பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...

ஜாவா 42 பைக் ஒன்று கருப்பு நிறத்தில் என்ஜின் மற்றும் அலாய் சக்கரங்களுடன் பொது சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...

கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் அதன் ஜாவா 42 மோட்டார்சைக்கிளை அறிமுகத்திற்கு முன்னதாக தீவிர சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தி வருகிறது. இந்த வகையில் தற்போது விலை குறைவான ஜாவா பைக்கான 42-ன் ஸ்பை படங்கள் புதிய கருப்பு நிற அலாய் சக்கரங்களுடன் வெளிவந்துள்ளன.

பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...

இந்த ஸ்பை படங்கள் ரஷ்லேன் செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. வழக்கமாக ஜாவா 42 பைக்கில் வயர்-ஸ்போக் சக்கரங்கள்தான் வழங்கப்படுகின்றன. இந்த புதிய அலாய் சக்கரங்களில் ட்யுப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ட்யுப்லெஸ் டயர்கள், பஞ்சாராகும் சமயத்தில் பழுது பார்ப்பதற்கு எளிதாக விளங்குகின்றன.

பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...

இந்த மாற்றங்கள் மட்டுமின்றி வேறு சில காஸ்மெட்டிக் மாற்றங்களும் இந்த சோதனை ஜாவா 42 பைக்கில் தென்படுகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், எக்ஸாஸ்ட் குழாய், முன்& பின்பக்க சஸ்பென்ஷன் அமைப்பு, கருப்பு நிற ஹெட்லேம்ப் பெஸல் மற்றும் டர்ன் இண்டிகேட்டர் குழிகள் உள்ளிட்டவை அனைத்தும் கருப்பு நிறத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...

இவ்வளவு ஏன், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் செட்அப் கூட பாரம்பரியமான க்ரோம் செட்அப்பிற்கு மாற்றாக கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இந்த கருப்பு நிற பெயிண்ட் இளம் பச்சை நிற பைக்கிற்கு மிகவும் எடுப்பாக உள்ளது.

பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...

இவற்றுடன் க்ராப் ரெயில் ஒரே துண்டாகவும், இருக்கையில் புதிய டிசைனில் தையல்கள் வழங்கப்பட்டுள்ளதையும் இந்த ஸ்பை படங்களில் பார்க்க முடிகிறது. ஜாவா 42 பைக்கின் இருக்கை அசவுகரியமாக இருப்பதாக சில வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார் வருவதால், இருக்கையின் வடிவத்தையும் தயாரிப்பு நிறுவனம் திருத்தியமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...

இந்த சோதனை ஜாவா 42 பைக்கில் முன்பக்கத்தில் எதிர் காற்றை தடுக்கும் கண்ணாடியை பார்க்க முடிகிறது. ஆனால் நமக்கு தெரிந்தவரையில் இது கூடுதல் ஆக்ஸஸரீயாகவே வழங்கப்படும். மற்றப்படி ஜாவா 42 பைக்கின் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 293சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜினில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...

அதிகப்பட்சமாக 26.5 பிஎச்பி மற்றும் 27.05 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. தற்சமயம் ஜாவா 42 பைக்கின் விலை ரூ.1.65 லட்சத்தில் இருந்து ரூ.1.74 லட்சம் வரையில் உள்ளன.

பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...

மேற்கூறப்பட்ட அப்கிரேட்களுடன் முன் மற்றும் பின் சக்கரத்தில் டிஸ்க் ப்ரேக்குகளுடன் புதிய ஜாவா 42 பைக் அறிமுகமாகும் என தெரிகிறது. மேலும் இந்த அலாய் சக்கரங்கள் மற்றும் ட்யுப்லெஸ் டயர்கள் இந்த பைக்கை தொடர்ந்து ஜாவா கிளாசிக் மற்றும் பெராக் பைக்குகளிலும் விரைவில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
Jawa Forty Two With Black Engine, Black Alloys Spied – New Accessories
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X