குஜராத்தில் இருந்து குவியும் முன்பதிவுகள்!! ஜாய் இ-பைக்குகளின் விற்பனை முதன்முறையாக 2,000 கடந்தது!

ஜாய் (Joy) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் & மோட்டார்சைக்கிள்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

குஜராத்தில் இருந்து குவியும் முன்பதிவுகள்!! ஜாய் இ-பைக்குகளின் விற்பனை முதன்முறையாக 2,000 கடந்தது!

இந்திய சந்தையில் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஜாய் இ-பைக் (Joy e-Bike) கடந்த ஆகஸ்ட்டில் மொத்த விற்பனையில் 2 ஆயிரத்தை முதன்முறையாக கடந்துள்ளது.

குஜராத்தில் இருந்து குவியும் முன்பதிவுகள்!! ஜாய் இ-பைக்குகளின் விற்பனை முதன்முறையாக 2,000 கடந்தது!

அதாவது இதற்கு முன் எந்தவொரு மாதத்திலும் இவ்வளவு எண்ணிக்கையில் ஜாய் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையானது இல்லை. கடந்த மாதத்தில் 2,001 யூனிட் வாகனங்களை விற்பனை செய்துள்ளதன் மூலமாக வருடம்-வருடம் ஒப்பீடுகையில் ஜாய் இ-பைக்கின் விற்பனை சுமார் 435% வளர்ச்சி கண்டுள்ளது.

குஜராத்தில் இருந்து குவியும் முன்பதிவுகள்!! ஜாய் இ-பைக்குகளின் விற்பனை முதன்முறையாக 2,000 கடந்தது!

ஏனெனில் 2020 ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 374 யூனிட் வாகனங்களையே இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதேபோல் 2021 ஜூலை மாதத்துடனான ஒப்பீடுகையிலும், கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை 112% உயர்வானது ஆகும். கடந்த ஜூலை மாதத்தில் 945 ஜாய் இ-பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன.

குஜராத்தில் இருந்து குவியும் முன்பதிவுகள்!! ஜாய் இ-பைக்குகளின் விற்பனை முதன்முறையாக 2,000 கடந்தது!

இதில் இருந்து ஜாய் இ-பைக் பிராண்டில் இருந்து ஓட்டுனர் உதவி வசதிகள் மற்றும் சவுகரிய அம்சங்களுடன் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களின் தேர்வாக மாறி வருவது தெரிய வருகிறது.

குஜராத்தில் இருந்து குவியும் முன்பதிவுகள்!! ஜாய் இ-பைக்குகளின் விற்பனை முதன்முறையாக 2,000 கடந்தது!

இந்தியாவில் ஜாய் இ-பைக் பிராண்டை வார்ட்விஸார்ட் கண்டுப்பிடிப்புகள் & மொபைலிட்டி லிமிடெட் (WardWizard Innovations and Mobility Ltd) என்ற நிறுவனம் சொந்தமாக கொண்டுள்ளது. இந்த வார்ட்விஸார்ட் நிறுவனத்திற்கு ஜாய் இ-பைக்குகளை நாடு முழுவதும் கொண்டுசென்று, அவற்றிற்கான வாடிக்கையாளர்களின் அடித்தளத்தை பெரிதாக்குவது மட்டுமே தற்போதைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது.

குஜராத்தில் இருந்து குவியும் முன்பதிவுகள்!! ஜாய் இ-பைக்குகளின் விற்பனை முதன்முறையாக 2,000 கடந்தது!

இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு குறிப்பாக குஜராத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் தான் ஜாய் எலக்ட்ரிக் 2 வீலர்ஸிற்கான முன்பதிவுகளும் குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வடமேற்கு இந்திய மாநிலங்களில் அதிகமாக கிடைத்துள்ளன.

குஜராத்தில் இருந்து குவியும் முன்பதிவுகள்!! ஜாய் இ-பைக்குகளின் விற்பனை முதன்முறையாக 2,000 கடந்தது!

இதனாலேயே இந்த குறிப்பிட்ட மாநிலங்களில் டீலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜாய் இ-பைக் பிராண்டின் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக வரும் மாதங்களில் இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகன நிறுவனத்தின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் இருந்து குவியும் முன்பதிவுகள்!! ஜாய் இ-பைக்குகளின் விற்பனை முதன்முறையாக 2,000 கடந்தது!

தற்போது முதன்முறையாக அடைந்துள்ள 2,001 யூனிட்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக ஜாய் இ-பைக் பிராண்ட் கடுமையாக மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளின் விளைவாகும். ஏற்கனவே கூறியதுதான், இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன பயன்பாடு ஒரு நிலையான வடிவத்தை பெற்று வருகிறது.

குஜராத்தில் இருந்து குவியும் முன்பதிவுகள்!! ஜாய் இ-பைக்குகளின் விற்பனை முதன்முறையாக 2,000 கடந்தது!

பெட்ரோலின் விலை ஒருபக்கம் அதிகரித்து வருவதால், எலக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. புதிய சாதனையாக 2,001 யூனிட் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்தது குறித்து வார்ட்விஸார்ட் கண்டுப்பிடிப்புகள் மற்றும் மொபைலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யடின் குப்தே கருத்து தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் இருந்து குவியும் முன்பதிவுகள்!! ஜாய் இ-பைக்குகளின் விற்பனை முதன்முறையாக 2,000 கடந்தது!

அவர் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் எங்களது முதன்மையான கவனம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருப்பை வலுப்படுத்துவதே ஆகும். எங்கள் டீலர்ஷிப்களில் குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக முன்பதிவு ஆர்டர்களை பெற்றுள்ளோம்.

குஜராத்தில் இருந்து குவியும் முன்பதிவுகள்!! ஜாய் இ-பைக்குகளின் விற்பனை முதன்முறையாக 2,000 கடந்தது!

எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பமான தேர்வாக மாறி வருவதால், வரவிருக்கும் பண்டிகை காலங்களில் மிக உயர்ந்த வளர்ச்சியை விற்பனையில் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார். இந்திய சந்தையில் தற்சமயம் 5 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஜாய் இ-பைக் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.

குஜராத்தில் இருந்து குவியும் முன்பதிவுகள்!! ஜாய் இ-பைக்குகளின் விற்பனை முதன்முறையாக 2,000 கடந்தது!

குஜராத்தில் ஆழமாக கால்பதிக்க பணியாற்றிவரும் ஜாய் இ-பைக் பிராண்டின் 20 புதிய டீலர்ஷிப் மையங்கள் கடந்த சில வாரங்களாக குஜராத் மாநிலத்தில் திறக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் குஜராத்தில் ஜாய் இ-பைக்கின் டீலர்ஷிப்களின் 98ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமிலும் இரு டீலர்ஷிப் மையங்களை கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வார்ட்விஸார்ட் நிறுவனம் திறந்துள்ளது.

குஜராத்தில் இருந்து குவியும் முன்பதிவுகள்!! ஜாய் இ-பைக்குகளின் விற்பனை முதன்முறையாக 2,000 கடந்தது!

இவ்வாறு பல எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் குஜராத்தை நாடி செல்வதற்கு காரணம், அம்மாநில அரசாங்கம் எலக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்கப்படுத்த மானியங்களை அதிகமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறையும்.

Most Read Articles

English summary
Joy e-Bike Sales Aug 2021, Records 435% Growth.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X