மிக மிக குறைந்த விலையில் இ-மிதிவண்டி... இந்தியர்களை கவர கோஜீரோ அதிரடி! பணத்த மிச்சப்படுத்த தயாராகுங்க!
இந்தியாவிற்கான மிகக் குறைந்த விலைக் கொண்ட இ-சைக்கிளை கோஜீரோ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இ-மிதிவண்டியின் விலை மற்றும் பிற முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான கோஜீரோ (GoZero) இந்தியாவிற்கான மிகக் குறைந்த விலைக் கொண்ட இ-சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்கெல்லிங் லைட் (Skellig Lite) எனும் பெயரில் அந்த இ-சைக்கிள் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 19,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவின் மிகக் குறைந்த விலைக் கொண்ட இ-சைக்கிளாகும். ஆகையால், இந்திய இ-மிதிவண்டி பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஜீரோ நிறுவனத்தின் ஸ்கெல்லிங் லைட் இ-மிதிவண்டியன் அறிமுகம் அமைந்துள்ளது.

ஸ்கெல்லிங் லைட் இ-சைக்கிளை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 25 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ வேகம் ஆகும். இந்த இ-சைக்கிளில் 210 Wh லித்தியம் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுவே முழுமையான சார்ஜில் 25 கிமீ தூரம் வரை பயணிக்கக் கூடிய திறனை இ-சைக்கிளுக்கு வழங்குகின்றது.

இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்கள் ஆகும். தொடர்ந்து, இ-சைக்கிளை மணிக்கு 25 கிமீ எனும் வேகத்தில் இயக்குவதற்காக 250வாட் மின் மோட்டார் பின் பக்க வீலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அலாய் ஸ்டெம்ம ஹேண்டில், 26X1.95 அளவிலான டயர்கள், வி பிரேக்குகள் மற்றும் முன் பக்க வீலில் ஃபோர்க் உள்ளிட்டவை இ-சைக்கிளில் வழங்கப்பட்டுள்ளன.

அண்மைக் காலமாக பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்து வருகின்றது. இதனால் மக்கள் மாற்று வாகனங்களாக மின்சார வாகனங்களைத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக கோஜீரோ விலைக் குறைந்த ஸ்கெல்லிங் இ-மிதிவண்டியை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் ஸ்கெல்லிங் லைட் இந்திய நகரவாசிகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. அருகாமையில் இருக்கும் இடங்களுக்கு செல்வதற்குகூட நகரவாசிகள் தங்களின் இருசக்கர வாகனங்களையே பயன்படுத்துகின்றனர்.

இந்த மாதிரியானோரைக் குறி வைத்தே இ-சைக்கிள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கனம் மற்றும் காற்று மாசு ஆகியவற்றில் இருந்து விடுதலைக் கொடுக்க ஸ்கெல்லிங் லைட் இ-சைக்கிள் உதவும் என கோஜீரோ தெரிவித்திருக்கின்றது.

இந்த இ-சைக்கிளை தேவைப்பட்டால் மிதிவண்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது, சார்ஜ் தீர்ந்த பின்னர் இ-சைக்கிளை வழக்கமான மிதிவண்டியைப் போல் பெடல் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆகையால், இந்த இ-சைக்கிள் நமது உடல் நலத்தைப் பேணி காக்கவும் உதவும் என தெரிகின்றது.


Click it and Unblock the Notifications








