இந்திய இராணுவ சின்னத்துடன், புதிய ஜாவா காக்கி & ஜாவா மிட்நைட் க்ரே மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!!

1971 போரில் இந்தியா பெற்ற வெற்றியை 50 வருடங்கள் கழித்து கொண்டாடும் விதமாக இரு புதிய நிறத்தேர்வுகள் பிரபலமான ஜாவா மோட்டார்சைக்கிளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய இராணுவ சின்னத்துடன், புதிய ஜாவா காக்கி & ஜாவா மிட்நைட் க்ரே மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!!

காக்கி மற்றும் மிட்நைட் க்ரே என்ற இந்த இரு புதிய நிறங்களில் ஜாவா மோட்டார்சைக்கிளின் விலைகள் ரூ.1.93 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த பெயிண்ட்களில் ஜாவா பைக் இந்தியாவில் நிறுவனத்தின் அனைத்து டீலர்ஷிப்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்திய இராணுவ சின்னத்துடன், புதிய ஜாவா காக்கி & ஜாவா மிட்நைட் க்ரே மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!!

பிரத்யேக பெயிண்ட்களுடன் பைக்கில் பெட்ரோல் டேங்கின் மேற்பகுதியில் இந்திய இராணுவ சின்னமும், 1971 வெற்றியின் நினைவு சின்னமும் வழங்கப்பட்டுள்ளன. இந்த லோகோக்களுக்கு மேலேயும், கீழேயும் இந்திய நாட்டு கொடிகள் 3-ஸ்ட்ரிப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய இராணுவ சின்னத்துடன், புதிய ஜாவா காக்கி & ஜாவா மிட்நைட் க்ரே மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!!

இந்திய இராணுவத்தின் சின்னத்தை பெற்றுள்ள முதல் தயாரிப்பு (இந்தியா முழுவதும் அனைத்து தரப்பட்ட மக்களும் வாங்கக்கூடிய) மோட்டார்சைக்கிள்கள் ஜாவா காக்கியும், ஜாவா மிட்நைட் க்ரே-வும் தான் என கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவ சின்னத்துடன், புதிய ஜாவா காக்கி & ஜாவா மிட்நைட் க்ரே மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!!

புதிய காக்கி மற்றும் மிட்நைட் க்ரே நிற பெயிண்ட்கள் இரண்டும் ஒளியை எதிரொலிக்காத வகையில் வழங்கப்படும். மேலும் இவை இரண்டிலும், இயந்திர பாகங்கள் வழக்கம்போல் கருப்பு நிறத்தில் தான் வழங்கப்படவுள்ளன.

இந்திய இராணுவ சின்னத்துடன், புதிய ஜாவா காக்கி & ஜாவா மிட்நைட் க்ரே மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!!

சக்கரத்தின் ஸ்போக்குகள் சில்வர் நிறத்திலேயே தொடரப்பட்டாலும், ரிம்கள் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட உள்ளன. இவற்றுடன் இருக்கை அமைப்புகள் ஓட்டுனர் சவுகரியத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய இராணுவ சின்னத்துடன், புதிய ஜாவா காக்கி & ஜாவா மிட்நைட் க்ரே மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!!

அதேபோல் சஸ்பென்ஷன் & ஃப்ரேம் அமைப்பும் திருத்தியமைக்கப்பட்டுள்ளதால் பைக்கின் க்ரவுண்ட் க்ளியரென்ஸும் மேம்பட்டுள்ளது. இதனால் நிச்சயம் ஹேண்ட்லிங் மேம்பட்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.

இந்திய இராணுவ சின்னத்துடன், புதிய ஜாவா காக்கி & ஜாவா மிட்நைட் க்ரே மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!!

ஜாவா மோட்டார்சைக்கிளின் ட்யுல் சேனல் ஏபிஎஸ் வெர்சனில் மட்டுமே வழங்கப்பட உள்ள இந்த புதிய பெயிண்ட் தேர்வுகள் பைக்கின் செயல்படுதிறனுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். ஜாவா மோட்டார்சைக்கிளில் 293சிசி லிக்யுடு-கூல்டு & ஃப்யுல் இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்திய இராணுவ சின்னத்துடன், புதிய ஜாவா காக்கி & ஜாவா மிட்நைட் க்ரே மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்!!

அதிகப்பட்சமாக 27.33 பிஎஸ் மற்றும் 27.02 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இதனுடன் இந்திய இராணுவத்தின் "ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்" கொண்டாட்டத்திலும் ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கலந்து கொள்ளவுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
Jawa Motorcycles launches Khakhi, Midnight Grey colours to mark 1971 war victory.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X