இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ரூவீங்க!

இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ரூவீங்க!

கோமகி (Komaki) எலெக்ட்ரிக் வாகன நிறுவனம், தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், தனது கோமகி எக்ஸ்ஜிடி-எக்ஸ்1 (Komaki XGT-X1) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான், இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ரூவீங்க!

ஜெல் பேட்டரி மற்றும் லித்தியம் அயான் பேட்டரி ஆகிய மாடல்களில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஜெல் பேட்டரி பொருத்தப்பட்ட மாடலின் விலை 45 ஆயிரத்திற்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்ட மாடலின் விலை 60 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ரூவீங்க!

கோமகி நிறுவனம் தற்போது வரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எக்ஸ்ஜிடி-எக்ஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் தற்போதுதான் எலெக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றன. அப்படி இருக்கும்போது இவ்வளவு குறுகிய காலத்திற்குள், இவ்வளவு அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருப்பது மிகப்பெரிய விஷயம்.

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ரூவீங்க!

இதற்கு எக்ஸ்ஜிடி-எக்ஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மலிவான விலைதான் முக்கியமான காரணம் என கோமகி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்டைல் மற்றும் செயல்திறன் ஆகியவையும், இந்த அளவிற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையில் மிக முக்கியமான பங்கை ஆற்றியுள்ளன.

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ரூவீங்க!

கோமகி எக்ஸ்ஜிடி-எக்ஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 120 கிலோ மீட்டர்கள் வரை ரேஞ்ச் (ஒரு முறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணம் செய்யும் தொலைவு) வழங்குகிறது. இது ஈக்கோ மோடில் கிடைக்கும் ரேஞ்ச் ஆகும். விலை, ஸ்டைல் மற்றும் செயல்திறன் போலவே, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்சும் சிறப்பாக இருக்கிறது.

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ரூவீங்க!

இந்த அனைத்து காரணிகளும் இணைந்து, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக மாற்றியுள்ளன. மேலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், சௌகரியமான இருக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன. எனவே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டுபவர்களுக்கு சிறப்பான பயண அனுபவம் கிடைக்கும்.

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ரூவீங்க!

கோமகி எக்ஸ்ஜிடி-எக்ஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இன்னும் நிறைய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என கோமகி எலெக்ட்ரிக் டிவிஷனின் இயக்குனர் குன்ஜன் மல்ஹோத்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக தற்போது பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், வரும் காலங்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இன்னும் உயரும் என்பது அவரது நம்பிக்கை.

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ரூவீங்க!

கோமகி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது: குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதில் எங்களது கவனம் தொடரும். அதே நேரத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் நிறைய வசதிகளையும் வழங்குவோம். தற்போது பெட்ரோல் விலையும், சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையும் அதிகமாக உள்ளது.

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ரூவீங்க!

எனவே இது நாம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டிய நேரம் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக உள்ளதால், மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர். எனவே கோமகி நிறுவனம் எதிர்பார்ப்பதை போல் வரும் காலங்களில் விற்பனை பல மடங்கு உயரலாம்.

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ரூவீங்க!

அதற்கேற்ப மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குவதன் மூலம் அரசும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான் தற்போதைய நிலையில் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் இருக்கும் மிகப்பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்! எவ்ளோனு தெரிஞ்சா உடனே வாங்க புறப்பட்ரூவீங்க!

எனவே இந்த பிரச்னையையும் சரி செய்வதற்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. பெட்ரோல் பங்க்குகள், ஷாப்பிங் மால்கள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக இந்தியாவில் தற்போது சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு உயர்ந்துள்ளது.

Most Read Articles

English summary
India s most affordable electric scooter komaki xgt x1
Story first published: Thursday, September 30, 2021, 23:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X