எந்த மாதிரியான பைக்கா இருக்கும் இது? இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்!!

புதுமையான தோற்றத்தில் பைக் ஒன்று முழு மறைப்புடன் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எந்த மாதிரியான பைக்கா இருக்கும் இது? இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்!!

மஹிந்திரா க்ரூப்பின் ஒரு அங்கமாக விளங்கும் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் ஜாவா பைக்குகளை தொடர்ந்து பிஎஸ்ஏ மற்றும் யெஸ்டி பிராண்ட்களுக்கு மறுவாழ்வு அளிக்க தீவிரமாக பணியாற்றி வருவது உங்கள் எல்லாருக்கும் நன்றாகவே தெரியும்.

எந்த மாதிரியான பைக்கா இருக்கும் இது? இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்!!

மஹிந்திராவின் ஒத்துழைப்பால் இந்த பணிகள் சிறப்பாகவே நடைபெற்றுவரும் நிலையில் ரெட்ரோ-கிளாசிக் ஸ்க்ரம்ப்ளர் பைக் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் புனே- நாஷிக் சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

எந்த மாதிரியான பைக்கா இருக்கும் இது? இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்!!

ரஷ்லேன் செய்திதளத்தின் மூலம் கிடைத்துள்ள, இணையத்தில் வைரலாகி வரும் இது தொடர்பான ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது இந்த சோதனை பைக் மாதிரி கிளாசிக் லெஜண்ட்ஸ் பிராண்டின் கீழ் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் யெஸ்டி மோட்டார்சைக்கிளாக இருக்கலாம்.

எந்த மாதிரியான பைக்கா இருக்கும் இது? இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்!!

இதற்கு சில வலுவான ஆதாரங்கள் உள்ளன. அதேநேரம் இந்த பைக் தற்சமயம் தயாரிப்பு பணிகளில் உள்ள ஜாவா ஸ்க்ரம்ப்ளராகவும் இருக்க வாய்ப்புண்டு. இந்த சோதனை பைக்கில், என்ஜின் அமைப்பில் க்ரான்க்‌ஷாஃப்ட் பொருத்தப்படும் க்ரான்க்கேஸ் 1970களில் இருந்து 90 வரையில் விற்பனையில் இருந்த யெஸ்டி ரோட்கிங் பைக்கை பெரிதும் ஒத்து காணப்படுகிறது.

எந்த மாதிரியான பைக்கா இருக்கும் இது? இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்!!

இதுவே இந்த பைக் புதிய யெஸ்டி பைக்காக இருக்கலாம் என நம்மை சந்தேகிக்க வைக்கிறது. ஏனெனில் கிளாசிக் ஜெண்ட்ஸ் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களை மஹிந்திராவின் மோஜோ ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைத்து வருகிறது.

எந்த மாதிரியான பைக்கா இருக்கும் இது? இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்!!

இந்த ப்ளாட்ஃபாரம், க்ரான்க்கேஸ் உள்ளிட்டவற்றை பழமையான டிசைனில் வடிவமைக்க உதவியாக இருக்கிறது. இந்த சோதனை பைக் இன்னமும் தயாரிப்பு பணிகள் நிறைவு செய்யாத நிலையில் தான் உள்ளது. ஸ்க்ரம்ப்ளர் பாடி ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பைக்கின் பின்புற பகுதி மிகவும் நறுக்கப்பட்டுள்ளது.

எந்த மாதிரியான பைக்கா இருக்கும் இது? இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்!!

இறுதியாக அறிமுகமாகும் பைக்கில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட வாய்ப்பிருந்தாலும், இந்த சோதனை பைக்கின் இறுதி முனையில் டயர்கள் ஓட்டுனர் இருக்கை அமைப்பு உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த மாதிரியான பைக்கா இருக்கும் இது? இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்!!

இந்த புதிய யெஸ்டி பைக்கில் எல்இடி டெயில்லைட், டிஜிட்டல் கன்சோல் மற்றும் ட்யுல்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படலாம். எக்ஸாஸ்ட் குழாய் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

எந்த மாதிரியான பைக்கா இருக்கும் இது? இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்!!

கிளாசிக் லெஜண்ட்ஸ் பிராண்டில் வெளிவரவுள்ள இந்த புதிய யெஸ்டி மோட்டார்சைக்கிளை 300சிசி-இல் எதிர்பார்க்கிறோம். இதன் என்ஜின் அதிகப்பட்சமாக 27 பிஎச்பி-இல் இருந்து 30 பிஎச்பி வரையில் வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படலாம்.

Most Read Articles

மேலும்... #யெஸ்டி #yezdi
English summary
New Yezdi Or Jawa Scrambler Test Mule Spied, RE Hunter, CB350RS Rival.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X