இங்கு நிற்பது நல்லது அல்ல!.. சீக்கிரம் கிளம்புங்க!.. அறிவுரை கூறிய கிராம வாசியிடம் பொங்கிய இளம்பெண்... வீடியோ!

அறிவுரை கூறிய கிராம வாசி ஒருவரிடம் இளம்பெண் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இங்கு நிற்பது நல்லது அல்ல!.. சீக்கிரம் கிளம்புங்க!.. அறிவுரை கூறிய கிராம வாசியிடம் பொங்கிய இளம்பெண்... வீடியோ!!

டுகாட்டி நிறுவனத்தின் பிரபல பைக் மாடல்களில் டியாவல் சூப்பர் பைக்கும் ஒன்று. இந்த பைக்கை 2019ம் ஆண்டிலேயே முதல் முறையாக நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் அதி-திறன் வாய்ந்த சூப்பர் பைக்காகும். ரூ. 17.70 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் இப்பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது டியாவல் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலையாகும்.

இங்கு நிற்பது நல்லது அல்ல!.. சீக்கிரம் கிளம்புங்க!.. அறிவுரை கூறிய கிராம வாசியிடம் பொங்கிய இளம்பெண்... வீடியோ!!

இதுபோன்று பல்வேறு சுவாரஷ்ய தகவல்களை இப்பைக் தனக்குள் அடக்கி வைத்திருக்கின்றது. ஆனால், நாம் இப்போது இந்த பைக் பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கப்போவதில்லை. மாறாக, பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்ய சென்ற இளம்பெண் சந்தித்த விநோத சம்பவம்குறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

இங்கு நிற்பது நல்லது அல்ல!.. சீக்கிரம் கிளம்புங்க!.. அறிவுரை கூறிய கிராம வாசியிடம் பொங்கிய இளம்பெண்... வீடியோ!!

பைக் வித் கர்ல் (BikeWithGirl) எனும் யுட்யூப் சேனலைச் சேர்ந்த இளம்பெண்ணே விநோத சம்பவத்திற்கு ஆளானவர் ஆவார். இவர், டுகாட்டி டியாவல் பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்காக மும்பை நகரத்தின் சாலைகளைப் பயன்படுத்தியிருக்கின்றார். இத்துடன், நகர்புறத்தின் வெளிப்புற சாலைகள் சிலவற்றிலும் பைக்கை ஓட்டி அவர் ரியூ செய்திருக்கின்றார்.

இங்கு நிற்பது நல்லது அல்ல!.. சீக்கிரம் கிளம்புங்க!.. அறிவுரை கூறிய கிராம வாசியிடம் பொங்கிய இளம்பெண்... வீடியோ!!

அந்தவகையில் மும்பைக்கு மிக அருகில் இருக்கும் ஓர் கிராமப்புற நெடுஞ்சாலையில் வைத்து பைக்கை ரிவியூ செய்திருக்கின்றார். அப்போது அவ்வழியே வந்த கிராமவாசி ஒருவர், "இங்கு நிற்க வேண்டாம். உங்களுக்கு நல்லது அல்ல" என கூறியிருக்கின்றார்.

இங்கு நிற்பது நல்லது அல்ல!.. சீக்கிரம் கிளம்புங்க!.. அறிவுரை கூறிய கிராம வாசியிடம் பொங்கிய இளம்பெண்... வீடியோ!!

ஆனால், யுட்யூபைச் சேர்ந்த இளம்பெண் "இது இந்தியா, நாங்கள் எங்கு வேண்டுமானாலும் நிற்போம். அதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது" என வாதிட்டிருக்கின்றார். பதிலுக்கு அந்த நபர், "இது பாதுகாப்பற்ற பகுதி. மிக சமீபத்திலேயே இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் இங்கு அரங்கேறியது. ஆகையால், இங்கு நிற்பது உங்களுக்கு நல்லது அல்ல" என அவர் கூறியிருக்கின்றார்.

இங்கு நிற்பது நல்லது அல்ல!.. சீக்கிரம் கிளம்புங்க!.. அறிவுரை கூறிய கிராம வாசியிடம் பொங்கிய இளம்பெண்... வீடியோ!!

இதனை தவறாக புரிந்துக் கொண்ட இளம் பெண்ணும், அவரது ஆண் நண்பரும், தங்களை மிரட்டுவதற்காக கற்பழிப்பு சம்பவங்களைப் பற்றிய கூறியதாக எண்ணிக்கொண்டனர். இதனால், வாக்குவாதம் லேசாக காரசாரமானது. பின்னர், சற்று கணிசமான வாக்குவாதங்களுக்கு பின்னர் இளம்பெண் அங்கிருந்து புறப்பட்டிருக்கின்றார்.

இங்கு நிற்பது நல்லது அல்ல!.. சீக்கிரம் கிளம்புங்க!.. அறிவுரை கூறிய கிராம வாசியிடம் பொங்கிய இளம்பெண்... வீடியோ!!

நகர்ப்புற எல்லைக்கு உட்பட்ட சாலைகளிலேயே அதிகளவில் வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு நாள் தோறும் வெளியாகும் டிவியிலும், செய்தி நாளிதழ்களிலும் வரும் செய்திகளே சான்று. இந்த மாதிரியான சூழ்நிலையில் பாதுகாப்பற்ற (அதிகளவில் ஆள் நடமாட்டம் இல்லாத) நெடுஞ்சாலையில் இளம்பெண் நின்றிருந்ததை அடுத்தே அந்த நபர் (கிராமவாசி) பெண்ணுக்கு அறிவுரை வழங்கியிருக்கின்றார் என்பதை நம்மால் உணர முடிகின்றது.

இங்கு நிற்பது நல்லது அல்ல!.. சீக்கிரம் கிளம்புங்க!.. அறிவுரை கூறிய கிராம வாசியிடம் பொங்கிய இளம்பெண்... வீடியோ!!

இருப்பினும், சில காரணங்களால் இருவரிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், அந்த நபர் சிறு துளியளவும் கடுமையாக பேசியதாக தெரியவில்லை. இந்தநிலையிலேயே வேறு சில கிராம வாசிகளும் சேர்ந்து அப்பெண்ணுக்கும், இளைஞருக்கு அறிவுரை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

இங்கு நிற்பது நல்லது அல்ல!.. சீக்கிரம் கிளம்புங்க!.. அறிவுரை கூறிய கிராம வாசியிடம் பொங்கிய இளம்பெண்... வீடியோ!!

இந்தியாவின் ஒரு சில குறிப்பிட்ட கிராமங்களில் வசிக்கும் கிராம மக்கள் தற்போதும் வெளிநபர்களை கிராமத்திற்குள் நுழைய அனுமதிப்பதில்லை. தெரியாமல், கிராமத்திற்குள் நுழைந்த வாகனங்கள் சூரையாடப்படும் சம்பவங்கள்கூட இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றது. ஆனால், இதுபோன்று எந்தவொரு அசம்பாவிதமும் இந்த சம்பவத்தில் அரங்கேறவில்லை.

Image Courtesy: BikeWithGirl

மாறாக அனைவரும் அறிவுரை கூறும் வகையிலேயே எடுத்துரைத்து யுட்யூபைச் சேர்ந்த நபர்களை அங்கிருந்து வெளியேற்றிருக்கின்றனர். இந்த ஒட்டுமொத்த சம்பவம்குறித்த வீடியோவையும் அந்த இளம்பெண்ணே அவரது யுட்யூப் சேனல் வாயிலாக வெளியிட்டிருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Villager vs Biker Girl Here Is What Happened. Read In Tamil.
Story first published: Thursday, March 11, 2021, 11:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X