2022 கவாஸாகி கேஎல்எக்ஸ்450ஆர் இந்தியாவில் ரூ.8.99 லட்சத்தில் அறிமுகம்!! இந்த விலையில் ஒரு காரையே வாங்கலாமே!

ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற 2022 கவாஸாகி கேஎல்எக்ஸ்450ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ரூ.8.99 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பொது சாலைகளில் இயக்க அனுமதிக்கப்படாத இந்த கவாஸாகி பைக்கை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 கவாஸாகி கேஎல்எக்ஸ்450ஆர் இந்தியாவில் ரூ.8.99 லட்சத்தில் அறிமுகம்!! இந்த விலையில் ஒரு காரையே வாங்கலாமே!

ஓர் காரணத்துடன் தயாரிக்கப்படும் ஆஃப்-ரோடு பந்தய மோட்டார்சைக்கிளான கவாஸாகி கேஎல்எக்ஸ்450ஆர்-இன் 2022 மாடலின் விலை முந்தைய தலைமுறையை காட்டிலும் ரூ.50,000 அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இதன் முந்தைய கேஎல்எக்ஸ்450ஆர் பைக் ரூ.8.49 லட்சம் என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

2022 கவாஸாகி கேஎல்எக்ஸ்450ஆர் இந்தியாவில் ரூ.8.99 லட்சத்தில் அறிமுகம்!! இந்த விலையில் ஒரு காரையே வாங்கலாமே!

2022 கவாஸாகி கேஎல்எக்ஸ்450ஆர் பைக்கிற்கு புதிய லைம் க்ரீன் பச்சை நிறத்தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய பெயிண்ட் தேர்வில் புதிய டிகால்களின் தொகுப்பும் அடங்குகிறது. மேலும் குறைந்த ஆர்பிஎம்-இல் அதிக டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆஃப்-ரோடு பைக்கின் என்ஜின் அமைப்பையும் கவாஸாகி நிறுவனம் திருத்தியமைத்துள்ளது.

2022 கவாஸாகி கேஎல்எக்ஸ்450ஆர் இந்தியாவில் ரூ.8.99 லட்சத்தில் அறிமுகம்!! இந்த விலையில் ஒரு காரையே வாங்கலாமே!

இதன் மூலமாக, சவாலான பாதைகளில் இருந்து எளிதாக விடுப்பட்டு வர முடியும் என்கிறது இந்த ஜப்பானிய மோட்டார்சைக்கிள் நிறுவனம். அதேபோல் தவறான ரைடிங்கையும் சமாளிக்க மற்றும் கடினமான நிலப்பரப்பை கையாளும் விதமாக பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்பும் அதற்கேற்ப திருத்தப்பட்டுள்ளது.

2022 கவாஸாகி கேஎல்எக்ஸ்450ஆர் இந்தியாவில் ரூ.8.99 லட்சத்தில் அறிமுகம்!! இந்த விலையில் ஒரு காரையே வாங்கலாமே!

இயக்க ஆற்றலை வழங்க 2022 கேஎல்எக்ஸ்450ஆர் பைக்கில் 449சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் டிரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அமைப்பை எடை குறைவான அலுமினிய சட்டகம் ஒன்று தொட்டி போன்று தாங்கி பிடித்துள்ளது.

2022 கவாஸாகி கேஎல்எக்ஸ்450ஆர் இந்தியாவில் ரூ.8.99 லட்சத்தில் அறிமுகம்!! இந்த விலையில் ஒரு காரையே வாங்கலாமே!

இந்த சட்டகமானது, பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்புகளுடன் இணைந்து செயல்படக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 450சிசி ஆஃப்-ரோடு பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்புகளாக முன்பக்கத்தில் நீண்ட டிராவல் உடன் தலைக்கீழான ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

2022 கவாஸாகி கேஎல்எக்ஸ்450ஆர் இந்தியாவில் ரூ.8.99 லட்சத்தில் அறிமுகம்!! இந்த விலையில் ஒரு காரையே வாங்கலாமே!

பிரேக்கிங் பணியினை கவனிக்க இரு சக்கரங்களிலும் பெடல் வகையிலான டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் அலுமினியம் ஹேண்டில்பார் மற்றும் சிறிய அளவிலான டிஜிட்டல் கன்சோல் பகுதியும் இந்த 2022 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், 2022 கவாஸாகி கேஎல்எக்ஸ்450ஆர் கிட்டத்தட்ட அதன் முந்தைய தலைமுறையையே பெரிதும் ஒத்து காணப்படுகிறது.

2022 கவாஸாகி கேஎல்எக்ஸ்450ஆர் இந்தியாவில் ரூ.8.99 லட்சத்தில் அறிமுகம்!! இந்த விலையில் ஒரு காரையே வாங்கலாமே!

வழக்கம்போல் இந்த கவாஸாகி ஆஃப்-ரோடு பைக் சிபியூ முறையில், அதாவது முழுவதுமாக தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த பைக்கின் டெலிவிரி பணிகள் அடுத்த 2022 ஜனவரி மாதத்தில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கூறியதுதான், இந்த கவாஸாகி பைக்கை பொது சாலைகளில் இயக்க அனுமதி கிடையாது.

2022 கவாஸாகி கேஎல்எக்ஸ்450ஆர் இந்தியாவில் ரூ.8.99 லட்சத்தில் அறிமுகம்!! இந்த விலையில் ஒரு காரையே வாங்கலாமே!

ஆஃப்-ரோடு பந்தய களங்களிலோ அல்லது தனிப் பயன்பாட்டு இடங்களிலோ தான் இத்தகைய ஆஃப்-ரோடு பைக்குகளை இயக்கி பார்க்க முடியும். கேஎல்எக்ஸ்450ஆர் மட்டுமில்லாமல், இதேபோன்றதான மேலும் சில பக்கா ஆஃப்-ரோடு பைக்குகளையும் கவாஸாகி இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த வகையில் முன்னதாக, கடந்த செப்டம்பரில் கேஎக்ஸ்250 & கேஎக்ஸ்450 என்ற ஆஃப்-ரோடு பைக்குகளை கவாஸாகி அறிமுகம் செய்திருந்தது.

2022 கவாஸாகி கேஎல்எக்ஸ்450ஆர் இந்தியாவில் ரூ.8.99 லட்சத்தில் அறிமுகம்!! இந்த விலையில் ஒரு காரையே வாங்கலாமே!

அட்வென்ச்சர் ட்வின் என கவாஸாகி நிறுவனத்தால் அழைக்கப்படும் இதில் கேஎக்ஸ்250 பைக்கின் விலை ரூ.7.99 லட்சமாகவும், கேஎக்ஸ்450 மாடலின் விலை ரூ.8.59 லட்சமாகவும் உள்ளன. ஹார்ட்கோர் ஆஃப்-ரோடிங் மற்றும் சகதி பைக்குகளான இவை 250சிசி & 450சிசி என பெரிய வித்தியாசங்களுடன் என்ஜின் அமைப்பை கொண்டிருந்தாலும், தோற்றத்தில் பெரியதாக எந்த வேறுப்பாடும் இல்லை.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
2022 Kawasaki KLX450R launched in India at Rs 8.99 lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X