டில் பல்வேறு புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வரும் டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர்... முக்கிய தகவல்கள்!

இதில், முதலாவதாக டிவிஎஸ் ரைடர் 125 சிசி பைக் விற்பனைக்கு வந்தது. இதற்கு அடுத்தபடியாக டிவிஎஸ் நிறுவனம் ஜூபிடர் 125 ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த இரண்டு தயாரிப்புகளும் டிவிஎஸ் நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் என அனைவராலும் பரலவாக எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Important details about tvs jupiter 125
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X